நோபல் பரிசு வென்ற ஸ்வாந்தே பாபோ: நியாண்டர்தால் மனிதர்கள் பற்றிய புதிர் கேள்விகளுக்கு பதில்கள்

பேராசிரியர் ஸ்வாந்தே பாபோ

பட மூலாதாரம், BENCE VIOLA, MAX-PLANCK-INSTITUTE

படக்குறிப்பு, பேராசிரியர் ஸ்வாந்தே பாபோ

மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாந்தே பாபோவுக்கு நேற்று (அக். 03) அறிவிக்கப்பட்டது. மனித பரிணாமம் குறித்த இவருடைய பங்களிப்புகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அழிந்துபோன நியாண்டர்தால் மனிதர்களின் மரபுக் குறியீட்டை கண்டறிந்தது உள்ளிட்ட சாத்தியமற்ற பணிகளை பேராசிரியர் ஸ்வாந்தே பாபோ செய்துள்ளதாக, நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.

ஆதிமனிதர்களின் ஒரு வகையை சேர்ந்த டெனிசொவன்கள் குறித்த கண்டுபிடிப்புகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

நம்முடைய பரிணாம வரலாறு மற்றும் மனிதர்கள் எவ்வாறு இந்த பூமியில் பரவினர் என்பது குறித்தும் அதிகம் அறிவதற்கு இவருடைய கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன.

நாம் எங்கிருந்து வந்தோம், நம் முந்தைய மனித இனங்கள் அழிந்துபோன நிலையில், ஹோமோ சேப்பியன்ஸ் இனமான நாம் மட்டும் எப்படி தொடர்ந்து நீடிக்கிறோம் என்பது போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்கு விடைகளை அறியும் வகையிலான பணிகளை ஸ்வாந்தே பாபோ மேற்கொண்டுள்ளார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இதற்கிடையில், நியாண்டர்தால் மனிதர்கள் யார் என நமக்கு கேள்வி எழலாம். உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக, நியாண்டர்தால் மனிதர்கள் மற்றும் தற்கால மனிதர்களின் முன்னோர்கள் குறித்து அறிவியல் ஆராய்ச்சிகள் நமக்கு இதுவரை சொன்னது என்ன என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களுடன் பிபிசி தமிழ் வெளியிட்ட சில கட்டுரைகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

நியாண்டர்தால்கள் நவீன மனிதர்களின் முன்னோர்களுடன் உடலுறவில் ஈடுபட்டார்களா?

நியாண்டர்தால் மனிதன்

ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட, நியண்டர்தால் டிஎன்ஏவை இன்று உயிருடன் உள்ள அனைவரிடமும் காணலாம், அவர்களின் மூதாதையர்கள் இந்தக் குழுவுடன் நேரடியாக தொடர்பு கொண்டதாக கருதப்படவில்லை.

2016ஆம் ஆண்டில், சைபீரியாவில் உள்ள அல்தாய் மலைகளில் இருந்து நியண்டர்தால்கள் சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நவீன மனிதர்களின் மூதாதையர்களுடன் தங்கள் மரபியலில் 1-7% பகிர்ந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மனித வரலாற்றில் இந்த அதிர்ச்சியூட்டும் அத்தியாயத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த கட்டுரையை படியுங்கள்.

சிவப்புக் கோடு

நியாண்டர்தால் மனிதர்கள் - நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தார்களா?

நியாண்டர்தால்

தெற்கு பிரான்சில் உள்ள குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பல் மற்றும் கல் கருவிகள், சுமார் 54,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் ஹோமோ சேபியன்ஸ் (தற்கால மனித இனம்) இருந்ததாகக் கூறுகிறது.

இது முன்பு நினைத்ததைவிடப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இரண்டு இனங்களும் நீண்ட காலத்திற்கு ஒன்றாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.

சிவப்புக் கோடு

நியாண்டர்தால் மனிதர்கள் நம் முன்னோர்களுடன் போரிட்டார்களா?

40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து போனதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

ஆனாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது மனித மூதாதையர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்கள் அழிந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பரிணாம உயிரியல் வல்லுநர் நிக்கோலஸ் லாங்ரிச் தெரிவித்துள்ளார்.

சிவப்புக் கோடு

மனிதகுலம் தோன்றியது எப்போது?

குகைவாழ் பெண்

பட மூலாதாரம், Getty Images

மனித குலத்தின் மூதாதையர்களின் புதைபடிம எச்சங்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்பு நினைத்திருந்ததைவிட இன்னும் மிக மிக தொன்மையானவை என ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.

இவற்றில், மனிதகுலத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவின் குகைகளில் புதைக்கப்பட்டிருந்த 'மிஸ்ஸர்ஸ் பிளெஸ்' (Mrs Ples) என அழைக்கப்படும் பண்டைய குகைவாழ் பெண்ணின் புதைபடிம எச்சங்களும் அடக்கம்.

34 லட்சம் முதல் 37 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பகால மனிதர்களின் குழு பூமியில் சுற்றித் திரிந்ததாக, நவீன சோதனை முறைகள் பரிந்துரைக்கின்றன.

சிவப்புக் கோடு

இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா?

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் ரஷ்யாவின் குகையில் இருந்து கிடைத்துள்ளது.

நீண்ட காலத்திற்கு முன்னர், ரஷ்யாவின் குகை ஒன்றில் இருவேறு இனங்கள் ஜோடி சேர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஆதாரங்களில் இருந்து அந்த ஜோடிக்கு ஒரு மகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை
காணொளிக் குறிப்பு, அமேசான் காட்டில் அடிதடி: அசமந்தியிடம் அடி வாங்கிய காட்டுப் பூனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: