முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழலுக்கு எதிரான நடத்தைவிதிகளை மீறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது.
49 வயது முன்னாள் ஆல் ரவுண்டரான ஜெயசூரியா இதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.
ஆதாரங்களை மறைப்பதாகவும் அல்லது அழிப்பதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தேர்வு குழு உறுப்பினராக இருந்த ஜெயசூரியா புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக பாராட்டப்பட்டவர்.
இந்த குற்றம் குறித்து பதிலளிக்க ஜெயசூரியாவுக்கு 14 நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது.
445 சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜெயசூரியா, 21 சதங்களையும், 323 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பெற்றவர் ஜெயசூரியா.
110 டெஸ்ட் போட்டிகளில் 40.07 ரன்களை சராசரியாக வைத்திருந்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் பின் 2012ஆம் ஆண்டு வரை 20-20 போட்டிகளில் விளையாடினார் ஜெயசூரியா.
இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு இலங்கையில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப் போவதாக தெரிவித்திருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












