தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்துகள் திமுகவுக்கு ஆபத்தாக மாறுமா?

@PTRMADURAI, TWITTER

பட மூலாதாரம், @PTRMADURAI, TWITTER

படக்குறிப்பு, பி.டி.ஆர் என்று பரவலாக அறியப்படும் தமிழ்நாடு நிதியமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமது சமூக ஊடக பக்கங்களில் வெளியிடும் கருத்துகள் சமீபத்திய மாதங்களாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது பரவலான சர்ச்சையை தோற்றுவித்து வருகின்றன.

மாநில நிதியமைச்சர் பணிக்கு மத்தியில் அவர் சமூக ஊடகங்களில் மிகவும் தீவிர பங்கேற்பாளராக இருப்பது ட்விட்டர் பக்கத்தில்தான். அதன் மூலம் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தனி நபர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் தனித்தனியாக ட்வீட் செய்வது அல்லது பொது விவகாரங்களில் கருத்து வெளியிடுவது என்று அவர் இடுகைகளை பதிவிடுவதும் அதற்கு பாரதிய ஜனதா கட்சி அல்லது அதனுடன் தொடர்புடைய கட்சியினர் எதிர்வினையாற்றுவதும் தொடர்கதையாகி விட்டன.

சில தினங்களுக்கு முன்பு லக்னெளவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தபோது அதில்மாநில நிதியமைச்சரான நீங்கள் ஏன் பங்கேற்வில்லை என்று கேட்கப்பட்டபோது, அவர், "வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். உரிய நேரத்தில் லக்னெள செல்ல இயலவில்லை," என்று செய்தியாளர்களிடம் எதேச்சையாக பேசினார்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பொறுப்புள்ள அமைச்சர் எந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், அதிமுகவினர் சிலரும் பிடிஆரை விமர்சிக்கத் தொடங்கினர்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது, பிடிஆரின் கருத்தை குறிப்பிட்டு, "உறவினரின் வளைகாப்பு விழாவில்" கலந்து கொண்டதால், லக்னெளவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து பதில் அளித்த பிடிஆர், "அது உறவினர் வீட்டு விழா இல்லை, சமுதாய வளைகாப்பு விழா," என குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மேலும், ட்விட்டரில் பகிரப்பட்ட தமது செய்தியாளர் சந்திப்பு காணொளிக்கு பதிலளிக்கும் விதமாக இடுகையை பதிவிட்ட பிடிஆர், அண்ணாமலையை கடுமையாகச் சாடினார்.

"சாகும்வரை தன்னை கன்னடர் என்று கூறியவர், இப்போது நூறு சதவீதம் தமிழர் என்கிறார். அச்சுறுத்தல் விடுக்கிறார், போலிச் செய்தியை உருவாக்குவோரின் தலைவராக மாறி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

பெட்ரோல், டீசல் மீதான ஜிஎஸ்டி விலையில் அவரது நிலைப்பாடு அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் கடை பிடிக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயக்குமாருடன் மோதல்

அதிமுக

பட மூலாதாரம், D. JAYAKUMAR

படக்குறிப்பு, டி. ஜெயக்குமார், தமிழக முன்னாள் நிதியமைச்சர்

முன்னதாக, செப்டம்பர் 21ஆம் தேதி தமிழக முன்னாள் நிதியமைச்சர் டி. ஜெயக்குமாரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம் தருவதாகவும் நிதியமைச்சராக அவர் தமது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா என்று தமது கைப்பட எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில் பிடிஆரின் ட்விட்டர் கணக்கை டேக் செய்திருந்தார்.

அவரது இந்த பதிவுக்கும் பதில் இடுகையை பதிவிட்ட பிடிஆர், ஜிஎஸ்டி கவுன்சில் நடைமுறைகளை புரியாதவர்கள் கருத்துகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ஒருவரே சிக்குவார் என எதிர்பார்க்கவில்லை. நான் எனது கருத்துகளை 14 பக்க குறிப்பில் அனுப்பி அதை மத்திய நிதியமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனது குறிப்புகளை மாநில நிதித்துறை செயலாளரும் பதிவு செய்தார் என்று பிடிஆர் கூறியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து, முன்னாள் நிதியமைச்சர் ஜெயக்குமாரின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, "500+ பக்க நிகழ்ச்சி நிரலைப் படித்து நான் GSTCக்கு எழுதிய அறிக்கை https://cutt.ly/UEleusf இது.

