IND vs NZ டி20: ஐந்தாவது டி20யில் வென்று நியூசிலாந்தை துடைத்தெரிந்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடிய இந்தியா ஏற்கெனவே விளையாடிய நான்கு போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி வலுவான நிலையில் இருந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பே ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையில் போட்டியை எதிர்கொண்ட இந்தியா இந்தப் போட்டியையும் வென்று 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி மகிழ்ச்சியில் திளைக்கிறது.
அடுத்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி முதலில் பேட் செய்து மூன்று விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்திருந்தது.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 20 வது ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 156 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றியை தவறவிட்டது. 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:









