உடலில் வேறுவகை ரத்தத்தை ஏற்றினால் என்னவாகும்?

ரத்தம்

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு சிவப்பு ரத்த அணுக்கள் நமது உடலின் தலை முதல் காலின் நுனிவரை பயணம் செய்து ரத்த ஓட்ட அமைப்பில் அதன் பயணத்தை நிறைவு செய்கின்றன.

ஒவ்வொரு நொடியும் உங்களுடைய உடலில் இரண்டு மில்லியன் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குகின்றன. இது ஏற்கனவே நமது உடலில் இறந்த சிவப்பு ரத்த அணுக்களுக்கு மாற்றாக இருக்கின்றன. அதனை எர்த்தோசியடீஸ் என்கிறோம்.

பிபிசிக்காக கணிதவியலாளர் ஹன்னா ஃப்ரே மற்றும் மரபணுவியலாளரும் ஆடம் ரூதர்போர்ட் பிபிசிக்காக தொகுத்த 13 தகவல்களில் ஒன்று. மற்ற 12 தகவல்களை இப்போது பார்க்கலாம்.

1. நமது உடலில் 3கோடி சிவப்பு ரத்த அணுக்கள் உள்ளன

நமது உடலில் இருக்கும் அணுக்களில், சிவப்பு ரத்த அணுக்களே அதிகமாக உள்ளவை. ஆண்களின் உடலில் 26 பில்லியனும், பெண்களின் உடலில் இதுவே சற்று குறைவாக உள்ளது.

இதில் ரத்த தட்டுகளும் (Platelets) அதிகமாக உள்ளது. ஆனால், அதன் எண்ணிக்கை மிகவும் குறைவு. நமது உடலில் உள்ள மொத்த அணுக்களில், 90 சதவீதம் உங்கள் ரத்தத்தில் உள்ளது.

2. நமது உடலில் ஒரு சிவப்பு ரத்த அணு 3 அல்லது 4 மாதங்கள் இருக்கும். இது நமது உடலில் 1,50,000 முறை சுற்றிவரும்

இது நமது உடலில், மணிக்கு 2 கிலோமீட்டர் வேகத்திற்கு, நமது நாடி, நரம்புகளில் ஓடும்.

ரத்தப் பிரிவுகள் - அதிகம் அறியப்படாத தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

3. நமது உடலில் இறந்த சிவப்பு ரத்த அணுக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

நமது உடல் பழைய சிவப்பு ரத்த அணுக்களை அப்படியே வெளியேற்றாது. ஏனென்றால், அதில் இரும்புச்சத்து உள்ளது. இது புதிய சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவும்.

இதற்கு மாறாக, அதிலிருக்கும் இரும்புச்சத்தை அணுக்களைப் பிரித்தெடுத்து, (bilirubin) என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது. இது கல்லீரலை சென்று அடைகிறது. இந்த உறுப்பு அதனை செரிமான அமைப்பிற்கு கொண்டு சேர்கிறது.

4. 30க்கும் மேற்பட்ட ரத்தப்பிரிவுகள் உள்ளன

நமக்கு தெரிந்த ரத்த வகைகள் ஏ, பி, ஏபி மற்றும் ஒ பிரிவு மட்டுமே. ஆனால்,பல ரத்த வகைகள் உள்ளன.

உண்மையில், 30க்கும் ஏற்பட்ட ரத்தப் பிரிவுகளும், அதில் 300 வகையான மாறுப்பட்ட வகைகளும் உள்ளன," என்று செஞ்சிலுவை ரத்த வங்கிக்கு வேலை செய்யும் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஃபளார் கூறுகிறார்.

எல்லா ரத்தப் பிரிவுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எல்லா ரத்தப் பிரிவுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை.

"அவை அனைத்தும் நமது ரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் 'ஆன்டிஜென்கள்' மூலம் வகைப்படுத்தப்படுகின்றன."

"ஆன்டிஜென்கள் மூலக்கூறுகள் (பெரும்பாலும் புரதங்கள், ஆனால் கார்போஹைட்ரேட்டுகள்) நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் திறன் கொண்டவை," என்று அவர் மேலும் கூறினார்.

5. ஆனால், பரிசோதிக்கப்படும் இரண்டு முக்கிய பிரிவுகள்- ABO மற்றும் Rh பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ்

ஏ, பி, ஏபி , அல்லது ஒ ஆகிய நான்கு வகை, ரத்தப் பிரிவுகளில் ஏதேனும் உள்ளதா என்பதை ஏபிஓ (ABO) சோதனை காட்டுகிறது.

Rh சோதனை Rh ஆன்டிஜென் இருப்பதை பரிசோதிக்கிறது.

இவற்றில் துணைப்பிரிவுகள் உள்ளன.

