IND Vs NZ: இந்தியாவின் வெற்றி பயணத்தை தடுத்து நிறுத்தியது நியூசிலாந்து - 4 முக்கிய காரணங்கள்

பட மூலாதாரம், AFP
ஹாமில்டனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு இவை நான்கும் முக்கிய காரணங்களாக அமைந்தன.
ராஸ் டெய்லரின் அபார சதம்
டி20 போட்டிகளில் வலுவான அணியாக கருதப்படும் நியூசிலாந்து படுதோல்வி அடைந்ததையடுத்து, ஒருநாள் போட்டி தொடரில் அந்த அணியின் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது.
இன்றைய போட்டியில் ராஸ் டெய்லர் மிகவும் அபாரமாக விளையாடினார். அவரது சதத்தில் 10 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.
அதிக அளவில் ரன்களை கொடுத்த பந்துவீச்சாளர்கள்
இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் குலதீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் இந்த போட்டியில் அதிக அளவில் ரன்கள் வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு ஓர் முக்கிய காரணமாக அமைந்தது.

பட மூலாதாரம், Getty Images
இவர்கள் இருவரும் வீசிய 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஷமி மற்றும் தாக்கூர் பந்துவீச்சிலும் அதிக அளவில் ரன்கள் எடுக்கப்பட்டது.
லாதமின் அதிரடி ஆட்டம்
நியூசிலாந்து அணியின் கேப்டனான டாம் லாதமின் அதிரடி பேட்டிங் அந்த அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. 48 பந்துகளில் அவர் எடுத்த 69 ரன்கள் நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தது.
பீல்டிங் குளறுபடிகள்
மிக பெரிய இலக்கை இந்தியா நிர்ணயித்த போதிலும், நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் தரும் வகையில் இந்தியாவின் பீல்டிங் இந்த போட்டியில் அமையவில்லை.
அதிக அளவில் பவுண்டரிகள் தரப்பட்டதும், நியூசிலாந்து எளிதில் ரன்கள் எடுக்க முடிந்ததும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (புதன்கிழமை) ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்களை குவித்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அறிமுக ஜோடி ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விளையாடினர்.
அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் - ராகுல்

பட மூலாதாரம், Getty Images
அகர்வால் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நிலையிலும், ப்ரித்வி ஷா 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 103 ரன்களும், லோகேஷ் ராகுல் 88 ரன்களும் ( 64 பந்துகள், 3 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) அடித்தனர்.
கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கு நிர்ணயக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













