BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் - நியமன உத்தரவை வழங்கினார் ஆளுநர்
த.வெ.க. தலைவர் விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமிப்பதற்கான உத்தரவை ஆளுநர் அர்லேகர் வழங்கினார்.
விஜய் முதலமைச்சரானால் அவருக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?
த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் விஜய் முதலமைச்சராவதில் சிக்கல் நீடித்தது. தற்போது போதுமான ஆதரவு கிடைத்துள்ள நிலையில், தவெக-வின் ஆட்சி அமைந்தால்,விஜய் எத்தகைய சவால்களைச் சந்திக்கப் போகிறார்?
துருக்கி-இஸ்ரேல் இடையே நேரடி போர் மூளும் அபாயம் உள்ளதா?
கடந்த மூன்று ஆண்டுகளில், துருக்கி-இஸ்ரேல் இடையிலான உறவு, ராஜ்ஜீய ரீதியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில் இருந்து மாறி, தற்போது நேரடி ராணுவ மோதலின் விளிம்பிற்கு வந்துள்ளது.
நேரலை, சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைக்க நடக்கும் முயற்சிகளுடன் இந்தியா, இலங்கை, உலகம், ஐபிஎல் மற்றும் விளையாட்டுச் செய்திகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
டாப் 2 இடங்களுக்குள் நுழையப்போவது யார்? ; ராஜஸ்தான் - குஜராத் மோதல்
இந்த இரண்டு அணிகளுமே இதுவரை தலா 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் பெற்றிருக்கின்றன. நெட் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் நுழையலாம்.
காணொளி, "குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவே ஆதரவு" - திருமாவளவன், கால அளவு 0,31
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
'அதிமுகவை ஆதரிக்க ஸ்டாலின் வலியுறுத்தினார்': எம்.ஏ.பேபி பேட்டி பற்றி இடதுசாரி மாநில தலைவர்கள் கூறுவது என்ன?
அதிமுக ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் தங்களை வலியுறுத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பேபி கூறியிருப்பது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இடதுசாரிகளின் மாநில தலைமைகள் என்ன சொல்கின்றன?
'மகாபாரத' கால பொருட்கள் கண்டுபிடிப்பா? பெட்-துவாரகை அகழாய்வில் புதிய தகவல்
வரலாற்றுடன் தொடர்புடைய பல மறைந்த ரகசியங்கள் துவாரகையில் இன்றும் புதைந்து இருக்கக்கூடுமென பலர் நம்புகின்றனர். இந்த ரகசியங்களை வெளிக்கொணரப் பல ஆண்டுகளாக முயன்று வரும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது என்ன?
ஒன்றாக பணிபுரிந்தாலும் 'உடன்பிறப்பு' என்பதை அறியாத சகோதரிகள் பல ஆண்டுகள் கழித்து உண்மை அறிந்த கதை
குழந்தையாக இருக்கும்போது, மிகுந்த ஏழ்மையில் இருந்த காரணத்தால் பெற்றோரால் தத்துக் கொடுக்கப்பட்ட இரு சகோதரிகள் ஒரு டாட்டூ மூலமாகப் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்தது எப்படி?
அமெரிக்காவில் சுமார் 1,640 அடி உயர 'மெகா சுனாமி' - அலாஸ்காவில் என்ன நடந்தது?
இந்த நிகழ்வு குறித்த ஒரு புதிய அறிவியல் பகுப்பாய்வு, சிறிய நிலநடுக்கங்கள் ஒரு மிகப்பெரிய நிலச்சரிவைத் தூண்டியதைக் காட்டுகிறது.
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
எத்தியோப்பியாவின் ஹராரி பகுதியில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த பெண் ஒருவர் அரிதான வகையில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
கோழிக் கால் சாப்பிடலாமா? கோழிக்கறியுடன் ஒப்பிடுகையில் அதன் தனித்துவம் என்ன?
கழிவு என நினைத்து தூக்கி வீசப்படும் கோழிக் கால்களுக்கு உலகின் பிற பகுதிகளில் அதிக மதிப்பு இருப்பது ஏன்? அதில் என்னென்ன ஊட்டச்சத்துகள் இருக்கின்றன?
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
மு.க.ஸ்டாலின் தோல்வி: திமுகவின் பின்னடைவுக்கு காரணமான 5 விஷயங்கள்
சுமார் 77 ஆண்டுகள் அரசியல் செயல்பாட்டைக் கொண்டிருக்கும் திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திக்க காரணம் என்ன?
விஜய்க்கு முதல் தேர்தலிலேயே பெருவெற்றி வசப்பட்டது எப்படி?
தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய் இதைச் சாத்தியமாக்கியது எப்படி?
திரை நாயகன் விஜய் தமிழக அரசியல் நாயகனானது எப்படி?
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார். 1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை அவரது கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது. விஜயின் திரைப்படங்களும் அவரது அரசியலும் சொல்வது என்ன? விஜய் சினிமா, அரசியல் இரண்டிலும் தனி பாணியை கடைபிடித்து வென்றது எப்படி?
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யார்? புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு கள யதார்த்தத்தை பிரதிபலித்த கட்சியினரின் மாறுபட்ட உணர்வுகள்
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானபோது பல்வேறு கட்சி அலுவலகங்களில் நிலவிய சூழலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்...
மேற்கு வங்கத்தில் முதன் முறையாக பாஜக ஆட்சி - முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு
மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அந்த மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் இவர் ஆவார். மமதாவின் வலது கரமாக கருதப்பட்ட இவர், பாஜகவில் சேர்ந்த ஆறே ஆண்டுகளில் மாநிலத்தில் அக்கட்சியை அரியணையில் ஏற்றியது எப்படி?
பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை ஒன்றும் செய்யாதா? அமைச்சர் யோசனையும் அறிவியல் உண்மையும்
தற்போது, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை மக்கள் தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.
2050ல் காவிரியில் நீரோட்டம் குறையும் என்று எச்சரிக்கும் புதிய ஆய்வு - எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
காந்திநகர் ஐஐடி (IIT) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் படி, காவேரி ஆற்றின் நீரோட்டம் 2026- 2050-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 3.5% அளவுக்கு குறையக்கூடும். இதனால், எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
'வருவாய் பகிர்வு' முறையில் சம்பளம் பெறக்கோரும் தயாரிப்பாளர்கள் - நடிகர் சங்கம் கூறும் பதில் என்ன?
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் நடிகர்களுக்கு 'வருவாய் பகிர்வு முறை'யில் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாகத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
கோஹினூர் வைரம் 'தென்னிந்திய கோவிலில்' இருந்து முகலாயர் வசமாகி, பிரிட்டன் சென்றது எப்படி?
கோஹினூர் வைரம் அநேகமாக தென்னிந்திய கோவில் ஒன்றில் இருந்த சிலையின் கண்ணில் இருந்து துருக்கியர்களால் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அது பிரிட்டிஷாரின் கைகளுக்குச் சென்றது எப்படி தெரியுமா?
கோடையில் சில நேரங்களில் ஏசி வெடிப்பது ஏன்? - இதனைத் தவிர்க்க உதவும் 5 தீர்வுகள்
புவி வெப்பமடைதலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பமாகத் தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் நகரங்களில் இப்போது முன்பை விட அதிகமாக ஏசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
"நான் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம்" - தேர்வில் முதலிடம் பெற்றும் உருவகேலிக்கு ஆளான பெண் இப்போது கூறுவது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பிராச்சி நிகாமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராச்சி நிகாம் தனது 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் உத்தரப் பிரதேச மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































