கனெக்ட் - சினிமா விமர்சனம்

கனெக்ட் பட விமர்சனம்

பட மூலாதாரம், @VigneshShivN

நடிகர்கள்: நயன்தாரா,வினய் ராய், ஹனியா நஃபிஸ், சத்யராஜ், அனுபம் கேர்; இசை: பிருத்வி சந்திரசேகர்; ஒளிப்பதிவு : மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி; இயக்கம்: அஸ்வின் சரவணன்

மாயா, கேம் ஓவர் ஆகிய திகில் திரைப்படங்களின் மூலம் ஏற்கெனவே கவனத்தை ஈர்த்த அஸ்வின் சரவணனின் அடுத்த படம் இது. 99 நிமிடங்களே ஓடக்கூடிய இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதை கனெக்ட் படம் பூர்த்தி செய்திருக்கிறதா?

இந்தப் படத்தின் கதை இதுதான்: ஜோசப்பும் (வினய்) சூசனும் (நயன்தாரா) கணவன், மனைவி. இவர்களுடைய பதின்பருவ மகள் ஆன்னா (ஹனியா நஃபீஸ்). சூசனின் தந்தை ஆர்தர் (சத்யராஜ்). ஜோசப் மருத்துவராக இருக்கிறார்.

இந்த நிலையில், கோவிட் தொற்று பரவ நாடு முழுவதும் முழு அடைப்பு பிரகடனப்படுத்தப்படுகிறது. மருத்துவமனையிலேயே தங்கி கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஜோசப், கோவிட் தாக்கி இறந்து விடுகிறார்.

தந்தையின் பிரிவைத் தாங்க முடியாத மகள் ஆன்னா, ஓஜா பலகையின் உதவியுடன் தந்தையின் ஆவியோடு பேச முயற்சிக்கிறார். ஆனால், அதில் ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. அது என்ன விபரீதம், அதிலிருந்து சூசனும் ஆன்னாவும் மீண்டார்களா என்பது மீதிக் கதை.

கனெக்ட் சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், @VigneshShivN

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் பேய்களின் காலம் முடிந்துவிட்டதைப் போலத் தெரிகிறது. ஆகவே, திகிலூட்டும் பேய்களோடு களமிறங்க ஆரம்பித்துள்ளனர் தமிழ் இயக்குநர்கள்.

"இந்தப் படத்தைப் பொறுத்தவரை, காட்சிகளுக்கு காட்சி பார்வையாளர்களை அச்சுறுத்தும் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற இயக்குநரின் எண்ணம் புரிந்தாலும் மொத்தப் படமுமே வெறும் ‘திகில்’ அனுபவத்துடன் சுருங்கி நிற்பது பெரும் ஏமாற்றம் என்கிறது," இந்து தமிழ் திசையின் இணையதளம்.

"விறுவிறு படம், ஆனால், திகட்டுகிறது"

"பிரதான கதைக்களமாக ஒரு வீடு, ஐந்து - ஆறு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து ஒட்டுமொத்த படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின். தொடக்கத்தில் விறுவிறுப்புடன் நகரும் படம், ஒரு கட்டத்திற்குப் பிறகு கதைக்கான தேவையை எழுப்புகிறது. ஆனால், அந்த தேவைக்கான தீனி திரைக்கதையில் இல்லாமல் வெறுமனே ஹாரராக மட்டுமே காட்சிகள் நகர்ந்துகொண்டிருப்பது ஒரு இடத்திற்கு பிறகு திகட்டிவிடுகிறது.

காட்சிகளுக்கு காட்சி பார்வையாளர்களை அச்சுறுத்தும் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற இயக்குநரின் எண்ணம் புரிகிறது. இருப்பினும் மொத்தப் படமுமே வெறும் ‘திகில்’ அனுபவத்துடன் சுருங்கி நிற்பது பெரும் ஏமாற்றம்.

அதிலும் குறிப்பாக படம் இறுதி கட்டத்தை நோக்கி நகரும்போது, அடுத்தடுத்த காட்சிகளையும், படத்தின் முடிவையும் நம்மால் எளிதாக ஊகிக்க முடிவதால் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் தணிந்துவிடுகிறது.

திகில் உணர்வைத்தாண்டி மற்ற எந்த உணர்ச்சிகளுக்கும் வேலைகொடுக்காத திரைக்கதையில் சில இடங்களில் வரும் சென்டிமென்ட் ‘கனெக்ட்’ ஆகவில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

"ஆவி பறக்கும் கதை"

பேய் படங்களில் வண்டியில் ஏற்றப்படும் கிறிஸ்துவர்கள், தேவாலயம், ஃபாதர் என்ற டெம்ப்ளேட் இந்தப் படத்தில் மிஸ் ஆகாமல் இடம்பெற்றிருப்பதுடன், இறுதியில் மரம் வளர்ப்போம் என்ற மெசேஜ் காரணமில்லாமல் சொல்லப்படுவதுடன் நயன்தாராவின் முந்தைய படமான ‘ஓ2’-வை நினைவுப்படுத்துகிறது" என விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை.

இதுபோன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வேறு சில ஊடகங்கள் படம் சிறப்பாக இருப்பதாகவே கூறுகின்றன. குறிப்பாக இந்துஸ்தான் டைம்ஸின் தமிழ் இணையதளம், கனெக்ட் திரைப்படம் 'ஆவி பறக்கும் கதை' என பாராட்டியுள்ளது.

"ஒரு கிறிஸ்தவ குடும்பம், அவர்கள் சார்ந்த முறையில் ஒரு பேயை ஓட்டும் முறை, இதுவரை பார்த்திராத வித்தியாசமாகவே இருந்தது. குடும்பத்தை பிரிந்து தவிக்கும் வினய், குடும்பத் தலைவனை பிரிந்து நோகும் மனைவி, மகள். விதவையான மகளின் நிலையை எண்ணி வருந்தும் தந்தை என குடும்ப உறவுகளின் உணர்வுகளுக்குள், ஆவி பறக்கும் கதையாக கனெக்ட் ஆகிறது கனெக்ட்.

பரபரப்பாக நகரும் அதே நேரத்தில் கொஞ்சமும் திகில் மாறாமல், சஸ்பென்ஸோடு நகர்த்தப்படும் திரைக்கதைக்கு இயக்குநர் அஸ்வின் சரவணனை பாராட்டலாம் மொத்தத்தில் கனெக்ட், எல்லாவிதத்திலும் கனெக்ட் ஆகிறது. நம்பி போகலாம்" என்கிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

பேய் பிடித்தவர்களுக்கு சாமியாரோ, பாதிரியாரோ வந்து பேய் ஓட்டுவதும் அப்போது நடக்கும் சம்பவங்களும் உலகம் முழுவதுமே பேய்ப் படங்களுக்கான மிகப் பெரிய அடிப்படைக் கதையாக இருந்துவருகின்றன. ஆனால், அந்தக் கதைகளில் உள்ள வித்தியாசமும் அவை படமாக்கப்பட்ட விதமுமே அவற்றை சிறந்த படமாக்குகின்றன.

அந்த வகையில் பார்த்தால், அஸ்வின் சரவணனின் இந்தப் படம் ஆங்காங்கே திகிலூட்டினாலும் அழுத்தமான கதை இல்லாதது படத்தின் பலவீனம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் விமர்சனம்.

கனெக்ட் பட விமர்சனம்

பட மூலாதாரம், @VigneshShivN

"ஆன்லைனில் பேயை விரட்டும் புதுமை இயக்குநர்"

"கனெக்ட் படத்தின் ஆரம்பக் காட்சிகள் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன. ஒரு முழுமையான திகில் திரைப்படத்திற்கான அனுபவத்தைத் தருகின்றன.

ஆனால், படம் நகர நகர, கடந்த 30 ஆண்டுகளாக நாம் பார்த்த திகில் திரைப்படங்களில் வரும் காட்சிகளின் தொகுப்பைப் போல படம் நகர்கிறது. மிகப் பழமையான பேயோட்டும் கதைக்கு சிரமப்பட்டு புதுமையை அளிக்க முயற்சிக்கிறார் இயக்குநர். என்ன புதுமை? பேயோட்டுவதை அதிவேக இணைய இணைப்புடன் ஆன் லைனில் செய்கிறார்கள்.

திடுக்கிட வைக்கும் காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன. தீய சக்தியைக் காட்சிப்படுத்தியிருப்பதும் நன்றாகவே இருக்கிறது. ஆனால், அடிப்படைக் கதைதான் பிரச்னை. இறந்துபோனவர்களுக்கோ, தீய சக்திக்கோ ஒரு பின்னணிக் கதை இல்லாமல் இருப்பதுகூட ஓகேதான். ஆனால், எல்லாவற்றையும் இணைக்கக்கூடிய ஒரு கோடு வேண்டாமா?" எனக் கேள்வி எழுப்புகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இதே மாதிரியான விமர்சனத்தையே, அதாவது ஏற்கனவே பார்த்த பல பேயோட்டும் கதையைக் கொண்ட திரைப்படங்களைப் போலவே இந்தப் படமும் இருப்பதாகக் கூறுகிறது The South First இணையதளம். "திகில் பட ரசிகர்களைப் பொறுத்தவரை பேயோட்டுவது என்பது புதிதல்ல. கனெக்ட் படமும் அந்த மாதிரிதான். ஆனால், பல காட்சிகள் முந்தைய பல பேய்ப் படங்களை நினைவுபடுத்துகின்றன.

ஏற்கெனவே நாம் பார்த்துப் பழகிப்போன காட்சிகளாகவே இருந்தபோதும், கதையோட்டத்தோடு ரசிகர்களை ஒன்றவைக்கிறது இந்தப் படம். ஆங்காங்கே படம் மெதுவாக நகர்ந்தாலும் படத்தின் பெரும் பகுதி விறுவிறுப்பாகவே இருக்கிறது.

ஒரு வழக்கமான கதையை படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மேம்படுத்திக் காட்டியிருக்கின்றன. திகில் பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்" என்கிறது தி சவுத் ஃபர்ஸ்ட் இணையதளம்.

இந்தப் படத்தின் நடித்திருக்கும் நயன்தாரா, வினய், ஹனியா நஃபீஸா ஆகியோரின் நடிப்பை எல்லா ஊடகங்களுமே பாராட்டியுள்ளன. அதேபோல, படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் பின்னணி இசையும் ஊடகங்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: