ஹர்லீன் கவுர் தியோல்: ஒரே கேட்சில் இந்திய மகளிர் கிரிக்கெட்டை டிரெண்டாக்கிய இவர் யார் ?

ஹர்லீன் கவுர் தியோல்

பட மூலாதாரம், KELLY DEFINA-ICC/GETTYIMAGES

ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் ஸ்கொயர் கட் ஷாட்கள், அட்டகாசமன கவர் ட்ரைவகள் ரசிக்கப்பட்டன. பிறகு 160 கிலோமீட்டார் வேகத்தில் வீசப்படும் புல்லட் பந்துகள், ஸ்விங்குகள், 18 டிகிரி ஸ்பின்கள் ரசிக்கப்பட்டன.

கடந்த சில தசாப்தங்களாக அதிரடி ஃபீல்டிங்குகள் ரசிக்கப்பட்டு வருகின்றன. என்னதான் ஆண் பெண் சமம் என கூறி வந்தலும் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், பெயர், புகழ் ஆகியவை பெண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைப்பதில்லை என்பதை நம்மால் மறுக்க முடியாது.

இது இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். அப்படி இருக்கும் போது ஒரு பெண் வீரர் பிடித்த கேட்சில், ஒட்டுமொத்த இந்திய மகளிர் கிரிக்கெட்டும் டிரெண்டாகி இருக்கிறது. கேட்ச் பிடித்தவரின் பெயர் ஹர்லீன் கவுர் தியோல்.

இந்தியாவின் வட கோடியில் உள்ள சண்டிகரில் பிறந்து வளர்ந்த இந்த 23 வயதுக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம் பிடித்தார்.

ஹர்லீன் கவுர் தியோல்

பட மூலாதாரம், Getty Images

இதுவரை ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 10 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறது.

கடந்த ஜூலை 09ஆம் தேதி அதிரடி பேட்ஸ்மேன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக நார்த்தாம்ப்டனில் களமிறங்கியது. இந்திய அணியில் ஹர்லீன் கவுர் தியோலும் இடம் பெற்றிருந்தார்.

இப்போட்டியில் முதலில் இங்கிலாந்து பேட் செய்தது 19ஆவது ஓவரில் ஷிக்கா பாண்டே வீசிய ஐந்தாவது பந்தை சிக்ஸர் நோக்கி விளாசினார் ஏமி ஜோன்ஸ். ஆனால் பவுண்டரி லைனில் இருந்த ஹர்லீன் கவுர் தியோல் அப்பந்தை தவ்விப் பிடித்தார். பவுண்டரி லைனைக் கடந்து விடுவோம் என தெரிந்த உடன் மீண்டு பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே எரிந்து விட்டு, பவுண்டரி லைனில் இருந்து பாய்ந்து வந்து கேட்ச் பிடித்தார்.

"இது ஓர் அருமையான கேட்ச். எனக்கு இந்த ஆண்டின் ஆகச் சிறந்த கேட்ச் இதுதான்" என்ற பாராட்டு வாசகங்களோடு ஹர்லீன் கவுர் தியோலை டேக் செய்து காணொளியோடு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் இந்திய கிரிக்கெட்டின் ஆதர்ஷ நாயகன் சச்சின் டெண்டுல்கர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

சச்சின் மட்டுமின்றி பிசிசிஐ, டரன் சமி, லிசா ச்தலெகர், இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு, தொழிலிபர் ஆனந்த் மஹிந்திரா என பலரும் ஹர்லீன் கவுரின் கேட்சைப் பாராட்டி தங்கள் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

ஒரே கேட்ச் - இந்திய மகளிர் கிரிக்கெட்டையே டிரெண்டாக்கிய ஹர்லீன் கவுர் தியோல்

பட மூலாதாரம், TWITTER / ENGLISH CRICKET

இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு, இந்தியா முழுமையாக பேட்டிங் செய்ய முடியாமல் டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும், ஹர்லீன் பிடித்த கேட்ச் இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

மித்தாலி ராஜைத் தாண்டி பெண்கள் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் கூட தெரியாத சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது. இன்று ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா போன்ற பெண் வீரர்களின் பெயர்கள் மெல்ல வெகு ஜனங்களுக்கு தெரியத் தொடங்கி இருக்கிறது.

இப்போது ஹர்லீன் கவுர் தியோலின் அந்த ஒற்றை கேட்ச், ஒட்டுமொத்த சமூக வலைத்தளத்திலும் இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மீண்டும் டிரெண்டாக்கி இருக்கிறது.

இந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நடந்த ஒரே டெஸ்ட் போட்டியில் இந்தியா போட்டியை டிரா செய்தது. மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் மட்டும் இந்தியா வென்றிருக்கிறது. மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி இருக்கிறது. ஜுலை 11 மற்றும் 14 தேதிகளில் அடுத்த இரு போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :