இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் உர்ஜித் படேல்

உர்ஜித் படேல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, உர்ஜித் படேல்

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ரகுராம் ராஜன்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ரகுராம் ராஜன்

செப்டம்பர் முதல் வாரத்தில் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, உர்ஜித் படேல் ஆளுநராக பதவியேற்பார்.

தற்போது, நிதிக் கொள்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் துணை ஆளுநரான அவர், அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்படுவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

52 வயதாகும் உர்ஜித் படேல், உலகின் புகழ் பெற்ற ஏல் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றவர்.

இந்தியாவின் நிதிக் கொள்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரைத்த குழுவின் தலைவராக பதவி வகித்தார்.

வருகிற செம்படம்பர் 4-ஆம் தேதி ஆளுநராக அவர் பதவியேற்பார்.