சோலி கே பீச்சே கியா ஹே முதல் உ ஊ அண்டவா வரை - இந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்கள் சொல்வதென்ன?

பட மூலாதாரம், SCREENSHOT FROM YOUTUBE
- எழுதியவர், சரண்யா ஹ்ரிஷிகேஷ்
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
குறைந்த ஆடைகளோடு, ஒரு கவர்ச்சிகரமான பாடலுக்கு ஒரு பெண் ஆடுவது போன்ற பாடல் இந்தியாவில் வைரலானது.
கடந்த டிசம்பர் மாதம் வெளியான தெலுங்கு பாடல், ஆண்களின் பார்வையை விமர்சிப்பதாகக் கூறி வெளியான பாடல், பலரின் கவனத்தை ஈர்த்தது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து இந்திய மொழிகளில் பதிவான அப்பாடல், 19 நொடி காணொளியோடு வெளியானது. அனைத்து மொழிகளிலும் பாடல் வரிகளில் தொடர்ந்து கூறப்படுவது ஒன்றுதான், நட்டையோ, குட்டையோ, சேலை அணிந்தவரோ, கவுன் அணிந்தவரோ, இளம்பெண்ணோ, வயதானவரோ பெண்ணால் ஆண்களின் பார்வையிலிருந்து தப்ப முடியாது என்பதுதான்.
பல பெண்கள் இந்தப் பாடலை ரசிக்கவில்லை. இது வெறுமனே ஒரு வித விளம்பரம் என்றும், மிக மோசமான ஒன்று எனவும், ஆண்களின் பார்வையை விமர்சிப்பதாக, அதன் மீதே கட்டமைப்பட்டுள்ள பாடல் என்றே அவர்கள் பார்க்கிறார்கள்.
பெண்கள் தவிர்க்க முடியாத சைரன்கள் என்றும், ஆண்கள் கட்டுப்படுத்த முடியாத பெண்பித்தர்கள் என பொருள்படும் ரீதியில் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சில விமர்சகர்கள் வாதிடுகிறார்கள்.
அப்பாடலில் எல்லாவித பரிட்சயமான சூத்திரத்தின் அம்சங்களும் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஒரு பெண் கதாநாயகன் மீது சாய்ந்து விழும் போது, ஆண்கள் அப்பெண்ணை வெறித்துப் பார்க்கிறார்கள். ஒரு கேமரா தொடர்ந்து ஆடையால் மூடப்படாத அப்பெண்ணின் உடல் அங்கங்களைப் படம் பிடிக்கிறது.
பாலின ரீதியில் மோசமானது என்றாலும் வெற்றி
"நான் பல மொழி பாடல் வரிகளை ஆராய்ந்தேன். எல்லா மொழி பதிப்பிலும் பெண்ணை உணவுப் பொருட்களோடு ஒப்பிடும் ஒரு வரி மட்டும் இருந்தது" என்கிறார் தி நியூஸ் மினிட் தளத்தின் ஆசிரியர்களில் ஒருவரான செளம்யா ராஜேந்திரன். அவர் சினிமா குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
"தமிழில் இனிப்பு என்றும், தெலுங்கில் திராட்சை என்றும், மலையாளத்தில் சர்க்கரை என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்களை உணவுப் பொருளாக பாவித்துவிட்டு, ஆண்களின் வெறித்த பார்வையை விமர்சிப்பதாகக் நியாயப்படுத்துகின்றனர்."
அப்பாடலைப் பார்த்தவர்களில் பலரும் ஆண்கள் தான், அவர்களுக்கு இந்த பாடல் பிடித்திருந்தது. அவர்கள் சமந்தா ரூத் பிரபுவின் ஆடலுக்காக அவரைப் பாராட்டினர். இதுநாள்வரை அவரது நடிப்புக்காக பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட நடிகை, பாலியல் ரீதியிலான சிறு சிறு உணர்வுகளை வெளிப்படுத்தலாம் என்பதில் பார்வையாளர்கள் மிகவும் மகிழ்ந்ததாகவே தெரிகிறது.
அப்பாடலின் முழு காணொளி இதுவரை வெளியாகவில்லை, ஆனால் படம் வெளியாகிவிட்டது. யூடியூப் தளத்தில் தெலுங்கு மொழியில் மட்டும் உ ஊ ஆண்டாவா பாடல் 100 மில்லியன் பார்வையைக் கடந்துள்ளது. அதன் தலைப்பான உ ஊ அண்டாவா பல தினங்களாக டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய ஆண்களின் மொழியில் ஐடம் பாடல் என்றழைக்கப்படும் பாடலில் வரும் பெண்கள் கவர்ச்சிகரமான பெண்களாக இருப்பர். அது எப்போதுமே பாலின ரீதியில் தவறாகவே இருந்துள்ளது, ஆனால் அது வெற்றி பெற்றுள்ளது.
