கிரிக்கெட்: ‘ரோகித் இருந்தால் போதும், எந்த சேசிங்கும் எளிதுதான்’ - கோலி புகழாரம்
கெளஹாத்தியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 323 என்ற இமாலய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது.

பட மூலாதாரம், BCCI/Twitter
வெற்றியை எளிதாகிய இந்திய இணையின் ஆட்டத்தை கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வெகுவாக புகழ்ந்தனர்.
நேற்றைய போட்டி குறித்து இந்திய அணியின் ஆள் ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா கூறுகையில்,'ரோகித், கோலி சேர்ந்து ரன்கள் சேர்க்க துவங்கிவிட்டால், அவர்களை அவுட்டாக்குவது மிகவும் கடினம். அதற்கு அவர்கள் அடிக்கும் முறையான கிரிக்கெட் ஷாட்கள் தான் காரணம். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதில் இவர்களை மிஞ்ச ஆள் கிடையாது.' என்றார்.

பட மூலாதாரம், BCCI/Twitter
இதேபோல் ஆட்டத்தின் முடிவில் பேசிய அணித்தலைவர் கோலி, '''ரோகித் இருந்தால் போதும் , எந்த சேசிங்கும் எளிதுதான். அவர் சிறப்பாக் ஆடிவரும்போது, எந்த இழக்கும் இமாலய இலக்காகவோ, கடினமான இலக்காகவோ தோன்றாது'' என்று புகழாரம் சூட்டினார்.
சிறப்பாக விளையாடிய கோலி - ரோகித் ஜோடியின் ஆட்டம் பற்றிய 5 சுவாரஸ்ய அம்சங்கள் இவை.
- 2 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகள் விளாசிய விராட் கோலி, 107 பந்துகளில் 140 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்.
- நேற்றைய போட்டியில் கோலி எடுத்த சதம் கேப்டனாக அவர் எடுத்த 14-ஆவது சதம் ஆகும். அணியின் கேப்டனாக அதிக சதங்கள் எடுத்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் இருக்கிறார். கேப்டன்கள் வரிசையில் 22 சதங்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்குக்கு அடுத்த நிலையில் கோலி உள்ளார்.
- தனது ஆட்டத்தில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளை விளாசிய ரோகித சர்மா, 117 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தார்.
- 2018-ஆம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் சேர்த்து நேற்றைய போட்டியில் 2000 ரன்களை கோலி கடந்தார். இந்த சாதனையை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக செய்துள்ளதன் மூலம் கோலி, டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
- மேலும், நேற்றைய ஆட்டத்தில் சர்வதேச போட்டிகளில் தனது 60-வது சதத்தை எடுத்த கோலி, குறைந்த இன்னிங்ஸ்களில் 60 சர்வதேச சதங்கள் எடுத்த சச்சினின் சாதனையை முறியடி த்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








