கைரேகைக்காக கட்டைவிரல் தோலை உரித்து ரயில்வே தேர்வில் ஆள்மாறாட்டம்; என்ன ஆனது தெரியுமா?

பட மூலாதாரம், LAXMI PATEL
- எழுதியவர், லக்ஷ்மி பட்டேல்
- பதவி, பிபிசி குஜராத்தி சேவை
தேர்வு எழுதுவதில் ஆள்மாறாட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், விரல்மாறாட்டம் கேள்விப்பட்டதுண்டா? அப்படி ஒரு சம்பவம்தான் குஜராத்தில் நடந்த ரயில்வே தேர்வில் அரங்கேறியுள்ளது.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி திங்கட்கிழமை, இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பின் (RRB) முதல் கட்டத்தேர்வு குஜராத்தில் உள்ள வதோதரா உட்பட இந்தியாவின் எல்லா நகரங்களிலும் நடத்தப்பட்டது. அதில், வதோதராவின் லக்ஷ்மிபுரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒருவரை வதோதரா போலீஸார் கைது செய்துள்ளனர்.
என்ன நடந்தது?
பிகாரைச் சேர்ந்த இவர் தேர்வு எழுதுவதற்காக, உண்மையான தேர்வாளரின் கட்டைவிரல் தோலை தனது கட்டை விரலில் ஒட்டிக்கொண்டு தேர்வு மையத்திற்குள் நுழைந்தார். இதன்மூலம், அந்த நபரின் கைரேகையை பதிவு செய்துவிட்டு தேர்வு எழுதலாம் என்பது திட்டம்.
இதையடுத்து, தேர்வு எழுத வந்த நபரை கைது செய்ததோடு, உண்மையாக தேர்வு எழுத வேண்டியவரையும் வதோதரா போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
உண்மையாக தேர்வு எழுதவேண்டியவரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வதோதரா போலீசார் முடிவு செய்துள்ளனர். போலி நபரின் கட்டை விரலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தோல் மாதிரி, தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ரகசியத்தை கண்டுபிடித்த போலீசார்
இந்திய ரயில்வே சார்பில் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் இந்த தேர்வை நடத்தி வந்தது. டிசிஎஸ் ஊழியர் அகிலேந்திர சிங், தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கை ஸ்கேனிங் கருவி மூலம் மாணவர்களின் கைரேகைகளை சரிபார்த்து வந்தார். ஆனால், மனீஷ்குமார் சம்பு பிரசாத் வந்தபோது அவரிடம் நடத்தப்பட்ட பல சரிபார்ப்பு முயற்சிகள் தோல்வியடைந்தன என்று இந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் எழவே, மனீஷ்குமாரின் கட்டை விரலை பார்த்த அகிலேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். காரணம், கட்டை விரலில் ஒரு தோல் ஒட்டியிருப்பதை அவர் பார்த்தார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், ராஜ்யகுரு குப்தா என்பவருக்கு பதிலாக, தான் தேர்வு எழுத வந்திருப்பதாக மனீஷ் குமார் கூறினார்.
தேர்வு மையத்துக்குள் நுழைந்த பிறகு தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச் சீட்டு சரிபார்க்கப்படுகிறது. அவர்களின் ஸ்கேனிங்கும் பாதுகாப்புப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகு, மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.
அதற்கு முன்பாக அதிநவீன கருவியின் உதவியுடன் தேர்வர்களின் கைரேகைகள் சரிபார்க்கப்படுகின்றன.
மனீஷ் குமார் முதல் கட்ட பரிசோதனையில் கண்காணிப்பாளர்களை ஏமாற்றிவிட்டார். ஆனால் அவர் இரண்டு அல்லது மூன்று முறை சானிடைசர் மூலம் கைகளைக் கழுவியபோது அவரது கட்டைவிரலில் ஒட்டிக்கொண்டிருந்த தோல் வெளியே வந்துவிட்டது.

பட மூலாதாரம், LAXMI PATEL
தேர்வு மேற்பார்வையாளர் அகிலேந்திர சிங் இரண்டு மூன்று முறை மனீஷ் குமாரின் கைரேகையை எடுக்க முயன்றதாகவும், ஆனால் இயந்திரத்தில் கைரேகை பதிவாகவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அவர் கைரேகையை எடுக்க முயன்றார். ஆனால் இம்முறையும் வெற்றி கிடைக்காததால் அவருக்கு சந்தேகம் எழுந்தது.
இதன் போது மனீஷ்குமார் தனது பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டே இருந்தார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது விரலில் சானிடைசர் போடப்பட்டது. இதன் காரணமாக அவரது கட்டை விரலில் ஒட்டியிருந்த தோல் வெளியே வந்தது.
மனீஷ் குமார் மற்றும் ராஜ்யகுரு குப்தா மீது டிசிஎஸ் ஊழியர் ஜஸ்மிம் குமார் கஜ்ஜர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 419, 464, 465, 468 மற்றும் 120(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோசைக்கல் மூலம் தோல் உரிப்பு
"தேர்வு எழுத வந்த போலி நபரும், உண்மையாக தேர்வு எழுதவேண்டியவரும் பிகாரில் உள்ள ஒரே கிராமத்தில் வசிப்பவர்கள். போலி நபர் கட்டைவிரல் ரேகையை பதிவுசெய்து தேர்வு மையத்திற்குள் நுழைந்தார். ஆனால் அடுத்த கட்டத்தில் அவரது முயற்சி வெற்றிபெறவில்லை. இதன் போது அவர் தனது கையை இரண்டு மூன்று முறை சானிடைசர் மூலம் சுத்தம் செய்தார். அவரது கட்டைவிரலில் ஒட்டியிருந்த தோல் வெளியே வந்துவிட்டது," என்று லக்ஷ்மிபுரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூஜா திவாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
"ராஜ்யகுரு தனது கட்டைவிரலை சூடான தோசைக் கல்லில் வைத்ததால், அவரது கட்டைவிரலில் ஒரு பெரிய கொப்பளம் ஏற்பட்டது. அதை உடைத்து அந்ததோல் மூலம் கைரேகை தோலை உருவாக்கியுள்ளனர். இந்த செயல்பாட்டில் எந்த நிபுணரின் உதவியும் பெறப்படவில்லை," என்று காவல்துறை துணை ஆணையர் எஸ்.எம்.வரோதரியா பிபிசியிடம் கூறினார்.

கீழ்க்கண்ட கட்டுரைகளும் உங்களுக்குப் பிடிக்கும்
கொசு நம்மில் சிலரை மட்டுமே கடிக்கும் - ஏன் தெரியுமா?
கொசுக்கள் எல்லோரையும் ஒன்றுபோலவே கடிப்பதில்லை. சிலரை அதிகமாக கடிக்கும் கொசுக்கள், வேறு சிலரை கடிப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?
கன்னித்திரை பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும்
பெண்களைத் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்படும் கன்னித்திரை பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக் கதைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும்
மனிதர்கள் இறப்பது ஏன்?
சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.
மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?
இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர். பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். இதுபற்றிய சுவாரஸ்யமான கட்டுரை.
அதிசயக் கிணறு; தோண்டத் தோண்ட மர்மம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர். இந்தக் கிணறு பற்றித் தெரிந்து கொள்ள
மனிதர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்?
மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவை என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள
உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?
ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












