கரையைக் கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் வடக்கு தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் வேகமாகக் காற்று வீசி வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளதாக இன்று மதியம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரம் - வட தமிழகக் கடற்கரை பகுதியில் சென்னை அருகே கடந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சென்னை மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
வானிலை ஆய்வு மையத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த முக்கியத் தகவல்கள் இதோ.
- வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரையான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையளவு 40 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 26 சென்டிமீட்டர். இதுவரை பெய்துள்ள மழை 54 சதவீதம் இயல்பை விட அதிகம்.
- சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த ஆம் தேதி1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் பதிவான மழையளவு 74 சென்டி மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 42 சென்டிமீட்டர். இது வழக்கத்தைவிட 77 சதவீதம் அதிகம்.
- தால் திருவள்ளூர், சென்னை,,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் தரைக் காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் தமிழக கடற்கரை கடலோரப் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைவதற்கான வாய்ப்பு தற்போதைய நிலையில் இல்லை. கரையைக் கடக்கும்போது இப்போதைய அளவு வலுவுடனே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- மழை முன்னறிவிப்பு பொருத்தவரையில் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும் சில பகுதியில் அதி கனமழை இருக்கக்கூடும்.
- இன்று (நவம்பர் 11) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற வட மாவட்டங்கள் மற்றும் புதுவை - காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 சென்டி மீட்டரும் சோழவரத்தில் 22 சென்டி மீட்டரும் பதிவாகியுள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அதி கனமழை மூன்று இடங்களிலும்,. மிக கனமழை 23 இடங்களிலும், கனமழை 21 இடங்களிலும் பதிவாகி உள்ளது.
- நாளை 12 (நவம்பர் 12) நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை - காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பிற செய்திகள்:
- `பருவநிலை பிரச்னையை எதிர்கொள்ள சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்` - COP26 மாநாட்டில் வெளியான அறிவிப்பு
- 'அந்த 3 ஓவர்கள்' இங்கிலாந்தை நியூசிலாந்து வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
- முதல் உடலுறவும் கற்பும்: 'கன்னித் தன்மை' என்பது ஒரேயொரு கணத்துடன் முடிந்து போவதா?
- மன நோயாளி என அடைக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை போராடி மீட்ட தாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








