மே தினம்: வெப்ப அலை நாள் ஒன்றில் டெல்லி சுமைத் தொழிலாளர்களின் தளராத வாழ்க்கை - புகைப்படத் தொகுப்பு

- எழுதியவர், ஆ. லட்சுமி காந்த் பாரதி
- பதவி, பிபிசி தமிழ்
வாழ வழியற்றவர்களுக்கு ஊரும் இல்லை. மாநிலமும் இல்லை. இப்படி வாழ்க்கையே சுமையாகிப் போன பலருக்கு சுமைப் பணியே வாழ்வாதாரம் ஆகிவிடுகிறது.
இந்தியத் தலைநகர் டெல்லியின் ஃபதேபுரியின் காரி அருகே உள்ள பாவோலி பகுதியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கைப் பாடுகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு. படங்களை எடுத்தவர், பிபிசி தமிழின் லட்சுமி காந்த் பாரதி:

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC
கொரோனா நோய்த்தொற்று பரவலை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. அப்போது இந்த காரி பாவோலியில் இருந்த பல நூறு தொழிலாளர்கள் வருமானம் இன்றி தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வரக்கூடிய சூழலில் ஊரடங்கு ஏற்படுமோ என்று அச்சப்படுகின்றனர்.

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC
"இந்தப் பகுதியில் சுமார் முப்பது வருடமாக நான் வேலை பார்த்து வருகிறேன்," என்கிறார் சதானந்த் சர்மா. இவர் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்வதாகவும், இவர் குடும்பம் பீகாரில் உள்ளது எனவும் தெரிவித்தார். நாளொன்றுக்கு 200 முதல் 400 ரூபாய் இவருக்கு கூலி கிடைக்கிறதாம்.

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC
டெல்லியில் கடந்த 3 நாட்களாக அதிக வெப்ப அலை வீசும் நிலையில், இவர்களுக்கு இந்தப் பகுதியில் போதுமான குடிநீர் வசதி இல்லை. இருக்கக்கூடிய குடிநீர் குழாயும் பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC

பட மூலாதாரம், Lakshmi Kanth Bharathi / BBC
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்