"அண்ணன்" @offiofDJக்கு 2 கேள்விகள். 1) நீங்கள் எத்தனை கூட்டங்களின் நிரல்களைப் படித்தீர்கள் 2) 30 கூட்டங்களில் TN சமர்ப்பித்ததில் 1 வார்த்தையாவது எழுதினீர்களா அல்லது CTதுறை கொடுத்த உரையைப் படித்தீர்களா? என்று கேள்வி கேட்டிருந்தார்.

அவரது இந்த கருத்தும் மீண்டும் விவாதப்பொருளானது. இந்த விவகாரங்கள் எல்லாம் செப்டம்பர் 20 முதல் கடந்த வார இறுதி வரையிலான நாட்களில் நடந்தவை.

இதற்கிடையே, திமுகவின் செய்தித் தொடர்பாளரும் எம்.பியுமான டிகே.எஸ் இளங்கோவன் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது, "பிடிஆர் எளிதில் எரிச்சல் அடைகிறார். அவர் பேசுவதில் பெரும்பாலான பேச்சுகள் அவர் ஆத்திரமடைவதன் வெளிப்பாடாகவே உள்ளது. அவர் யாரையும் வம்புக்கு அழைப்பதில்லை, வம்புக்கு பேசுவதில்லை. ஆனால், மற்றவர்களின் பேச்சால் எளிதில் ஆத்திரமடைகிறார். ஓர் அரசியல்வாதியாக தன்னை அவர் கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்," என்று கூறியிருந்தார்.

அந்த பேட்டி தொடர்பாக சிலர் சமூக ஊடக பக்கம் வாயிலாக பிடிஆரிடம் கேள்வி எழுப்பியபோது, பெயரை குறிப்பிடாமல் சர்ச்சைக்குரிய வரியில் கருத்துகளை வெளியிட்ட பிடிஆர். சில மணி நேரத்தில் அந்த இடுகையை நீக்கினார்.

இந்த நிலையில், திமுகவின் மற்றொரு மூத்த தலைவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன், "தன் பொறுப்பை மறந்து, தரமற்று பேசும் திமிர்த்தனங்கள் கூடாது. அது தரம், தகுதியற்ற மனிதரின் போக்கு." என்று எவரது பெயரையும் குறிப்பிடாமல் ஓர் இடுகையை பதிவு செய்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இத்தகைய சூழலில்தான் தமிழக நிதியமைச்சர் தியாகராஜனை ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்புமுறை சீர்திருத்த குழுவில் உறுப்பினராக இந்திய நிதியமைச்சகம் நியமித்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்று நன்றி தெரிவித்துள்ள பிடிஆர், மத்திய அரசுடனும் பிற மாநிலங்களுடனும் சேர்ந்து, ஒட்டுமொத்த இந்தியாவின் நன்மைக்காகவும் பணியாற்றுவதாக கூறி ஓர் இடுகையை கடந்த 26ஆம் தேதி பதிவு செய்தார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

கடந்த மே 28ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.

இதில் பேசிய தமிழக நிதியமைச்சர், `ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு' என்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் கொள்கை ஏற்கத்தக்கதல்ல என்றும், `ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகையைக் கணக்கில் கொள்ள வேண்டும்' என்றும் கூறினார்.

ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்வினை

''ஒரு சிறிய மாநிலமாக இருப்பதால் கோவாவின் குரலைப் பறிக்க ஜி.எஸ்.டி கவுன்சிலில் முயற்சி செய்யப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதற்காகத் தமிழக நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் மாநில நிதியமைச்சர்கள் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என கோவா சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ கூறியிருந்தார். அவரது அந்த கருத்தை பலரும் எதிர்த்தனர்.

இந்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ''ஜி.எஸ்.டி கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் நமது ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம். நமது மாநிலத்தின் பெருமையை இந்த செயல் கெடுக்கிறது. பிடிஆர் மன்னிப்பு கோர வேண்டும்'' என ட்வீட் செய்திருந்தார்.

சமூக வலைதளத்தில் மிகவும் தீவிர பங்கேற்பாளரான தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விஷயங்கள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவிப்பார். இந்த நிலையில், வானதி சீனிவாசனுக்கு ட்விட்டரிலே பதில் அளித்த அவர்,'' உங்கள் பொய்களில் என்னை `டேக்' செய்வதை நிறுத்திவிட்டு, ஒரு மாறுதலுக்காக உண்மையாக வேலை செய்ய முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே ஒரு பிறவிப்பொய்யரா? அல்லது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் யாரோ ஒருவர் யாரையோ அவமதித்து விட்டதாகக் கருதும் அளவுக்குக் குறைந்த ஐ.க்யூ கொண்டவரா? இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்,'' என கூறியிருந்தார்.

வானதி சீனிவாசன்
படக்குறிப்பு, வானதி சீனிவாசன்

இதற்கும் ட்விட்டரிலே பதில் அளித்த வானதி சீனிவாசன்,'' உங்கள் வார்த்தைகளில் உங்கள் அரசியல் முதிர்ச்சி வெளிப்படுகிறது. மக்களைத் தனிப்பட்ட முறையில் அவமதிப்பது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது உங்கள் தன்மைக்கு சான்றாகும்.'' எனக் கூறியுள்ளார்.

மேலும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னை ட்விட்டரில் ப்ளாக் செய்த ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்ட வானதி,'' நமது நிதியமைச்சரால் விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது. நீங்கள் என்னைப் பொய் கூறுபவர் அல்லது குறைந்த ஐ.க்யூ கொண்டவர் என அழைக்கலாம். ஆனால், இதனால் உண்மை மாறாது. ஹெச். ராஜா மற்றும் ஜக்கி வாசுதேவ் குறித்த உங்கள் கருத்துகள் உங்களது மோசமான தன்மையை வெளிப்படுத்துகின்றன'' என கூறியுள்ளார்.

''துர்நாற்றத்தை தவிர்க்க ஒருவர் ஜன்னல்களை தாழிட்டுக் கொள்ளும் சாதாரண மனிதரைப் போல உங்களைப் போன்றவர்களை நான் ப்ளாக் செய்து விடுவேன். உங்களிடம் 'நல்லவர்' என்ற சான்றிதழைப் பெறுவதில் அர்த்தமில்லை. தயவு செய்து என் நேரத்தை வீணாக்காதீர்கள்'' என பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

இந்த இருவர் இடையிலான வார்த்தை போர், சமூக ஊடகங்களில் திமுக மற்றும் பாஜகவினர் இடையிலான சண்டையாக மாறி பின்னர் அதுவே பிடிஆரை பாஜகவினர் இலக்கு வைக்க காரணமானது.

வானதி

பட மூலாதாரம், VANATHI

"அமைச்சருக்கு நாவடக்கம் அவசியம்"

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிபிசி தமிழிடம் கூறும்போது, பிடிஆரின் நாவடக்கம், அவரது அரசியல் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவை என்று குறிப்பிட்டார். பிடிஆரின் செயல்பாடுகள் எத்தகைய ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் குபேந்திரன் விரிவாக பேசினார்.

"திமுகவில் எப்போதும் மேடைப்பேச்சாளர்கள் வேறு மாதிரி பேசுவார்கள், தலைவர்கள் வேறு மாதிரி பேசுவார்கள். தலைவர்கள் ஒவ்வொரு பிரச்னைக்கும் பதிலடி கொடுப்பது சரியாக வராது. ஆனால், ஊர், ஊராக பேசும் மேடைப் பேச்சாளர்கள் எப்படி வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்."

"இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களும் சரி, கட்சியில் நிர்வாகி பொறுப்பில் இருக்கும் தலைவர்களும் சரி - சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிரும்போது, அவை என்ன மாதிரியான வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்," என்று குபேந்திரன் குறிப்பிட்டார்.

"நிதியமைச்சர் பிடிஆர். உடனுக்குடன் எல்லாவற்றுக்கும் பதில் தர நினைப்பதும் உடனுக்குடன் உணர்ச்சி வசப்படுவதும் அவரது அவசரதனத்தை காட்டுகிறது. திமுகவில் ஒரு காலத்தில் முன்பெல்லாம் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றவர்களை வைத்தே மலிவான அரசியலுக்கு உரமிட்டு அந்தப் போக்கை வேரூன்றச் செய்து அரசியல் நடத்தினார்கள்."

