பாரத் பந்த்: பஞ்சாப்-ஹரியாணாவில் ரயில் சேவையை முடக்கிய விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஹரியாணாவில் இருந்து டெல்லிக்கு வரும் குருகிராம் நெடுஞ்சாலையில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல்

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள், இந்தியா முழுவதும் இன்று அவைப்பு விடுத்திருந்த 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு வட மாநிலங்களில் அதிக தாக்கம் காணப்பட்டது.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு சட்டபூர்வ அனுமதி கொடுக்கப்படாதபோதும், காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களில் விவாசியகள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளபோதும், பல இடங்கள் அடைக்கப்பட்டு தங்களின் எதிர்ப்பை சிலர் பதிவு செய்தனர்.

மத்திய அரசின் வேளாண்சட்டங்களை திரும்ப பெறவலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை ரயில் நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், ரயில் நிலையம் முன்பாக கோவை மக்களவை உறுப்பினர் பி்.ஆர்.நடராஜன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அண்ணா சாலை பகுதியில் பேரணியாக செல்ல விவசாயிகள் முயன்றனர். காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தள்ளிக் கொண்டு அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றபோது, அவர்களை காவல்துறையினர் தடுத்து காவல் வாகனங்களில் ஏற்றினர்.

விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அமைப்பினர்

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்ட காணொளியில், காவல்துறையினருக்கும் தடுப்புகளை தள்ளிக் கொண்டு முன்னேறிய விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

விவசாயிகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பந்த் நடத்த அழைப்பு விடுத்தனர். அதன் தாக்கம் வட மாநிலங்களில் அதிகமாக காணப்பட்டது.

ஹரியாணா எல்லை: பாரத் பந்த் காரணமாக, குருகிராம்-டெல்லி எல்லையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எல்லை பகுதிகளில் விவசாயிகளின் எண்ணிக்கையை விட, அதிக அளவில் டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் ஒழ்வொன்றாக சோதனை செய்வதே இந்த நெரிசலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உத்தர பிரதேச எல்லை: டெல்லி மற்றும் நொய்டாவை இணைக்கும் டிஎன்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. காஜிபூர் எல்லையில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு டெல்லி காவல்துறை மக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது.

காஜிபூர் எல்லை அருகே உள்ள டெல்லி-மீரட் விரைவு சாலை மூடப்பட்டதால், இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், தேசிய தலைநகர் வலய பகுதிகளில் இருந்து டெல்லிக்கு வர நேரந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

காஜியாபாத் மற்றும் நிஜாமுதீன் பகுதி நெடுஞ்சாலையை காஜியாபாத் சாலையை காவல்துறை மூடியுள்ளது.

மூத்த போலீஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி செல்லும் பல பாதைகளி் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியது. சிலஇடங்களில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபடுதவாக வந்த தகவலையடுத்து, ஹாபூரிலிருந்து காஜியாபாத்துக்கு வரும் ரயில்கள் நொய்டாவை நோக்கி திருப்பி விடப்பட்டன.

இருப்பினும், காஜிபூர் எல்லை தவிர, டெல்லி மற்றும் காஜியாபாத் இடையே உள்ள மற்ற மூன்று எல்லைகள் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நொய்டா மற்றும் டெல்லி இடையே உள்ள சாலைகளும் திறக்கப்பட்டிருந்தன. அந்த பாதைகளில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் அசாதாரணமாக போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

ஹரியாணா மற்றும் பஞ்சாபில் ரயில் பாதைகளில் விவசாயிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பகதூர்கர் ரயில் நிலைய தண்டவாளத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

ஹரியாணாவில் உள்ள பகதூர்கர் நிலையத்தில், விவசாயிகள் ரயில் பாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், தேவிதாஸ்பூரில் உள்ள அமிர்தசரஸ்-டெல்லி ரயில்வே பாதையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்திருப்பதால், டெல்லி, அம்பாலா மற்றும் ஃபெரோஸ்பூர் கோட்டங்களில் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வேயின் கூற்றுப்படி, போராட்டக்காரர்கள் டெல்லி கோட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தண்டவாளத்தை அமர்ந்து ரயில் போக்குவரத்துக்கு தடங்கலை ஏற்படுத்தினர். இதனால் அம்பாலா மற்றும் ஃபெரோஸ்பூர் கோட்டங்களில் சுமார் 25 ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் உட்பட பல நகரங்களில் விவசாயிகளின் பந்த் காரணமாக, அதிகாலை 5 மணி முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிகாரில் பந்த் காரணமாக, பீகாரின் ஹாஜிபூர்-முசாபர்பூர் சாலை மற்றும் மகாத்மா காந்தி சேது பாட்னாவை வடக்கு பீகாருடன் இணைக்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்னிந்தியா வரை பரவிய பந்த்

பாரத் பந்த்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கேரளாவின் திருவனந்தபுரத்தில் வெறிச்சோடிய சாலைகள்

பாரத் பந்தின் விளைவு வட இந்தியாவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிலிருந்து தென் மாநிலமான கேரளாவரை விரிவடைந்திருந்தது. அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது.

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடக்கும் சில படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கேரளாவில், LDF மற்றும் UDF உடன் இணைந்த தொழிற்சங்கங்கள் பாரத் பந்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

இந்த நிலையில், பாரத் கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகெய்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, "விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு அடையாள போராட்டமாக இருக்கும். எனவே பொதுமக்கள் பிற்பகலுக்குப் பிறகு வெளியே வாருங்கள்," என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :