You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் ராஜிநாமா செய்த முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் இவர்கள்தான்
இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்த துறைகளுக்கு பதில் அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவர்களில் மூன்று பேர் வகித்த பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசிம் ஆகிய அமைச்சர்கள் வகித்த பதவிகளுக்கே, பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ரஊப் ஹக்கீம் ராஜிநமா செய்த நகர திட்டமிடல், நீர் வழங்கல் துறைக்கு பதில் அமைச்சராக, அதன் ராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
றிசாட் பதியுதீன் ராஜிநாமா செய்த கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் துறைக்கு, அதன் பிரதியமைச்சர் புத்திக பத்திரன, பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கபீர் ஹாசீம் ராஜிநாமா செய்த பெட்ரோலிய வள அபிவிருத்தி துறைக்கு, அதன் பிரதியமைச்சர் அனோமா கமகே, பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனங்களை இன்று வழங்கினார்.
எவ்வாறாயினும், எம்.எச்.எம். ஹலீம் ராஜிநாமா செய்த அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார துறைக்கு, இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுமான ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை கூட்டாக ராஜிநாமா செய்திருந்தனர்.
தற்போது இரங்கை அரசாங்கத்தில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
- காஷ்மீர் கத்துவா சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு
- கிரிஷ் கர்னாட்: ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மொழி உரிமைக்கும் ஒலித்த குரல்
- இந்தியாவுக்கு 'சிறப்பான' 'தரமான' வெற்றி சாத்தியமானது எப்படி ?
- கென்யாவில் கோலாகலமாக நடக்கும் காளை சண்டை - ஏராளமானோர் பங்கேற்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்