ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள்: தடுக்க என்ன வழி? மருத்துவரின் ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் காய்ய்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பருவகால நோய்கள் வருவது இயல்பு என்றாலும் பெருமளவில் வருவது என்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தகூடியதாக உள்ளது.
இந்த நிலையில் பரவி வரும் ஃப்ளு காய்ச்சல் குறித்து நாம் தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு நோய் பிரச்னை என்றாலே முதலில் பதற்றமடைந்து விடுகிறோம். அதைத் தவிர்க்க வேண்டும் தொடர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலே இப்போது பரவும் ஃப்ளூ வகை காய்ச்சலை எளிமையாக எதிர்கொள்ள முடியும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பாலாஜி.
இதன் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல்
இருமல், சளி
தொண்டை வறட்சி
உடல் சோர்வு ஆகியவை இந்த ஃப்ளூ வகை காய்ச்சல்களின் பொதுவான அறிகுறிகள்.
குழந்தைகளுக்கு பருவகால மாற்றங்களின்போதெல்லாம் வரக்கூடிய மிக மிக பொதுவான அறிகுறிகள்தான் இவை. ஆனால், கொரோனாவுக்குப் பிறகு இந்த அறிகுறிகளின் மீதான பார்வையும் அச்சமும் அதிகரித்துள்ளது என்கிறார் அவர்.
எப்படி பரவும்?
நோய் தொற்றியவரின் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமாகத்தான் இந்த நோய் பரவும். அதே சமயம் தொற்றுள்ளவருடன் மிக மிக நெருக்கமாக இருந்தால் மட்டுமே இந்த தொற்று எளிதில் பரவும். மற்றபடி, காற்றில் பரவும் தன்மை இதற்கு கிடையாது.
தொற்று பாதித்தவர் இருமிய, தும்மிய இடங்களில் கைவைத்துவிட்டு நேரடியாக நம் மூக்கு, முகம் ஆகியவற்றில் வைத்துக்கொண்டால் பரவும்.
எப்படி தவிர்ப்பது?
முறையாக முகக்கவசம் அணிவது.
கைகளைக் கழுவுவது
நீரைக் கொதிக்க வைத்து, ஆறவைத்து குடிப்பது.
தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகியவற்றின் மூலம் இதனை தவிர்க்க முடியும்.

பட மூலாதாரம், Getty Images
பெற்றோர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரை
குழந்தைகளுக்கு ஃப்ளூ காய்ச்சல் பரவுவது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் பாலாஜி மற்றும் பூபதி ஜான் கூறும் அறிவுரைகள்:
- குழந்தைகளின் உடல்நிலை எப்போதும் பெற்றோர்களுக்கு கவலைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், அது பதற்றமாக வெளிப்படக் கூடாது.
- கொரோனா சமயத்தில் கடைபிடித்த அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் இப்போது கடைபிடிப்பது இந்த பருவகால நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
- அறிகுறிகள் ஏறக்குறைய கொரோனாவுடன் ஒத்துப்போவதால், அச்சம் அதிகரிக்க வாய்ப்புண்டு. உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
- பள்ளியில் குழந்தைகள் மிக நெருக்கமாக பழகுவதால் எளிதில் தொற்று பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புண்டு. தொடர்ச்சியாக சோப்பு கொண்டு கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், வீட்டுக்கு வந்ததும் முழுமையாக சோப் கொண்டு சுத்தமாதல் ஆகிவற்றை செய்ய வையுங்கள்.
- குடும்பத்துடன் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த செப்டம்பரில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது இனி வரப்போகும் மழை, குளிர் காலங்களில் ஏற்டவிருக்கும் சிக்கல்களைத் தடுக்கவும் உதவும்.
- முறையான பாதுகாப்பு வழிமுறைகளை நோய்த்தொற்று காலத்தில் பின்பற்றுவது மட்டுமன்றி, தொடர்ந்து வரப்போகும் நாட்களிலும் பின்பற்றுவது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும்.

பட மூலாதாரம், Boobathy John
மேலும், "இந்த தொற்றானது புதிய அச்சுறுத்தக்கூடிய தொற்று அல்ல. ஏற்கனவே ஏற்பட்டுள்ள வகைதான். ஆனாலும், எண்ணிக்கையையும் பரவும் விகிதத்தையும் கொண்டு பார்த்தால் உடனடி நடவடிக்கையும் தயாரிப்பும் தேவை என்று தோன்றுகிறது," என்கிறார் பூபதி ஜான்.
அத்துடன், "இந்த நோயின் அறிகுறிகளை பொறுத்தவரை கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அச்சமோ பதற்றமோ குழந்தைக்கு ஏற்பட விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பெற்றோர்கள் இதை முறையாக கையாள வேண்டும். கைகழுவுதல், வெந்நீர் பருகுதல் உள்ளிட்ட சுகாதாரப் பழக்கங்களை குழந்தைகளின் நடைமுறைப் பழக்கமாகவே மாற்றிவிடவேண்டும்" என்றும் தெரிவிக்கிறார் அவர்.
இதுகுறித்து பிபிசி தமிழுடன் பேசிய தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் மா.சுப்ரமணியன், "இது வழக்கமான பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் வரும் காய்ச்சல்தான். அதிகாரிகள் இதனைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

கீழ்க்கண்ட கட்டுரைகளும் உங்களுக்குப் பிடிக்கும்
தூக்கமின்மை நோயா? உறக்கத்துக்கும் பணத்துக்கும் தொடர்பு உண்டா?
நீங்கள் எவ்வளவு நன்றாக உறங்குகிறீர்கள் என்பதை பொருத்தே, மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள் என்பது தெரியும் என்று யுசி பெர்கலியின் புதிய ஆய்வு கூறுகிறது.
இதயத்தை பாதிக்கும் இரவுப்பணிகள் - எப்படி சமாளிப்பது?
இரவுப்பணி நம்மை சோம்பலாகவும் விரக்தியாகவும் மாற்றக்கூடியது என்பது நமக்கு தெரியும். ஆனால், இது இதயத்துக்கும் கேடு விளைவிக்கும் என்பது பற்றித் தெரியுமா?
மனிதர்கள் இறப்பது ஏன்?
சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.
தனிமை என்பது மன வியாதியா? என்ன காரணம்? தீர்வு என்ன?
சுற்றி நிறைய பேர் இருந்தாலும், பேசுவதற்கு நண்பர்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பது போல சிலருக்குத் தோன்றும். இப்படி ஏற்படுவது ஏன்? இது மனோ வியாதியா? இதற்குத் தீர்வு என்ன?
தூக்கத்திலேயே மாரடைப்பு எப்படி ஏற்படும்?
தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்? எவ்வித முன் அறிகுறிகளும் இன்றி தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுமா, அதைத் தடுப்பது எப்படி?
மனிதர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்?
மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவை என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள
உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?
ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையைப் படியுங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













