காமன்வெல்த்: டேபிள் டென்னிஸ், பேட்மின்டனில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்
ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணியும், பேட்மின்டன் கலப்பு அணியும் திங்கள்கிழமை தங்கப்பதக்கம் வென்றன.

பட மூலாதாரம், Getty Images
ஆண்கள் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நைஜீரிய அணியுடன் மோதிய இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் அணியின் வீரர்கள்:
அமல்ராஜ் ஆண்டனி, சத்யன் ஞானசேகரன், சரத் அசந்தா, ஹர்மீத் தேசாய், சனில் சங்கர் ஷெட்டி.
நேற்று நடைபெற்ற பெண்கள் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கலப்பு பேட்மின்டன்
கலப்பு பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் இலங்கை அணியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது.
பிரனவ் சோப்ரா, சிரீகாந்த் கிடாம்பி, சாய்னா நெவால், அஷ்வினி பொன்னப்பா, எச்.எஸ்.பிரனாய், பி.வி.சிந்து, சாத்விக் ராங்கி ரெட்டி, என்.சிக்கி ரெட்டி, சிரக் சந்திர சேகர் ஷெட்டி, ருத்விகா கட்டி ஆகிய இந்திய வீரர்கள் வெற்றி பெற்ற கலப்பு பேட்மின்டன் அணியில் இடம் பெற்றிருந்தனர்.
பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடம்
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பதக்கப்பட்டியலில் 10 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியா திங்கள்கிழமை மட்டும் ஏழு பதக்கங்கள் வென்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