பிடிஆர்

பட மூலாதாரம், P THIAGARAJAN

படக்குறிப்பு, டாக்டர் பி. தியாகராஜன், தமிழ்நாடு நிதி அமைச்சர்

"சிறந்த கல்வியறிவும் திறமையும் உள்ள பிடிஆர் அவர்கள் வரிசையில் போய் விடக்கூடாது என்பதே பலரது கவலை. இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, பிடிஆரை எவரும் சுலபமாக கோபப்படுத்தி விட முடியும் என்றே தோன்றுகிறது. அது எதிர்காலத்தில் அவருக்கு வேறு மாதிரியான பிம்பத்தை தோற்றுவிக்கலாம். அவர் திமுகவின் கருத்துகளை பிரதிபலிப்பதாகவோ திமுக தலைமை சொல்லி இப்படி பேசுகிறாரா என்றோ யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மொத்தத்தில் பிடிஆரின் வாயில் இருந்து விழும் வார்த்தைகள் இதேபோல சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்தால், அது திமுக தலைமைக்கும் அழகு சேர்க்காது, அவர் வகிக்கும் அமைச்சர் பதவி வகிக்கும் அழகு சேர்க்காது," என்று குபேந்திரன் தெரிவித்தார்.

"ஜிஎஸ்டி விவகாரத்தில் பிடிஆர் வெளியிட்ட பதில்தான் இந்த அளவுக்கு அவர் பேசப்படுவதற்கு அடிப்படை காரணம். அவர் பதில் கொடுத்த விதம்தான் தவறு. அவர் வெளியிடும் கருத்து, அந்த ஒரு நொடியில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. பொதுவெளியில் அமைச்சராக இருப்பவர் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து பேச வேண்டும். தேசிய அளவிலான முக்கிய நிகழ்வை புறக்கணிக்கும்போது எதேச்சையாக பதில் தெரிவிப்பதை அவர் தவிர்க்க வேண்டும்," என்றார் குபேந்திரன்.

மனதில் பட்டதை எல்லாம் உணர்ச்சி வசப்படுவதன் விளைவால் பிடிஆர் பேசுவாரேயானால், நாளை அதையே ஆதாயமாக்கிக் கொண்டு எதிர்கட்சிகள் பிடிஆரை தூண்டி விட்டு அவரை சர்ச்சைகளில் சிக்க வைக்கலாம். அது திமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலின் அரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம்," என்றார் குபேந்திரன்.

அமைச்சரானது முதல் தொடரும் சர்ச்சை

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விதிவிலக்கான அவருடைய தகுதிகள் காரணமாக திமுகவில் தனித்து நிற்கிறார். அவர் தமது 20 ஆண்டுகளை வெளிநாட்டில் கழித்தவர். அமெரிக்காவில் எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ மேல்படிப்பு முடித்த அவர், சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றினார்.

இத்துடன் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் பிடிஆர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்ப அளவில் நெருங்கிய நட்புறவைக் கொண்டவர். அதனாலேயே அவருடைய செயல்பாடுகளை திமுகவில் உள்ள அரசியல் பின்புலம் வாய்ந்த தலைவர்கள் தட்டிக்கேட்கவோ நேரடியாக விமர்சிக்கவோ தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

பழனிவேல் தியாகராஜன் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் என்றும் அவர் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்றும் அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக தமிழ்நாட்டில் நிதியமைச்சர் பதவி என்பது முதல்வருக்கு அடுத்த அல்லது அதற்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சருக்கு தரப்படும். அந்த வகையில், மாநில நிதியமைச்சராக இருப்பவர் அமைச்சரவையில் மூத்தவராகவும் கருதப்படுவார். ஆனால், அரசியல் மூப்பு பெற்ற பல திமுக முன்னணி தலைவர்களுக்கு தமது அமைச்சரவையில் நிதித்துறையை ஸ்டாலின் ஒதுக்கவில்லை. அந்த பதவிக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை ஸ்டாலின் தேர்வு செய்தபோதும், அவர் தமிழக அமைச்சர்கள் பட்டியலில் 26ஆம் இடத்திலேயே இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :