யாழ்ப்பாணம் சூட்டுச் சம்பவம்: சிறிசேன கண்டனம்

இலங்கையில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம.இளஞ்செழியன் பயணம் செய்த வேளை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த அவரது மெய்க்காப்பாளரான போலிஸ் சார்ஜன்ட், சரத் பிரேமசந்திராவின் மறைவுக்கு தனது அனுதாபத்தையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.

இந்த சம்பவத்தையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

அனைத்து நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து சிறப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு போலிஸ் மா அதிபதிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சிறப்பு போலிஸ் குழுக்களை அமைத்து சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு போலிஸ் மா அதிபதி உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு, ஜனாபதி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :