நரேந்திர மோதியின் பாதுகாப்பு: கோட்டை விட்டது யார்? ப்ளூ புக் விதிமீறலை எப்படி அறிவது?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், SPG

பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்தில் இருந்து ஃபெரோஸ்பூர் அருகே உள்ள நிகழ்ச்சிப் பகுதிக்கு சாலை வழியாக பிரதமர் செல்லும் பாதையில் போராட்டக்குழுவினர் இருப்பார்கள் என உளவுத்துறை எச்சரிக்கை குறிப்புகள் அனுப்பிய பிறகும், பஞ்சாப் மாநில காவல்துறை 'ப்ளூ புக்' எனப்படும் பிரதமரின் பாதுகாப்பு வழிகாட்டுதல் விதிகளைப் பின்பற்றவில்லை என்று இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரதமரின் வருகைக்கான தற்செயல் பாதை திட்டம் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் வட்டாரத்தில் பிரதமரின் வாகனம், அவரது பாதுகாப்பு தொடரணி வாகனங்களுடன் சுமார் 15-20 நிமிடங்கள்வரை பஞ்சாப் மாநில எல்லை மாவட்ட மேம்பாலம் ஒன்றில் சாலைமறியல் செய்த போராட்டக்கார்ரகள் குழுவுக்கு மத்தியில் சிக்கியிருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த புதன்கிழமை "மோசமான வானிலை காரணமாக, பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்திலிருந்து பிரதமரின் வாகன தொடர் அணி (கான்வாய்) சாலை வழியாக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்குப் புறப்பட்டது.

பிரதமர் மோதியின் வாகனம் தியாகிகள் நினைவிடத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மேம்பாலத்திற்கு வந்தபோது, அந்த பாதையில் ​​சில போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

இதனால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டார். பிறகு வேறு வழியின்றி நரேந்திர மோதி குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றார்.

இது பிரதமர் மோதியின் பாதுகாப்பில் பெரும் குளறுபடியாகும் என்று இந்திய உள்துறை செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்தது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், இது பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 'கொலைத் திட்டம்' என்று கடுமையாகக் குற்றம்சாட்டினர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களும், "பிரதமர் பங்கேற்கவிருந்த பேரணிக்கு கூட்டம் அதிகமில்லாத காரணத்தால் அதில் அவர் கொள்ளாமல் திரும்பிச் செல்ல மேம்பால சாலை மறியல் பிரச்னையை குறிப்பிடுகின்றனர்," என்று தெரிவித்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி புதன்கிழமை மாலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "பிரதமரின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதில் பஞ்சாப் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை." என்று தெரிவித்தார்.

மோதி

பட மூலாதாரம், ANI

இருப்பினும், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் இது ஒரு பாதுகாப்புக் குறைபாடுதான் என்றே கருதுகின்றனர்.

குறிப்பாக அந்த பகுதி பாகிஸ்தான் எல்லையில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு பிரதமர் ஒரே இடத்தில் 15 - 20 நிமிடங்கள் வரை நின்றிருப்பது ஆபத்தாகியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அதே நேரத்தில், இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பஞ்சாப் அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் பொறுப்பானவர்கள் கண்டறியப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது குறித்து ஆராய உயர்நிலைக் குழு ஒன்றை அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அமைத்திருக்கிறார்.

விவாதிக்கப்படும் ப்ளூ புக் விதிகள்

இந்த விவகாரத்தில் இந்திய பிரதமரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வகுக்கப்பட்ட ப்ளூ புக் விதிகள் பற்றி விரிவாக பேசப்படுகிறது.

இந்த ப்ளூ புக் எனப்படும் ஆவணம், சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் அவரது பாதுகாப்பிற்கென பிரத்யேகமான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது.

எஸ்பிஜி

பட மூலாதாரம், SPG

"ப்ளூ புக் விதிகளின்படி, பிரதமரின் வருகையின் போது பஞ்சாபில் நடந்ததைப் போன்ற ஏதேனும் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டால், பாதுகாப்பிற்கான தற்செயல் பாதையை மாநில காவல்துறை தயார் செய்ய வேண்டும்" என்று உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக பஞ்சாப் மாநில காவல்துறையுடன் அவர்கள் இடைவிடாது தொடர்பில் இருந்ததாகவும் போராட்டக்காரர்களின் நடமாட்டம் குறித்து அவர்களை எச்சரித்தபோது, பிரதமருக்கு முழு பாதுகாப்பு தருவதாக மாநில காவல் உயரதிகாரிகள் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

பிரதமரின் பாதுகாப்பைப் பொறுத்தவரை சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) வீரர்கள், பிரதமரின் தனி பாதுகாப்பை அவரது அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள். மீதமுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது.

காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதியின் பாதுகாப்பில் குளறுபடி - தவறு செய்தது யார்? இனி என்ன நடக்கும்?

இதில் மாநில அரசுடன் இணைந்து செயல்பட ஏதுவாக குறைந்தது மூன்று முதல் ஒரு வாரத்துக்கு முன்பே பிரதமரின் பாதுகாப்பு குழுவினரின் முன்பாதுகாப்பு குழு சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடும், பாதுகாப்பு ஏற்பாட்டுக்கான கூட்டங்களை நடத்தும்.

இந்த கூட்டங்களில் மாநில உள்துறை செயலாளர், மாநில காவல்துறை தலைமை இயக்குநர், மாநில காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பு அதிகாரி, மத்திய, மாநில உளவுத்துறைகளின் தலைமை அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பிற அரசுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்பர்.

அந்த கூட்டத்தில்தான் பிரதமரின் பயண நிகழ்ச்சி நிரல் ஆலோசிக்கப்படும். மாற்றுத் திட்டங்களும் இந்த கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சோதனை ஒத்திகையும் நடத்தப்படும். இவை எப்படி இருக்க வேண்டும் என்ற விவரங்களையும் நடைமுறைகளையும்தான் ப்ளூ புக் விதிகள் கொண்டிருக்கும்.

இதன் தீவிரம் என்ன?

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி யஷோவர்தன் ஆசாத், பிரதமர் வாகன அணிவகுப்பு எல்லைப் பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் சிக்கியது 'மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு' என்று பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "எல்லையோர மாநிலத்தில் பிரதமரின் வாகன அணிவகுப்பு ஒரு மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் தடைபட்டு நின்றால், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது ஒரு தீவிரமான விஷயம். இது ஒரு பெரிய தவறு. ஏனென்றால், பிரதமர் எங்கு சென்றாலும், அவரது நெருக்கமான பாதுகாப்பை மட்டுமே எஸ்பிஜி மேற்கொள்கிறது. மற்றபடி பிரதமர் எங்கு செல்கிறாரோ அந்த இடத்துக்கு முன்பே ஒரு குழு சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மற்றபடி அவரது பயணத்துக்கான பிற வசதிகள் மற்றும் பாதுகாப்பின் ஒட்டுமொத்த பொறுப்பும் மாநில அரசிடமே உள்ளது" என்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜேவாலா தனது ட்வீட் ஒன்றில் பிரதமர் தனது அசல் திட்டத்தில் இல்லாதவகையில் சாலை வழியாகச் செல்ல முடிவு செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், பிரதமரின் வாகன அணிவகுப்புக்கு ஒரு நிலையான பாதை எப்போதும் இருந்ததில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பதிண்டாவில் இருந்து ஃபெரோஸ்பூருக்கு இடையிலான தூரம் சுமார் 110 கி.மீ. பதிண்டா விமான நிலையத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் வான் பயணம் மேற்கொள்வதாகத் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்தது. சிறிது நேரம் வானிலை சரியாகிவிடும் என்று காத்திருந்தார், ஆனால் அதன் பிறகு சாலை மார்க்கமாகச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

"இதுபோன்ற நேரத்தில் மாற்றுப்பாதை திட்டம் என்பது எப்போதுமே வழக்கத்தில் கையாளப்படக் கூடியதுதான்" என்று யஷோவர்தன் கூறுகிறார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

"பிரதமரின் சாலை வழியாகச் செல்வதற்கான பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், ​​​​அந்த வழியைத் தடையற்றதாக்கியிருக்க வேண்டியது மாநில காவல் துறையின் பொறுப்பு," என்று ஆசாத் கூறுகிறார்.

தமிழக காவல்துறையில் டிஜிபி ஆக பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "வான் வழி திட்டமிடப்பட்ட பயணங்கள் வானிலை காரணமாக மேற்கொள்ளப்படாமல் போனால் சம்பந்தப்பட்ட விமானம் அல்லது ஹெலிகாப்டரின் பைலட் எடுக்கும் முடிவே இறுதியானது. அதுவும் சமீபத்தில் தமிழகத்தின் சூலூரில் பாதுகாப்புப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்துக்குப் பிறகு இந்த விஷயத்தில் பாதுகாப்புப் படையினர் மிகத் தீவிரமாகவே உள்ளனர்," என்கிறார்.

"பஞ்சாப் சம்பவத்தைப் பொறுத்தவரை, 2 மணி நேர பயண தூரத்தில் வழி நெடுகிலும் எந்த பிரச்னையும் இல்லாமல் பிரதமரால் செல்ல முடிந்துள்ளது. ஆனால், நிகழ்ச்சிப் பகுதிக்கு 30 நிமிட பயண தூரத்தில்தான் அவர் சென்ற பாதை குறுக்கே சிலர் சாலை மறியல் செய்துள்ளனர். அங்கு போராட்டக்காரர்கள் திரண்டபோதும், அவர்களை அப்புறப்படுத்த வேண்டியது மாநில காவல்துறையின் பொறுப்பே," என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

"ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், அது பிரதமர் செல்லும் வழியில் சாலை மறியல் செய்து வெளிப்படுத்தப்படும் என்றால் அதை தேச பாதுகாப்புடன் இணைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் எழும். அது பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசின் பிரதமரானாலும் சரி, வேறு கட்சி ஆளும் அரசின் பிரதமரானாலும் சரி - இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரின் பாதுகாப்பு ஏற்பட்ட அச்சுறுத்தலாக மட்டுமே கருத வேண்டும்," என்கிறார் அந்த உயரதிகாரி.

பிரதமரின் பாதுகாப்பில் பலத்த குளறுபடிகள் நடந்துள்ளதாக உத்தரபிரதேச முன்னாள் டிஜிபி விக்ரம் சிங்கும் கூறுகிறார்.

​​"இது ஒரு தவறல்ல, ஒரு பெரிய அலட்சியம். திடீரென பயண பாதை மாற்றியதாக கூறினாலும், அதற்கும் முன்கூட்டியே தயாராகவே திட்டம் இருந்திருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் திடீரென்று திரண்டிருக்கவில்லை, அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். உளவு அமைப்புகள் மூலம் தகவலறிந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தடுக்கப்படவில்லை. அதுதான் தவறு" என்கிறார் விக்ரம் சிங்.

மோதியே விதிமீறிய சம்பவம்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், NARENDRA MODI

2017ஆம் ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட பிரசாரத்தில் பங்கெடுக்க அங்கு சென்றார் பிரதமர் மோதி.

அந்த நேரத்தில் சாலை வழியாக பிரதமர் திட்டமிட்டிருந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்தது. இதனால், இந்த கடல் பயண வாய்ப்பை மோதி பயன்படுத்திக் கொண்டதாக சர்ச்சை எழுந்தது.

தமது பயணத்தின் அங்கமாக ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து வடக்கு குஜராத்தில் உள்ள தரோய் அணைக்கு கடல் விமானத்தில் பயணம் செய்தார். அதற்கு முன்பாக விமானத்துக்கு வெளியே அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்படி அவர் செய்வது பயண திட்டத்தில் இல்லாத செயல்பாடு.

அந்த பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பிரதமர் மோதி ரசித்தபோதும், அவரது செயல்பாடு தங்களுடைய ப்ளூ புக் விதிகளை 'பாதுகாக்கப்படும் நபரே' மீறிய நிகழ்வாக எஸ்பிஜி கருதியது.

ப்ளூ புக் மீறல் மட்டுமின்றி, எஸ்பிஜி பாதுகாப்பை பெறுவோர் குறிப்பிட்ட செயல்பாட்டுத் தரத்தைக் கொண்ட விமானங்களில் மட்டுமே பறக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்துத்துறையின் விதியை மீறி ஒற்றை எஞ்சினைக் கொண்ட கடல் விமானத்தில் மோதி பறந்ததும் அதுவரை நடக்காத நிகழ்வாக கருதப்படுகிறது.

இனி என்ன நடக்கும்?

சிறப்புப் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்படும் நபருக்குரிய பாதுகாப்பு நடவடிக்கையில் இதுபோன்ற பாதுகாப்பு அலட்சிய குற்றச்சாட்டு எழுந்தால், அதற்கு காரணமான சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு உடனடியாக அழைக்க உள்துறை நடவடிக்கை எடுக்கும். இதற்கான கடிதம் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அனுப்பும்.

அவர்களின் செயல்பாடு குறித்து விளக்கம் கோரவும் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அல்லது பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட விவகாரத்தின் தீவிரம் அல்லது அரசு நியமிக்கும் விசாரணைக் குழு தரும் அறிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதுவே, மத்திய பணியில் இருக்கும் காவல்துறை அல்லது உளவுப்பிரிவு அல்லது எஸ்பிஜி உயரதிகாரியின் அலட்சியம் என கண்டறியப்பட்டால், அவர் உடனடியாக பணி இடைநீக்கம் அல்லது சம்பந்தப்பட்ட பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

பஞ்சாப் பயண ஏற்பாடு குளறுபடி விவகாரத்தில் மாநில அரசு ஏற்கெனவே உயர்நிலை குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதே சமயம், மத்திய உள்துறையும் ஒரு விசாரணை குழுவை அமைத்து எங்கு பிரச்னை நடந்தது என்பதை கண்டறிந்து அறிக்கை தர உத்தரவிட்டிருக்கிறது.

எஸ் பி ஜி என்பது என்ன?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், SPG

பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் சிறப்புப் பாதுகாப்புக் குழு 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு 1985இல் எஸ் பி ஜி உருவாக்கப்பட்டது.

இந்தப் படையின் ஆண்டு பட்ஜெட் 375 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும், மேலும் இது நாட்டின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் வலுவான மிக, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அமைப்பாக கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: