You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பசிபிக் எரிமலை வெடிப்பில் செயற்கைக் கோள்களின் பங்களிப்பு என்ன?
- எழுதியவர், ஜோனாத்தன் அமோஸ்
- பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்
தெற்கு பசிபிக் கடலில், டோங்கா நாட்டுக்கு அருகே, கடந்த சனிக்கிழமை கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட போது, என்ன நடந்தது என்பதைப் படம் பிடிக்க செயற்கைக் கோள்கள் சரியான இடத்தில் இருந்தன.
காரணம் பூமியைக் கண்காணிக்கும் செயற்கை கோள்களின் எண்ணிக்கை பெரிதாகவும், அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில செயற்கைக் கோள்கள், பூமியின் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை எப்போதுமே கண்காணித்து வருகிறது. அதாவது அதன் தரவுகள் உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள தயாராக இருக்கின்றன. மற்ற செயற்கைக் கோள்களுக்கு, அது கண்காணிக்க வேண்டிய விவரங்கள் உத்தரவுகளாக பிறப்பிக்கப்படுகின்றன.
இந்த செயற்கைக் கோள்கள் சேகரிக்கும் தரவுகள், உடனடியாக எதிர்வினையாற்ற உதவுகின்றன. மேலும் விஞ்ஞானிகள் நடந்த சம்பவத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
வானிலை செயற்கைக் கோள்கள்
பூமியிலிருந்து 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து கொண்டு, பூமியின் வானிலை அமைப்பை ஒரு குழுசார் செயற்கைக் கோள்கள் கண்காணிக்கின்றன. சில நிமிடங்களுக்கு ஒருமுறை, பூமியின் மொத்த அரைகோளத்தையும் (பாதி பகுதியை) இந்த செயற்கை கோள்கள் முழுமையாக ஸ்கேன் செய்து அந்தப் படங்களை பூமிக்கு அனுப்புகின்றன.
இது போன்ற சில வானிலை செயற்கைக் கோள்கள் தான், எரிமலை வெடிப்பினால் வானத்தை நோக்கி மேல் எழும்பிய சாம்பல் மேகத்தின் சில அற்புதக் காட்சிகளை பதிவு செய்தன.
எரிமலை வெடிப்பின் போது உருவாகும் சாம்பல் மேகம் காரணமாக நிலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது சிரமம். ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் தான் அது எரிமலை சாம்பலையும்,மேகத்தையும் கடந்து நிலத்தில் நடப்பதைக் காண முடியும்.
சனிக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியத்தின் சென்டினல் - 1ஏ செயற்கைக் கோள் எரிமலை வெடிப்பின் மேலே பறந்து கொண்டிருந்ததால், பசிபிக் பெருங்கடலின் நீரின் மீதிருந்த பல கட்டடம் போன்ற அமைப்புகள் அழிக்கப்பட்டது தெளிவாகத் தெரிந்தது.
ரேடார் படங்களைப் பார்த்து பழக்கப்படாதவர்களால், அப்படங்களைக் கண்டு எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
எனவே பழக்கப்பட்ட ரீதியிலான ஏரிமலைப் படங்களைப் பாருங்கள். இப்படங்களை சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த பிளானட் என்கிற நிறுவனம் எடுத்தது.
அதில் ஒரு படம், எரிமலை வெடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. அப்படத்தை மேலே உள்ள ரேடார் தரவுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களால் எரிமலை வெடிப்பின் வீரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
உலகம் முழுக்க அதிர்வலை
எரிமலை வெடித்த பின் ஏற்பட்ட அதிர்வலை, உலகின் எல்லா திசைகளிலும் பரவியது. அதை வானிலை செயற்கைக் கோள்கள் படம் பிடித்திருந்தன. அது பார்ப்பதற்கு அத்தனை அருமையாக இருந்தது.
எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட இந்த அழுத்த அதிர்வலைகள், உலகம் முழுக்க உணரப்பட்டன. அந்த அதிர்வலைகள் கடப்பதை, தன் பாரோமீட்டரில் இரு முறை பதிவு செய்துள்ளது பிரிட்டனின் வானிலை அலுவலகம்.
எரிமலை வெடிப்பு பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை ஐரோப்பிய விண்வெளி முகமையின் எயோலஸ் (Aeolus) திட்டத்தின் மூலம் தரவுகளைப் பெறலாம்.
இந்த செயற்கைக் கோள், பூமியிலிருந்து 30 கிலோ மீட்டர் உயரம் வரை காற்றில் உள்ள பண்புகளை அளவிடும்.
அல்ட்ரா வயலெட் லேசர் கதிர்களை வெளியிடுவதன் மூலம் இப்பணியைச் செய்கிறது. பசிபிக் பெருங்கடலைக் கடந்த போது, அப்பகுதியில் வானத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த துகள்களால் அதன் ஒளிக்கற்றை தடைப்பட்டது.
இருப்பினும், எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை எவ்வளவு உயரத்துக்கு சென்றது என்கிற விவரத்தைக் கொடுக்கிறது.
காலநிலை மாற்றத்தின் மீதான தாக்கங்கள்
வரலாற்றின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகள், காலநிலையை குளிர்ச்சிப்படுத்தும் தற்காலிக அமைப்பாகலாம்.
1991ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மவுண்ட் பிண்டாடுபோ எரிமலை வெடிப்பு, புவியின் சராசரி வெப்ப நிலையை, இரண்டு ஆண்டு காலத்துக்கு அரை டிகிரி குறைவாக வைத்திருந்தது. வளிமண்டலத்தில் அதிக அளவிலான சல்ஃபர் டை ஆக்ஸைடை செலுத்துவதன் மூலம் எரிமலைகள் இதைச் செய்கின்றன.
சல்ஃபர் டை ஆக்ஸைட் உடன், நீர் சேரும் போது மிகச் சிறு நீர் துளிகள் உருவாகின்றன அது எதிர்வரும் சோலார் ரேடியேஷனை பிரதிபலிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சென்டினல் - 5 பி செயற்கைக் கோளால், சல்ஃபர் டை ஆக்ஸைடின் அளவையும், அது பரவி இருக்கும் விவரத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
சேதத்தை துல்லியமாக அறிவது
டோங்கன் தீவுக் கூட்டத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இதுவரை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அங்கு வாழக் கூடியவர்கள் சாம்பல் காற்றில் பறப்பதையும், சுனாமி பேரலைகளால் ஏற்பட்ட வெள்ள அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டும். அவசரத் தேவையுள்ள பகுதிகளில் உடனடியாக எதிர்வினையாற்ற, அதி உயர் திறன் கொண்ட செயற்கைக் கோள்கள் தற்போது அத்தீவுகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- 'அன்பே, பெருமைப்படுகிறேன்' - விராட் கோலிக்காக அனுஷ்காவின் உணர்ச்சிப் பூர்வமான பதிவு
- உத்தரப்பிரதேச தேர்தல், இந்துத்துவத்துக்கு சமூக நீதி விடுக்கும் சவாலா?
- சகோதரியை மணந்த மன்னர்கள் - எகிப்து, கிளியோபாட்ரா பற்றி அறியப்படாத தகவல்கள்
- ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு; தடுப்பூசி போடாததால் விரைவில் வெளியேற்றம்
- பிக்பாஸ் 5: ராஜூ, பிரியங்கா, பாவனி - இந்த சீசன் வெற்றியாளர் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்