BBC தமிழ் இணைய தளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய செய்திகள்

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், இந்த வாரம் வெளியான திரை பிரபலங்கள், பொருளாதாரம், இணையம் மற்றும் ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் சார்ந்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு: தீர்ப்பு விவரம்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு, தனது முன்னாள் மனைவியும் நடிகையுமான ஆம்பர் ஹெர்ட் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

இந்த வழக்கில், ஜானி டெப்புக்கு 15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்கப்படும் என்று அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாகவும், 5 மில்லியன் டாலர் ஆம்பர் ஹெர்ட் தரப்பு தண்டனைத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நடந்த மூன்று வெவ்வேறு விசாரணையில், ஒரு முறை ஆம்பர் ஹெர்ட் தரப்பு வென்றது. இதன் மூலம், நஷ்ட ஈடாக அவருக்கு 2 மில்லியன் டாலர் வழங்கப்படும்.

இந்த வழக்கின் பின்னணியை படிக்க இங்கே சொடுக்குங்கள்

யுபிஎஸ்சி தேர்வு முடிவு: முதலிடம் பிடித்த ஷ்ருதி சர்மாவின் டிப்ஸ்

2021ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் முதல் மூன்று இடங்களை பெண்களே பெற்றுள்ளனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்ருதி சர்மா என்ற பெண் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அன்கிதா அகர்வால் என்ற பெண்ணும் மூன்றாம் இடத்தை காமினி சிங்க்லா என்று பெண்ணும் பிடித்துள்ளனர்.

முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடித்த ஷ்ருதி சர்மா அளிக்கும் டிப்ஸை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறதா?

2022-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது. கொரோனாவின் ஒமிக்ரான் அலை காரணமாக வணிக செயல்பாடுகள் குறைந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளின் தாக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது.

தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஜனவரி - மார்ச் காலாண்டில் 4.1% ஆகவும் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 5.3% ஆகவும் குறைந்துள்ளது.

இதுகுறித்து விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்.

பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மரணத்தில் மர்மமா?

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதை தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உலகில் அதிகரிக்கும் இணைய முடக்கம்: இந்தியாவின் நிலை என்ன?

இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், உலக அளவில் இந்தியாவில் அதிக அளவு இணைய முடக்கம் நடந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதுகுறித்த விரிவான காணொளியை இங்கே கிளிக் செய்து காணுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: