குரங்கு அம்மை பாதிப்பு கேரள இளைஞருக்கு உறுதியனது - மாநிலங்களை எச்சரிக்கும் இந்திய அரசு

பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நான்கு நாட்களுக்கு முன்பு திரும்பிய கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் முதலாவதாக மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஆரம்பத்தில் 35 வயதுடைய அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என சுகாதாரத்துறையினர் சந்தேகித்தனர். மேலும் அவரது மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய தொற்று நோயியல் ஆய்வு மையத்துக்கு (என்ஐவி) பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் முடிவு இன்று வெளியானதில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு ஒரு பல்நோக்கு குழுவை உருவாக்கியுள்ளது, இந்த தொற்றுப் பரவலைக் கண்டறியவும், தேவையான சுகாதார நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு உதவுவதற்காகவும் ஒரு குழுவை கேரளாவுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்க இந்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அவருடன் இருந்த கேரளா திரும்பிய நபர் ஜூலை 12ஆம் தேதி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் வியாழக்கிழமை கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
தற்போது, பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதே சமயம், அந்த நபர் தமது பெற்றோர், ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் ஆகியோருடனும் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.


குரங்கு அம்மை பாதிப்புகள் உலக அளவில் பல நாடுகளில் தற்போது பதிவாகி வருகிறது. இதன் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச நுழைவுச்சாவடிகள், மருத்துவமனைகள் மற்றும் அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் குரங்கு அம்மைக்கு எதிராக விழிப்புணர்வைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மாநிலங்களுக்கு இந்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநிலங்கள், யூனியன் பிரேச தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், நோய் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் சுகாதார பரிசோதனை குழுக்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களுக்கும் உரிய பயிற்சியை வழங்க வேண்டும். நோயறிதல், சந்தேகத்திற்குரிய, சாத்தியமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை அறிதல் போன்ற நெறிமுறைகளை சரியாக விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
குரங்கு அம்மை வைரஸ் வேகமாக மாறும் தன்மை கொண்டது. ஆனால் அறிகுறிகள் தோன்றத் தொடங்கியவுடன் சிகிச்சையளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் காலம் 5 முதல் 21 நாட்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உறுப்பு நாடுகளின் கூட்டத்துக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) அடுத்த வாரம் அழைப்பு விடுத்துள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை உலகளாவிய சுகாதார நோயாக அறிவிக்க முடியுமா என்றும் அதற்கு சிகிச்சை அளிக்க ஒரு நிலையான நெறிமுறையை உருவாக்குவது பற்றியும் விவாதிக்க அந்த கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் இதுவரை 60க்கும் மேற்பட்ட நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆஃப்ரிக்காவில் அதிக அளவில் பதிவாகியுள்ளது.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












