பிபின் ராவத்: இந்தியாவில் வான் விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்

பட மூலாதாரம், ANI
தமிழகத்தின் குன்னூரில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இவர் பயணம் செய்த, Mi-17V-5 உலகின் அதிநவீன போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும். இது துருப்புக்கள், ஆயுதங்களை ஏந்திச் செல்வது, தீயணைப்பு உதவி, ரோந்து மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர் கடல்சார் வானிலை மற்றும் பாலைவன சூழ்நிலைகளில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமான ஓடுதளம் இல்லாத இடங்களில் இந்த ஹெலிகாப்டர் மூலம் விஐபிகள் அவ்விடங்களுக்கு செல்வதாககப பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் இந்த ஹெலிகாப்டர் மூலம் லடாக், கேதார்நாத் போன்ற பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்பு அமைச்சர் போன்ற விவிஐபிக்கள் தொலைதூர பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இந்தியாவில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல விபத்துக்கள் நடந்துள்ளன, இதில் நாட்டின் முக்கிய நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
சஞ்சய் காந்தி
சஞ்சய் காந்தியின் விமானம் விபத்துக்குள்ளானது மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் விவாதிக்கப்பட்ட ஒன்று. இந்திரா காந்தியின் இளைய மகனும் ராஜீவ் காந்தியின் சகோதரருமான சஞ்சய் காந்தியின் விமானம் 1980 ஜூன் 23 அன்று டெல்லியில் விழுந்து நொறுங்கியது.
மாதவ்ராவ் சிந்தியா

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 2001- காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தின் போகான் தெஹ்சில் அருகே மோட்டா என்ற இடத்தில் விமான விபத்தில் இறந்தார். ஒரு கூட்டத்தில் உரையாற்ற சிந்தியா கான்பூர் சென்று கொண்டிருந்தார்.
அவருடன் மேலும் 6 பேர் விமானத்தில் இருந்தனர். ஜிண்டால் குழுமத்தின் 10 இருக்கைகள் கொண்ட செஸ்னா சி90 விமானம் இவர்களை ஏற்றிக்கொண்டு புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் ஆக்ராவில் இருந்து 85 கிமீ தொலைவில் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த அனைவரும் பலியாகினர்.
மாதவ்ராவ் சிந்தியா காங்கிரஸின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார். காங்கிரஸில் அவரது எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் நம்பப்பட்டது.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 2009- அப்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மற்றும் 4 பேர் பயணித்த ஹெலிகாப்டர் நல்லாமாலா காட்டுப் பகுதியில் காணாமல் போனது. ராணுவத்தின் உதவியுடன் இந்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. செப்டம்பர் 3ஆம் தேதி குர்னூலில் இருந்து 74 கி.மீ தொலைவில் உள்ள ருத்ரகொண்டா மலை உச்சியில் ஹெலிகாப்டரின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.
டோர்ஜி காண்டு
ஏப்ரல் 2011 - அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். காண்டூ நான்கு இருக்கைகள் கொண்ட ஒற்றை எஞ்சின் பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் ஏஎஸ்-பி350-பி3 இல் பயணம் செய்தார். தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் அவரது ஹெலிகாப்டர் காணாமல் போனது. அவரது ஹெலிகாப்டர் நான்கு நாட்களாக காணவில்லை. ஐந்தாவது நாளில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைவுகளை தேடுதல் குழு கண்டுபிடித்தது மற்றும் அதில் இருந்த ஐந்து பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜி.எம்.சி. பாலயோகி

பட மூலாதாரம், PIB
மார்ச் 2002 - ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெல் 206 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் ஜிஎம்சி பாலயோகி இறந்தார். பெல் 206 ஒரு தனியார் ஹெலிகாப்டர், அதில் பாலயோகி, அவரது மெய்க்காப்பாளர் மற்றும் உதவியாளர் இருந்தனர். தொழில்நுட்பக் கோளாறே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஓ.பி.ஜிண்டால்
ஏப்ரல் 2005 - நன்கு அறியப்பட்ட எஃகு முதலாளியும் அரசியல்வாதியுமான OP ஜிண்தல் விமான விபத்தில் கொல்லப்பட்டார். இந்த விபத்தில் ஹரியானா முன்னாள் முதல்வர் பன்ஷீலாலின் மகனும் விமானியுமான சுரிந்தர் சிங்கும் உயிரிழந்தார். சண்டிகரில் இருந்து டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
அப்போது ஹரியானாவின் எரிசக்தி அமைச்சராக இருந்த ஓபி ஜிண்தல் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக கருதப்பட்டார். அந்த ஆண்டு, ஜிண்தல் உலகின் 548வது பணக்காரராக ஃபோர்ப்ஸால் பெயரிடப்பட்டார்.
மே 1973 - முன்னாள் இரும்பு மற்றும் எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் மோகன் குமாரமங்கலமும் விமான விபத்தில் இறந்தார்.
பிற செய்திகள்:
- ஒமிக்ரான் திரிபுக்கு தென்னாப்பிரிக்காவில் குறைவாக தடுப்பூசி செலுத்தியது ஒரு காரணமா?
- 450 குவாட்ரில்லியன் கிமீ நீளம் கொண்ட பூஞ்சை வலையமைப்புகள் - சுற்றுச்சூழலுக்குப் பயக்கும் நன்மை என்ன?
- ஒமிக்ரான்: தமிழ்நாட்டில் மரபணு மூலக்கூறு ஆய்வு அலட்சியப்படுத்தப்படுகிறதா?
- மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும்
- மோதி - புதின் சந்திப்பு: இந்திய, ரஷ்ய உறவை அமெரிக்கா, சீனா விரும்பவில்லையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












