எம். எஸ். தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்

பட மூலாதாரம், Getty Images
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக தோனி முடிவு செய்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம். எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இடம் பெறுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜடேஜா 2012ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2008-ம் ஆண்டு முதல் 12 சீசன்களில் தோனி வழிநடத்தியள்ளார். இதில் 4 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.
இந்த 12 சீசன்களில் ஒரே ஒருமுறை மட்டுமே பிளே ஆஃபுக்கு தகுதி பெறவில்லை.
ஒன்பது முறை இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது.
நாற்பது வயதாகும் மகேந்திர சிங் தோனி கடந்த 2014-ம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2017-ல் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி 2020-ம் ஆண்டு வரை ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் 2021 சீசன் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதுவே தோனி கேப்டனாக விளையாடிய கடைசி போட்டியாக அமைந்துவிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால் 'தல' என்று அழைக்கப்படும் தோனிக்கு ஒரு தனி பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் தொடர்ந்து சென்னை அணியில் தொடருவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்திருந்தாலும் அவர் கேப்டனாக இல்லாத சென்னை அணி அதே வரவேற்பை பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