பெரும்பாலான ஐடம் பாடல்களில் பெண்கள், காட்சியிலும் சரி, பாடல் வரிகளிலும் சரி ஒரு சதைப் பிண்டத்தைப் போலத் தான் கருதப்பட்டுள்ளனர்.
"பல ஐட்டம் பாடல்களில் அப்பெண்ணைக் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அவருக்கு எந்த பின் கதையும் இருக்காது. அவர் படத்தில் தோன்றி மறைவார்" என்கிறார் செளம்யா.
இறுக்கமான ஆடை, கவர்ச்சிகரமான உடை, நளினமான நடனம், ஆபாசமான பாடல் வரிகள், பாலியல் உணர்வைத் தூண்டும் விதத்திலான கேமரா கோணங்கள் என பெண்களைப் பொருள் போல காட்சிப்படுத்தப்படும் ஐட்டம் பாடல்களை பல ஆண்டுகாலமாக எதிர்த்து வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் சினிமா ரசிகர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பதால் ஐட்டம் பாடல்கள் மிகவும் பிரபலம்.
ஒரு நல்ல பிரபலமான பாடல், பார்வையாளர்களை திரையரங்கின் பக்கம் ஈர்க்கவும், வசூலைக் குவிக்கவும் அவசியமாக இருந்தது. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் காலத்தில் பாடல்களைச் சார்ந்த வியாபாரம் இன்னும் பெரிதாக வளர்ந்துவிட்டது.
பல தசாப்தங்களாகத் தொடரும் அவலம்

பட மூலாதாரம், Getty Images
ஒரு மோசமான படத்தின் வெற்றிப் பாடல், ஒரு பொது சூத்திரத்தின் அடிப்படையில் இயங்கும் சினிமா உலகம், ஐட்டம் பாடல் என்றழைக்கும், மக்கள் மோசமான பாடல் வரிகள் என்று விமர்சித்த ஒன்றை உருவாக்க உதவியது என, கடந்த 1994ஆம் ஆண்டு பத்திரிகையாளர் அருண் கடியார் என்கிற பத்திரிகையளர் எழுதினார்.
'சோலி கே பீச்சே கியா ஹே' தான் அந்தப் பாடல். உன் மாராப்புக்குப் பின் என்ன இருக்கிறது என்பது அதன் பொருள். அதற்கு வெகுளித்தனமாக கொடுக்கப்பட்ட விடை இதயம். அன்று பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருந்த மாதுரி தீக்ஷித் மார்பில் கை வைத்து, அதற்கு எதார்த்தமான விடை இருக்கலாம் என்று கூறினார்.
மோசமான சொற்கள், ஆபாசமான அசைவுகள் மக்களையும் அரசியல்வாதிகளையும் கொந்தளிக்கச் செய்தன. அப்பாடல் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்த ஊக்குவிக்கிறது என அரசியல்வாதிகள் கூறினர். ஆனால் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
காலப் போக்கில், பாடல்வரிகள் பெண்களை போகப் பொருளாக பாவிக்கவில்லை என்றாலும் ஆடை இன்னும் இறுகிக் கொண்டே, சுருங்கிக் கொண்டே போனது, கழுத்துப் பகுதி தாழ்ந்து கொண்டே போனது, கேமரா பெண்களை பொருளாகவே காட்டியது.
அதனைத் தொடர்ந்து ஐட்டம் பாடல்களில் இந்தி சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கய்ஃப், தீபிகா படுகோன் வரை தோன்றினர்.
"ஒரு மிகப்பெரிய நடிகை மிகவும் கவர்ச்சிகரமான ஐட்டம் பாடலில் இடம் பெறுவதை பார்ப்பதற்கு எல்லாம் பெரிய கற்பனைகள் ஏதுமில்லாத போது, எவ்வளவு பெரிய நாயகி பாடலில் நடிக்கிறார்களோ, அந்த அளவுக்கு அப்பாடல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்" என கடந்த 2010ஆம் ஆண்டு 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையிடம் கூறியிருந்தார் டி சிரிஸ் நிறுவனத்தின் (இந்தியாவின் மிகப் பெரிய இசையமைப்பு நிறுவனங்களில் ஒன்று) உயர் அதிகாரிகளில் ஒருவரான வினோத் பனுசாலி.
