ரஜினிகாந்த்: "அறிவில் அடங்கியது ஜாதி" - சர்ச்சையாகும் ஆன்மிக பேச்சு

ரஜினிகாந்த்

'அறிவு' என்பது 'புத்தி', 'சிந்தனை', 'நீ யார்?' 'எங்கிருந்து வந்தாய்?', 'ஜாதி' என்று எல்லாவற்றையும் சேர்த்ததுதான் என்று பேசியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவர் பணம், புகழ், பெயர், பெரும் பெரும் அரசியல்வாதிகளை சந்தித்தவன் நான். ஆனால், 10 சதவீதம் கூட எனக்கு நிம்மிதியோ சந்தோஷமோ இல்லை. ஏனென்றால் சந்தோஷமும் நிம்மதியும் நிரந்தமானவை அல்ல," என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அவரது பேச்சு ஆன்மிக ஆதரவாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தபோதும், சமூக ஊடகங்களில் பலரும் அவரது உரைக்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

ரஜினி ரசிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், ரஜினியின் இந்த உரையை வாழ்க்கைப் பாடமாக எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

X பதிவை கடந்து செல்ல, 4

X பதிவின் முடிவு, 4

X பதிவை கடந்து செல்ல, 5

X பதிவின் முடிவு, 5

சென்னையில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற யோகதா சத் சங்கத்தினுடைய நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றிய அவர் பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "வாழும்போது சொத்துகளை விட்டுவிட்டுச் செல்வதை விட, நோயாளியாக இருந்துவிடக்கூடாது. இது அனைவருக்கும் துன்பம். மருத்துவமனைக்குச் செல்லாமலேயே நமது உயிர் பிரிந்துவிட வேண்டும். நான் 2 முறை மருத்துவமனைக்குச் சென்று வந்துவிட்டேன்," என பேசினார்.

வாழ்க்கையில் பணம், பேர், புகழ், உச்சி என அனைத்தும் பார்த்துவிட்டேன். பெரிய பெரிய அரசியல் வாதிகள் அனைவருடனும் பழகிவிட்டேன். ஆனால் 10 சதவீதம் கூட நிம்மதியும் சந்தோஷமும் இல்லை. அவையெல்லாம் தற்காலிகமானதுதான் என ரஜினிகாந்த் கூறினார்.

பாபா பட பின்னணி என்ன?

பாபா திரைப்படத்தில் வரும் காத்தாடி காட்சிக்கான பின்னணி குறித்தும் ரஜினிகாந்த் விவரித்தார்.

"ஒருநாள் காத்தாடி ஒன்று போய்க்கொண்டிருக்கும் போது யோகானந்தா அவருடைய சகோதரியிடம் அந்த காத்தாடியை தன் கைக்கு வரவைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அவர் பெயர் முகுந்தா. அதற்கு அவரது சகோதரி அது எப்படி முடியும் எனக் கேட்க, யோகானந்தா அந்த காத்தாடியை அப்படியே பார்க்கும்போது காத்தாடி தானாக அவர் கைகளில் வந்து விழுகிறது. அதைப் பார்த்த அவரின் அக்கா, "அது ஏதோ தற்செயலாக நடந்தது. நீ மறுபடியும் இன்னொரு காத்தாடியை வர வைத்துக் காட்டு பார்க்கலாம்," என கூறுகிறார்.

இரண்டாவது ஒரு காத்தாடியும் அவரின் கையில் வந்து உட்காரும். அதைத் தான் பாபா படத்தில் வைத்திருந்தேன்,`` என்றார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

முன்னதாக அவர், ஆன்மிகம் குறித்துப் பேசினார். ஒரு பெரிய பாடம் மற்றும் பல புத்தகங்களைப் படித்தாலும், என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்புவதாக தெரிவித்தார். தனது இதயத்திற்கு நெருக்கமான விஷயங்களைத் தொட்டு, மூத்த நடிகர், தான் பல படங்களில் நடித்திருந்தாலும், தனக்கு "ஆத்ம திருப்தியை" கொடுத்தது ஸ்ரீ ராகவேந்திரா மற்றும் பாபா' படங்கள் மட்டுமே என்றார் ரஜினிகாந்த்.அந்த படங்களில் தன்னை நடிக்க வைத்த அந்த மாபெரும் ஆத்மாக்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள் வெளி வந்த பிறகு (முறையே 1985 மற்றும் 2002 இல்) அவர்களைப் பற்றி பலருக்குத் தெரிய வந்தது. பாபா படத்தைப் பார்த்து ஏராளமான மக்கள் யோகதாவில் உறுப்பினர்களானார்கள், சிலர் இமயமலைக்குச் சென்று அனிகேத் குகையைப் பார்வையிட்டனர், அது பின்னர் மூடப்பட்டது.

மஹாவதார் பாபாஜியின் பக்தரான ரஜினிகாந்த், "நான் நடிகனாக உங்கள் முன் நிற்கும் வேளையில் எனது ரசிகர்கள் இருவர் யோக சன்யாசிகளாக மாறிவிட்டனர்" என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

கிரியா யோகாவில் பயிற்சி பெற்ற லஹிரி மஹாஸ்யாவின் சீடரான பரமஹம்ச யோகானந்தரின் குரு, 'பாபாஜி' என்று கூறப்படுகிறது.

பரமஹம்ச யோகானந்தருக்கு சிறு வயது முதலே சிறப்பு சக்திகள் இருந்தன என்றும், பாபா படத்தில் இடம்பெற்ற காத்தாடி சம்பவம் பாபாஜியால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்றும் ரஜினிகாந்த் பேசினார்.

கிரியா யோகா பயிற்சி செய்வதாக அறியப்பட்ட ரஜினிகாந்த், இது மிகவும் எளிமையானது மற்றும் பயனுள்ளது என்று குறிப்பிட்டார். இது முதுகுத்தண்டில் உள்ள சக்கரங்களைச் செயல்படுத்தி ஒருவரின் நல்வாழ்வை மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

"கிரியா யோகாவைக் கற்றுக்கொண்டால் பிரச்சனைகளைச் சந்திக்க மாட்டீர்கள் என்பதல்ல, பிரச்னைகளை எதிர்கொள்ளும் சக்தி, தைரியம் கிடைக்கும்" என்றும் ரஜினி தெரிவித்தார். ஒருவர் கிரியா யோகத்தைப் பயிற்சி செய்தால், தெய்வீகமான நேர்மறைவாதத்திற்கு மாறாக எதிர்மறைவாதத்தின் சுழலில் சிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கும் என்றும் ரஜினி தெரிவித்தார்.

"எனவே, நீங்கள் என்ன ஆக நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் விஷயங்களை அகநிலையாகப் பார்க்காமல் புறநிலையாகப் பார்க்கத் தொடங்குவீர்கள்" என்று அவர் கூறினார்.

அம்பானி, அதானி ஆதரவு போன்றது

பாபாஜி போன்ற குருக்களின் வழிகாட்டும் சக்தி, நமக்கு ஆயிரக்கணக்கான அம்பானிகள் மற்றும் அதானிகளின் ஆதரவைப் போன்றது.

"அவர்கள் நம்மை கவனித்துக் கொள்வார்கள். நபிகள் நாயகம், இயேசு, கிருஷ்ணர், புத்தர், பாபாஜி ஆகியோரின் ஆன்மா நம்மோடு இருக்கும். கிரியா யோகா மூலம் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற நாம் தயாராக வேண்டும், இதன் மூலம் என்னில் ஏற்பட்ட மாற்றத்தை நான் கவனித்தேன்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (YSSI) மூத்த சன்யாசி சுவாமி சுத்தானந்த கிரி, பார்வையாளர்களை சில நிமிடங்கள் தியானம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தபோது, முன்பு மேடையில் தியான நிலையில் ரஜினிகாந்த் அமர்ந்தார். பிறகு அவர் பேசும்போது, "ஓம் குருவே சரணம்" என்று கூறி தமது உரையைத் தொடங்கினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: