‘போர்களம் போல மாறிய போர்ச்சுகல் நகரம்’ - சூறாவளியால் பரிதவிக்கும் மக்கள்

பட மூலாதாரம், Reuters
போர்ச்சுகலில் கடுமையான சூறாவளி ஏற்பட்டத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்துள்ளன, சுமார் மூன்று லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் வடக்கு போர்ச்சுகல்லை லெஸ்லி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி துடைத்தெறிந்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்த சூறாவளியால் யாரேனும் இறந்திருக்கிறார்களா என்பது குறித்த எந்த செய்தியும் இதுவரை இல்லை. ஆனால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாமென போலீஸார் எச்சரித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் சூறைக்காற்றால் இதுவரை 27 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வடக்கு நோக்கி பயணம்
போர்ச்சுகலை இதுவரை தாக்கிய மோசமான சூறாவளிகளில் இதுவும் ஒன்று. இப்போது வடக்கு ஸ்பெயினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
போர்ச்சுகலை சூறாவளி தாக்கியப் பின் மணிக்கு 176 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் மற்றும் லைரியா நகரத்தின் புறநகர் பகுதியில்தான் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நூற்றுக்கணக்கான மக்கள் அங்குள்ள கலையகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
போர்களமாக மாறிவிட்டது
"நான் இதுபோன்ற காட்சியை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. போர்களம் போல நகரமே மாறிவிட்டது. மரங்கள் விழுந்ததால் கார்கள் நசுங்கி உள்ளன. மக்கள் கவலையில் இருக்கிறார்கள்." என்கிறார் உள்ளுர்வாசி ஒருவர்.
போர்ச்சுகலில் 1842ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட மோசமான சூறாவளி இது .
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












