டி20 உலகக்கோப்பை: பேட்டிங், பவுலிங், பீல்டிங் சாதனையாளர் பட்டியலில் இந்திய வீரர்கள்

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவில் நியூயார்க், ப்ளோரிடா மைதானங்கள், உலகக் கோப்பை தொடங்க சில நாட்களுக்கு முன்புதான் வடிவமைக்கப்பட்டன. அதனால் இந்த விக்கெட்டில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் அணிகள் அதிகபட்சமாக 150 ரன்களைக் கூட தாண்டவில்லை.

இப்போது சூப்பர்-8 சுற்றுகள் தொடங்க உள்ளன. இந்த ஆட்டங்கள் அனைத்தும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் வகையில் அணிகள் அதிக ஸ்கோர் செய்யக் கூடிய மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள நாடுகளில் இருக்கும் பேட்டிங்கிற்கு சாதகமான விக்கெட்டுகளில் நடத்தப்பட உள்ளன.

இதுவரை லீக் சுற்றுகள் வரை நடந்து முடிந்துவிட்ட நிலையில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பல்வேறு அணிகளின் வீரர்களும், பல சாதனைகளைப் படைத்துள்ளன. அது குறித்த சுருக்கமான பார்வை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிகமாக ஸ்கோர் செய்த அணிகள்

2024-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்பட்ட லீக் ஆட்டங்களில் மட்டுமே 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கிங்ஸ்டவுனில் கடந்த 17-ஆம் தேதி நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் சேர்த்த 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் அதிகபட்ச ஸ்கோராகும்.

இரண்டாவதாக, கடந்த 8-ஆம் தேதி பிரிட்ஜ்டவுனில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்ததும், மூன்றாவதாக கடந்த 16-ஆம் தேதி கிராஸ்ஐசெட்டில் நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 201 ரன்கள் குவித்தது அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

அதிகபட்ச ரன்களில் வெற்றி

  • பிராவிடன்ஸ் நகரில் கடந்த 8-ஆம் தேதி நடந்த உகாண்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
  • பிராவிடன்ஸ் நகரில் கடந்த 3-ஆம் தேதி உகாண்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 125 ரன்களில் வென்றது இரண்டாவது அதிகபட்ச ரன்கள் வெற்றி.
  • கிராஸ்ஐலெட்டில் கடந்த 17-ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வென்றது மூன்றாவது அதிகபட்ச ரன்கள் வெற்றியாகும்.
டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங் சாதனைகள்

அதிகபட்ச ரன்கள்

  • ரஹ்மத்துல்லா குர்பாஸ் - ஆஃப்கானிஸ்தான் - 4 இன்னிங்ஸ், 167 ரன்கள், அதிகபட்சம் 80
  • நிகோலஸ் பூரன் - மேற்கிந்தியத் தீவுகள் - 4 இன்னிங்ஸ், 164 ரன்கள், அதிகபட்சம் 98
  • மார்கஸ் ஸ்டாய்னிஸ் - ஆஸ்திரேலியா - 4 இன்னிங்ஸ், 156 ரன்கள், அதிகபட்சம் 67
  • இப்ராஹிம் ஜாத்ரன் - ஆஃப்கானிஸ்தான் - 4 இன்னிங்ஸ், 152 ரன்கள், அதிகபட்சம் 70
  • டிராவிஸ் ஹெட் - ஆஸ்திரேலியா - 4 இன்னிங்ஸ், 148 ரன்கள், அதிகபட்சம் 68

அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள்

  • நிகோலஸ் பூரன் - மேற்கிந்தியத் தீவுகள் - ஆப்கனுக்கு எதிராக 53 பந்துகளில் 98 ரன்கள், 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்
  • ஆரோன் ஜோன்ஸ் - அமெரிக்கா - கனடாவுக்கு எதிராக 40 பந்துகளில் 94 ரன்கள், 10 சிக்ஸர்கள், 4 பவுண்டரி
  • ரஹ்மத்துல்லா குர்பாஸ் - ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்துக்கு எதிராக 56 பந்துகளில் 80 ரன்கள் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்
  • ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஆஃப்கானிஸ்தான் - உகாண்டாவுக்கு எதிராக 45 பந்துகளில் 76 ரன்கள் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்
  • ஷெர்பானே ரூதர்போர்ட் - மேற்கிந்தியத் தீவுகள் - நியூசிலாந்துக்கு எதிராக 39 பந்துகளில் 68 ரன்கள், 6சிக்ஸர்கள், 2பவுண்டரிகள்
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிக ஸ்ட்ரைக் ரேட் வரிசையில் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா முதலில் உள்ளார்.

அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்

  • நசீம் ஷா - பாகிஸ்தான் - 3 போட்டி, 10 ரன்கள், 250 ஸ்ட்ரைக் ரேட்
  • ஹசரங்கா - இலங்கை - 3 போட்டி, 20 ரன்கள், 222 ஸ்ட்ரைக் ரேட்
  • மொயின் அலி - இங்கிலாந்து - 4 போட்டி, 2 இன்னிங்ஸ், 41 ரன்கள், 195 ஸ்ட்ரைக் ரேட்
  • ஸ்டாய்னிஷ் - ஆஸ்திரேலியா - 4 போட்டி, 3 இன்னிங்ஸ், 156 ரன்கள், 190 ஸ்ட்ரைக் ரேட்
  • ஹேரி ப்ரூக் - இங்கிலாந்து -2 போட்டி, 67 ரன்கள், 186 ஸ்ட்ரைக் ரேட்

அதிகபட்ச அரைசதங்கள்

  • ஸ்டாய்னிஷ் - ஆஸ்திரேலியா - 2 அரைசதங்கள், 156 ரன்கள், அதிகபட்சம் 67, சராசரி 78
  • மெக்முலன் ஸ்காட்லாந்து - 2 அரைசதங்கள், 140 ரன்கள், அதிகபட்சம் 61, சராசரி 70
  • குர்பாஸ் - ஆஃப்கானிஸ்தான் - 2 அரைசதங்கள், 167 ரன்கள், அதிகபட்சம் 80, சராசரி 41
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

அதிகபட்ச சிக்ஸர்கள்

  • ஆரோன் ஜோன்ஸ் -அமெரிக்கா - 3 போட்டிகள், 141 ரன்கள், 13 சிக்ஸர்கள்
  • நிகோலஸ் பூரன் - மேற்கிந்தியத் தீவுகள் - 4 போட்டிகள், 164 ரன்கள், 13 சிக்ஸர்கள்
  • ஸ்டாய்னிஷ் - ஆஸ்திரேலியா - 3 இன்னிங்ஸ் 156 ரன்கள், 10 சிக்ஸர்கள்

அதிகபட்ச விக்கெட்டுகள்

  • பரூக்கி ஆஃப்கானிஸ்தான் - 4 போட்டி, 12 விக்கெட்டுகள், 5.58 எக்னாமி
  • டிரென்ட் போல்ட் - நியூசிலாந்து - 4 போட்டி, 9 விக்கெட்டுகள், 3.68 எக்னாமி
  • ஹூசைன் - மேற்கிந்தியத் தீவுகள் - 4 போட்டி, 9 விக்கெட்டுகள், 4.13 எக்னாமி
  • நோர்க்கியா - தென் ஆப்பிரிக்கா - 4 போட்டி, 9 விக்கெட்டுகள், 4.37 எக்னாமி
  • தன்சிம் சகிப்- வங்கதேசம் - 4 போட்டி, 9 விக்கெட்டுகள், 4.80 எக்னாமி
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறந்த பந்துவீச்சு வரிசையில் ஆப்கன் வீரர் பரூக்கி உள்ளார்.

சிறந்த பந்துவீச்சு

  • பரூக்கி - ஆஃப்கானிஸ்தான் - உகாண்டாவுக்கு எதிரா 4 ஓவர்கள்வீசி 9 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள்
  • ஹூசைன் - மேற்கிந்தியத் தீவுகள் - உகாண்டாவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள்
  • நோர்க்கியா - தென் ஆப்பிரிக்கா - இலங்கைக்கு எதிராக 4 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள்
  • அர்ஷ்தீப் சிங் - இந்தியா - அமெரிக்காவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள்
  • பார்ட்மேன் - தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்துக்கு எதிராக 4 ஓவர்களில் 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள்

அதிகபட்ச டிஸ்மிசல்ஸ்

  • ரிஷப் பந்த் - இந்தியா - 3 போட்டிகள், 7 டிஸ்மிசல்கள்
  • கான்வே - நியூசிலாந்து - 4 போட்டிகள், 6 டிஸ்மிசல்கள்
  • லிட்டன் தாஸ் - வங்கதேசம் - 4 போட்டிகள், 6 டிஸ்மிசல்கள்
  • பூரன் - மேற்கிந்தியத் தீவுகள் - 4 போட்டிகள், 5 டிஸ்மிசல்கள்
  • குர்பாஸ் - ஆஃப்கானிஸ்தான் - 4 போட்டிகள், 5 டிஸ்மிசல்கள்
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

அதிகபட்ச கேட்சுகள்

  • மார்க்ரம் - தென் ஆப்பிரிக்கா - 4 போட்டிகள், 6 கேட்சுகள்
  • மேக்ஸ்வெல் - ஆஸ்திரேலியா - 4 போட்டிகள், 6 கேட்சுகள்
  • வேன் பீக் - நெதர்லாந்து - 4 போட்டிகள், 5 கேட்சுகள்
  • ஸ்டார்க் - ஆஸ்திரேலியா - 4 போட்டிகள், 4 கேட்சுகள்

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்

  • குர்பாஸ், ஜாத்ரன் - ஆஃப்கானிஸ்தான் - உகாண்டாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள்
  • கோஸ், ஜோன்ஸ் - அமெரிக்கா - கனடாவுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்கு 131 ரன்கள்
  • குர்பாஸ், ஜாத்ரன் - ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள்
  • வார்னர், ஸ்டாய்னிஷ் - ஆஸ்திரேலியா - ஓமனுக்கு எதிராக 4வது விக்கெட்டுக்கு 102 ரன்கள்
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

சூப்பர்-8 சுற்று போட்டி தேதிகள், மோதும் அணிகள்

ஜூன் 19

தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா (இடம்: நார்த்சவுண்ட், குரூப்-2)

ஜூன்-20

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் (இடம்: கிராஸ் ஐலெட், குரூப்2, காலை 6 மணி)

இந்தியா - ஆப்கானிஸ்தான் (இடம்: பிரிட்ஜ்டவுன், குரூப்-1, இரவு 8மணி)

ஜுன்-21

ஆஸ்திரேலியா - வங்கதேசம் (இடம்: நார்த்சவுன்ட், குரூப் 1, காலை 6 மணி)

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா (இடம்: பிரிட்ஜ்டவுன், குரூப்-2, இரவு 8 மணி)

ஜூன் -22

மேற்கிந்தியத் தீவுகள் - அமெரிக்கா (இடம்: பிரிட்ஜ்டவுன், குரூப்-2, காலை 6மணி)

இந்தியா - வங்கதேசம் (இடம்: நார்த்சவுண்ட், குரூப்-1, இரவு 8 மணி)

ஜூன்-23

ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (இடம்: கிங்ஸ்டவுன், குரூப்-1 காலை 6 மணி)

இங்கிலாந்து - அமெரிக்கா (இடம்: பிரிட்ஜ்டவுன், குரூப்-2 இரவு 8 மணி)

ஜூன் -24

மேற்கிந்தியத் தீவுகள் - தென் ஆப்பிரிக்கா (இடம்: நார்த்சவுண்ட், குரூப்-2 காலை 6 மணி)

ஆஸ்திரேலியா - இந்தியா (இடம்: கிராஸ் ஐலெட், குரூப்-1, இரவு 8 மணி)

ஜூன்-25

ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் (இடம்: கிங்ஸ்டவுன், குரூப்-1 காலை 6 மணி)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)