இலங்கை ஜனாதிபதி தேர்தல்: “அதிக வேட்பாளர்கள், அதிநீளமான வாக்குச்சீட்டு” - 10 சுவாரஸ்ய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் திங்கள்கிழமையுடன் (அக்டோபர் 7) நிறைவு பெற்றுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முறைமை அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் இதுவரை 7 ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பிரதமர் ஆட்சியாக காணப்பட்ட இலங்கையின் ஆட்சி முறை, 1978ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்டது.
இதன்படி, கடந்த 7 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் மாறுப்பட்ட, பலரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ள ஒரு தேர்தலாக மாற்றம் பெற்றுள்ளது.

பட மூலாதாரம், LENOVO
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 முக்கிய விடயங்கள்.
- ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது.
- இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்)
- அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்)
- அதிநீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)


- இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது)
- வாக்குபெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.

பட மூலாதாரம், Department Of Government Information - Srilanka
- 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (1999ஆம் ஆண்டு தேர்தலில் இறுதியாக பெண்கள் போட்டியிட்டிருந்தனர்)
- இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்)
- ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.
- சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல். (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன.)

தமிழக மீனவர் பிரச்சனை - இலங்கை மீனவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












