சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா - ஓர் இரவு தங்குவதற்கு 35,000 டாலர்

பட மூலாதாரம், NASA
2020ம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுற்றுலா பயணிகளை நாசா அனுமதிக்கவுள்ளது. இந்த விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்குவதற்கு ஆகும் செலவு 35,000 டாலராகும் (27,500 யூரோ).
விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த நிலையத்தை சுற்றுலா பயணிகளுக்கும், பிற வணிக முயற்சிகளுக்கும் அனுமதிக்கப் போவதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் இரண்டு குறுகிய கால விண்வெளி சுற்றுலா பயணங்கள் அனுமதிக்கப்படும் என்று சர்வதேச விண்வெளி நிலையத்தின் துணை இயக்குநர் ராபின் கேடன்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஓடத்தில் பயணித்து 30 நாட்கள் வரை தனியார் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று நாசா கூறியுள்ளது.
இதற்கு முன்னர் அனுமதிக்காமல் இருந்த, வணிக முயற்சிகளுக்கும், சந்தைப்படுத்தலுக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா திறக்கவுள்ளது என்று தலைமை நிதி அதிகாரி ஜெஃப் டிவிட் நியூயார்க்கில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
விண்வெளிக்கு சுற்றுலா செல்வோர் அங்கு செல்வதற்கான மருத்துவ சோதனைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதோடு, எத்தனை பேர் செல்லலாம் என்பதையும் தனியார் வணிக நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும் என்று நாசா தெரிவித்துள்ளது.
எலன் மாஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் கேப்சூல் என்ற விண்கலம் மற்றும் போயிங் கட்டமைத்துவரும் ஸ்டார்லைனர் விண்கலம் இரண்டையும் நாசா பயன்படுத்திக்கொள்ளும்.
நாசா விண்வெளி வீரர்களை, தங்கள் விண்கலங்கள் மூலம் விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கு ஒரு முறை பறக்க, சுமார் 60 மில்லியன் டாலர் கட்டணம் விதிக்கின்றன இந்த தனியார் விண்வெளி நிறுவனங்கள். தனியார் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லவும் இதே அளவு கட்டணத்தை இந்த நிறுவனங்கள் வசூலிக்கும் என்று தெரிகிறது.
இதுவரை விண்வெளி நிலையத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடுத்து வந்த நாசா, விண்வெளி வீரர்கள் ஆதாயம் தரக்கூடிய ஆய்வுகளில் பங்குபெறுவதற்கும் தடைவிதித்து வந்தது.
நாசாவுக்கு என்று சொந்தமான விண்வெளி நிலையம் இல்லை. சர்வதேச விண்வெளி நிலையம் 1998ம் ஆண்டு ரஷ்யாவோடு சேர்ந்து உருவாக்கப்பட்டது.
இதனை வணிகப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தளர்வான அணுமுறையை ரஷ்யா சமீபத்திய தசாப்தங்களில் எடுத்துள்ளது.
2001ம் ஆண்டு சுற்றுலாப் பயணி ஒருவர் முதல் முறையாக சர்வதேச விண்வெளிநிலையத்துக்கு சென்றார்.
டென்னிஸ் டிடோ என்னும் அந்த அமெரிக்க வணிகர் விண்வெளிக்கு போய் வர ரஷ்யாவுக்கு சுமார் 20 மில்லியன் டாலர் செலுத்தினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை முற்றிலும் தனியார்மயமாக்குவதை நோக்கிய முதல் நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை வெளிவந்த நாசாவின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பட்ஜெட்டில், 2025ம் ஆண்டுக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வழங்கப்படும் நிதி ஆதரவு நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக பெண் ஒருவரையும், பல தசாப்பங்களுக்கு பின்னர் ஆண் ஒருவரையும் 2024ம் ஆண்டு சந்திரனுக்கு மீண்டும் அனுப்பப்போவதாக நாசா தெரிவித்துள்ளது,
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