இதெல்லாம் போக ஐட்டம் பாடல்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. அவை இரவு கிளப்புகளில் ஒலிக்கவிடப்படுகின்றன, அவ்வளவு ஏன் திருமணங்களில் கூட உற்சாக மனநிலையில் ஒலிக்கவிடப்படுகின்றன.
ஐட்டம் பாடல்கள் பெண்களுக்கு வலு சேர்க்காதா?

பட மூலாதாரம், FACEBOOK/ANARKALIOFAARAH
"நீங்கள் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை அணுகும் விதம்தான், உங்கள் கதை சொல்லும் விதத்தையும், கேமராவின் இடத்தையும் தீர்மானிக்கும்" என்கிறார் 2017ஆம் ஆண்டு வெளியான அனார்கலி ஆஃப் ஆரா என்கிற படத்தை எழுதி இயக்கிய அவினாஷ் தாஸ். அக்கதை பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாடகர் மற்றும் நடனக் கலைஞரைப் பற்றியது.
அனார்கலி பாத்திரத்தை ஸ்வரா பாஸ்கர் ஏற்று நடித்தார். இரட்டை பொருள் தொனிக்கக் கூடிய பல வசனங்கள் மற்றும் பல நடனக் காட்சிகள் இருந்தும், இயக்குநர் அவரை ஒரு பொருளாகக் காட்டவில்லை. அவரது உடலை கேமரா நெருக்கத்தில் காட்டவில்லை. அவரோடு ஆடுபவர்களையும், அப்பெண்ணை வெறித்துப் பார்க்கும் ஆண்களையும் காட்டியது.
ஐட்டம் பாடல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அனார்கலி படத்தின் இறுதியில் ஒரு பழிவாங்குவது போன்ற பாடலுக்கு ஆடுவார். தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சக்தி வாய்ந்த மனிதர்களை வரிசையாக மேடைக்கு அழைப்பார்.
அப்படம் வணிக ரீதியில் பெரிய வெற்றியைக் காணவில்லை என்றாலும், பல விமர்சகர்கள், பெண்ணை அவரது பாலினத்துக்குள் காட்டியதற்காக பாராட்டினர்.
"பெண்ணின் அங்கங்களை மார்பகம், தொப்புள், அசைக்கும் இடுப்பு என சிறு சிறு பகுதிகளாக பார்க்கும் போது, நீங்கள் அப்பெண்ணின் உடலை சூறையாடுகிறீர்கள்" என இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகை ஷபானா அஸ்மி கடந்த 2018ஆம் ஆண்டு கூறினார். பெரும்பாலான நேரங்களில் ஐட்டம் பாடல்களில் இடம் பெறும் பெண்கள் ஆண்களின் பார்வையில் சரணடைகிறார்கள் என்றும் கூறினார்.
இக்கருத்தை பெண்களே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஐட்டம் பாடல்களில் தான் எப்போதுமே பொருளைப் போன்று பாவிக்கப்பட்டதாக உணரவில்லை என்கிறார் மலைகா அரோரா. 2012ஆம் ஆண்டு பிரபலமான ஐட்டம் பாடலில் நடித்ததை தான் ரசித்ததாக கத்ரீனா கய்ஃப் கூறினார்.
சில நேரங்களில் ஐட்டம் பாடல்கள் பெண்மையை உயர்த்திப் பிடிக்கவும் கொண்டாடவும்தான் என ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. அப்படி செய்யும் படங்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றன. அப்படிப்பட்ட ஐட்டம் பாடல்கள் பார்வையாளர்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்ப்பதே அதை பரிசோதிப்பதற்கான நல்ல வழி என்கிறார் செளமியா.
பிற செய்திகள்:
- ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் முள்வேலிகளை அகற்றும் தாலிபன்கள் - என்ன நடக்கிறது?
- இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன?
- இந்தியா, பாகிஸ்தான் இடையே சமய சுற்றுலா - இதயங்களை வெல்லுமா இந்த முன்முயற்சி?
- சென்னை ரயில் நிலைய கொள்ளை: மனைவியோடு ரயில்வே ஊழியர் சிக்கியது எப்படி?
- ‘முஸ்லிம் ஹைக்கர்ஸ்’: விமர்சனங்களை கடந்து பயணத்தைத் தொடரும் இளைஞர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








