விடுதலை சிகப்பி: 'மலக்குழி மரணம்' கவிதையின் நோக்கம் என்ன? இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், TWITTER/PA.RANJITH
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
'மலக்குழி மரணம்' - இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்னும் விக்னேஸ்வரன் இந்த தலைப்பில் எழுதிய கவிதை இன்று சமூக வலைதளங்களில் பேசுபடுபொருளாக மாறியுள்ளது.
இந்துக் கடவுள்களை கொச்சைப்படுத்துவதாக ஒரு தரப்பினர் கொதித்தெழும் வேளையில், படைப்புச் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது, சக மனிதனின் இன்னலை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வரும் முயற்சி இது என்று மற்றொரு தரப்பினர் சமாதானம் கூறுகின்றனர்.
சர்ச்சைக்கு வித்திட்ட உதவி இயக்குநர் விடுதலை சிகப்பிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
மலக்குழி மரணம்... இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகவே தொடர்ந்து பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்டுவோம் என்று ஆட்சியாளர்கள் சூளுரைத்து வந்தாலும் கூட, அந்த இலக்கை எட்டுவது இன்னும் கனவாகவே இருக்கிறது என்கிறது புள்ளி விவரம்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடரின் போது இதுகுறித்த கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அளித்த பதில் இதனை உறுதிப்படுத்துகிறது.
அமைச்சர் வீரேந்திர குமார் அளித்த புள்ளிவிவரத்தின்படி பார்த்தால், அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 347 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 51, தமிழ்நாட்டில் 48, டெல்லியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 40 சதவீத மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, அதிகாரப் பகிர்வு என பல விஷயங்களில் நாட்டிற்கே முன்னோடி என்று சமூக நீதி பெருமை பேசும் தமிழ்நாடு மலக்குழி மரணத்திலும் முன்வரிசையில் இருப்பது வருத்தத்திற்கு ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கும் முடிவு கட்டி மலக்குழி மரணங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யாரும் இல்லை.
மலக்குழி மரணம் என்ற தலைப்பில் கவிதை
தமிழ்நாட்டின் மீது அழியாத கறையாக ஒட்டிக் கொண்டிருக்கும் மலக்குழி மரணங்களை முன்வைத்து, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, சென்னை ஆர்.ஏ.புரம், முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கில் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய இலக்கிய விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநரும், கவிஞருமான `விடுதலை சிகப்பி' என்ற விக்னேஸ்வரன் கவிதை வாசித்தார்.
`மலக்குழி மரணம்' என்ற தலைப்பில் அவர் வாசித்த இந்த கவிதையில் இந்து மதக் கடவுள்கள் குறித்த வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. அவர் கவிதை வாசிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தி, அவதூறு பரப்பும் வகையில் விடுதலை சிகப்பியின் கவிதை இருப்பதாக, பாரத் இந்து அமைப்பினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்திலும் புகாரளித்தனர்.
அதேபோல, பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் காவல்துறையில் புகாரளித்திருந்தார்.
அதன் பேரில், அபிராமபுரம் காவல் நிலையத்தில் விடுதலை சிகப்பியின் மீது கலகத்தைத் தூண்டுதல், எந்த ஒரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துதல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை மதப் பிரச்னையாக்கி, விடுதலை சிகப்பி மீது வழக்கு தொடுத்திருப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று அந்த இலக்கிய நிகழ்வை அரங்கேற்றிய நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும், இயக்குநருமான பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், "கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார் விடுதலை சிகப்பி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அரசியல் தலைவர்கள் கருத்து
விடுதலை சிகப்பியின் கவிதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் மட்டத்திலும் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுதலை எனும் புனைப்பெயரில் ஒருவர் இதிகாச புராணமான ராமாயணத்தையும், மக்கள் வணங்கக் கூடிய ராமர், லட்சுமணர், சீதை, அனுமார் போன்ற இந்துக் கடவுள்களை இழித்தும், பழித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"மலக்குழி மரணங்களைக் கவிதையாய் வடித்து சாடியதற்காக, கடவுளர்களை இழிவுப்படுத்தியதாக தம்பி விடுதலை சிகப்பி மீது வழக்குத் தொடுப்பதா? நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
மனுநீதிக்கு எதிரானது திராவிடமென கூறிவிட்டு, இந்துத்துவத்தின் ஊதுகுழலாய் ஒலிக்கும் திமுக அரசின் செயல்பாடு அவலத்தின் உச்சம் என்று அவர் விமர்சித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
"ஆட்சியாளர்களை புனைந்து கவிதை இயற்றலாமே?" - நாராயணன் திருப்பதி
உதவி இயக்குநர் விடுதலை சிகப்பியின் மலக்குழி மரணம் கவிதை தொடர்பாக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். "படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில், ஒரு மதத்தினரின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கடவுள்களைப் பழித்து கவிதை இயற்றுவது தவறு. தற்போது என்ன மாதிரியான விளக்கங்களைக் கொடுத்தாலும் அவரது செயல் உள்நோக்கம் கொண்டதாகவே கருதப்படும். மலக்குழி மரணங்கள் குறித்த கவனம் ஈர்ப்பதற்காகவே என்று விளக்கம் கூறுவது ஏற்புடையதாக இல்லை." என்று அவர் கூறினார்.
மேலும் கூறுகையில், "மலக்குழி மரணம் என்பது சட்டங்களை முறையாக செயல்படுத்தாத ஆட்சியாளர்களின் தவறு. ஆகவே, ஆட்சியாளர்கள், அதிகாரிகளை இணைத்து இவ்வாறு கவிதை எழுதலாமே? அதற்கு அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? ஏன் கடவுளைப் புனைந்து கவிதை எழுத வேண்டும்? முதலில் இதனை ஊடகங்கள் விவாதப் பொருளாகவே எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.
மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் செயலை படைப்புச் சுதந்திரமாக கருதக் கூடாது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. இதுவே வேறு மத கடவுள்களை இழிவுபடுத்தியிருந்தால் அரசு இவ்வாறு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா? குண்டர் சட்டம் பாய்ந்த உதாரணங்கள் கூட இருக்கின்றன. இனியும் தாமதிக்காமல், இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி கவிதை எழுதிய நபரை காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும்." என்றும் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சினிமா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்பதே அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனையாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