6. வெற்றிகரமான முதல் ரத்த மாற்று சிகிச்சை

வெற்றிகரமான முதல் ரத்த மாற்று சிகிச்சை, 1818 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மகப்பேறு மருத்துவர் ஜேம்ஸ் ப்ளண்டெல் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ரத்தமாற்று சிகிச்சை, ஒரு குழந்தையை பிரசவித்த பெண் மீது நடத்தப்பட்டது.

ப்ளூன்டெல் , அந்த பெண்ணின் கணவரின் கையிலிருந்து ரத்தத்தை எடுத்து ஒரு ஊசியைப் பயன்படுத்தி அந்த பெண் மீது செலுத்தினார். அவர் உயிர் பிழைத்தார். இந்த ரத்த மாற்று சிகிச்சையில் இறந்தவர்கள் ரத்தப் பிரிவுகள் பொருந்தாத காரணத்தால் இறந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

7. வெவ்வேறு ரத்தப் பிரிவுகள் சேர்ந்தால், அதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளாது

ஏபிஓ பரிசோதனை (ABO) செய்த பிறகு, உங்களின் ரத்தப் பிரிவு ஏ, பி அல்லது ஓ வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் .

ஏ ரத்தப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் 'பி' ரத்தப் பிரிவில் இருந்து ரத்தத்தைப் பெற்றால், அவர்களின் உடல், பி ரத்தப் பிரிவில் இருந்து உள்ள அன்னிய புரதங்களைத் தாக்க முயற்சிக்கும்.

ரத்தப் பிரிவுகள் - அதிகம் அறியப்படாத தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

8. உங்களுக்கு ஏபி ரத்தப்பிரிவு இருந்தால், நீங்கள் 'யூனிவர்சல் ரீசிவர்'

உங்களிடம் ஏ மற்றும் பி இருப்பதால், ரத்தமாற்றத்தில் உங்கள் உடல், ஏ மற்றும் பி உள்ள எந்த ரத்தப் பிரிவுகளையும் ஏற்கும்.

9. நீங்கள் 'ஓ'வகை என்றால், நீங்கள் அனைவருக்கும் ரத்தம் கொடுக்கலாம்

'ஓ' ரத்தப்பிரிவில் எந்த ஒரு ரத்தப்பிரிவும் ஏற்றுக்கொள்ளாத புரதம் இல்லை. அதனால், எந்த ரத்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் ரத்தம் கொடுக்கலாம்.

இது மருத்துவமனை அவசர அறைகள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் வைக்கப்படும் ரத்தப் பிரிவாகும். ஏனென்றால், ரத்தம் செலுத்துவதற்கு முன் ரத்த வகையை பரிசோதிக்க நேரம் இருக்காது.

10. உங்கள் ரத்தப் பிரிவு 'ஓ' ஆக இருந்தால், நீங்கள் ஆழமான நரம்பு ரத்த உறைவு நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு

இந்த நோய் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஓர் உறைவு. இந்த நோயால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இது எந்த நேரத்திலும் யாருக்கும் ஏற்படலாம். ஆனால் இந்த ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஆபத்தை குறைக்கிறது.

ரத்தப் பிரிவுகள் - அதிகம் அறியப்படாத தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

11. Rh என்பது ரத்த சிவப்பணுக்களுக்கு வெளியே உள்ள மற்றொரு வகை புரதமாகும்.

'Rh Factor' புரதம் மரபணுக்கள் மூலம் பெறப்படுகிறது. இது உங்கள் உடலில் இருந்தால், நீங்கள் Rh பாசிட்டிவ். உங்கள் உடலில் அது இல்லையென்றால், Rh நெகட்டிவ்

பொதுவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு Rh நெகட்டிவ் இருக்கிறதா என்று சோதிக்கப்படும். உங்கள் குழந்தை Rh பாசிட்டிவ் மற்றும் பிரசவத்தின் போது ஏதேனும் ரத்தப் பிரிவு கலந்தால், தாய் ஒரு நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டலாம். மேலும், ஆன்டிபாடிகளை உருவாக்கலாம், இது அடுத்தடுத்த கர்ப்பங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

கர்ப்ப காலத்தில் Rh factor பரிசோதிக்க வேண்டும்.

'Rh factor' இருக்கிறதா என்பதை கண்டறியப்பட்டு, தேவைப்பட்டால், தாயுக்கு நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தடுக்கவும், எதிர்காலத்தில் கரு உருவாகுவதை பாதுகாக்கவும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தலாம்.

12. சில ரத்தப் பிரிவுகளுக்கு சில சிறப்பம்சங்கள் உள்ளன

உதாரணமாக, உங்களிடம் "டஃபி நெகட்டிவ்" (Duffy Negative) ரத்தம் இருந்தால், உங்களுக்கு மலேரியாவை எதிர்க்கும் திறன் அதிகம்.

மேற்கு ஆப்ரிக்காவில், 95% க்கும் அதிகமான மக்கள் இதன் பயனைப் பெற்றுள்ளனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: