இன்ஃபோசிஸ் பற்றிய சர்ச்சை கட்டுரை: என்ன சொல்கிறது ஆர்எஸ்எஸ்?

பட மூலாதாரம், PANCHJANYA/TWITTER
இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸை விமர்சிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊடகம் என்று கருதப்படும் பாஞ்சஜன்யவில் வெளியான கட்டுரைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
பாஞ்ச்ஜன்யவின் சமீபத்திய பதிப்பில் இன்ஃபோசிஸ் பற்றிய நான்கு பக்க கவர் ஸ்டோரி வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இன்ஃபோசிஸ் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்திய அந்த ஊடகம், அந்த 'குற்றச்சாட்டைகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை' என்றும் கூறியுள்ளது.
இந்தக் கட்டுரையை எழுதும் நேரம் வரை, இந்த விவகாரம் குறித்து இன்ஃபோசிஸிடமிருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.
"தேச விரோத சக்திகள் இன்ஃபோசிஸ் மூலம் இந்தியாவின் பொருளாதார நலன்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கிறதா?" என்று கவர் ஸ்டோரி கேட்கிறது.
"நக்சலைட்டுகள், இடதுசாரிகள் மற்றும் துக்டே-துக்டே கும்பல்களுக்கு உதவியது" போன்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலத்தில் ஏற்கனவே இன்ஃபோசிஸ் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் பாஞ்சஜன்யா கட்டுரை கூறுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை என்றும் கட்டுரை கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸ் விளக்கம்
வருமான வரி தாக்கல் செய்ய இன்ஃபோசிஸ் உருவாக்கிய புதிய இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது குறித்தும் பாஞ்சஜன் கட்டுரையில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அந்த கட்டுரை வெளிவந்தவுடன் சர்ச்சை வெடித்தது. அதில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களுக்கு சங்க பரிவார் இயக்கம் உடன்படுகிறதா என்ற கேள்விகளும் எழுந்தன.
சர்ச்சை தீவிரம் அடைவதைக் கண்ட ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் ஞாயிற்றுக்கிழமை இயக்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி ஒரு ட்வீட்டை பதிவு செய்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அந்த ட்வீட்டில், 'பாஞ்சஜன்ய' ஆர் எஸ் எஸ் ஊதுகுழல் அல்ல என்று அவர் கூறினார்.
"பாஞ்சஜன்ய ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுழல் இல்லை. இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆர்எஸ்எஸ் உடன் இணைக்கப்படக்கூடாது. இவை கட்டுரை எழுதியவரின் கருத்துகள், எங்கள் இயக்கத்துடையது அல்ல," என்று சுனில் அம்பேகர் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, அவர் இன்ஃபோசிஸைப் பாராட்டி ஒரு ட்வீட்டையும் வெளியிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"இந்திய நிறுவனமான இன்ஃபோசிஸ் நாட்டின் முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. இன்ஃபோசிஸின் உதவியுடன் செயல்படும் ஒரு போர்ட்டலில் சில பிரச்சனைகள் இருந்திருக்கலாம். ஆனால் இந்த சூழலில் பாஞ்சஜன்யவில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரை அதை எழுதியவரின் சொந்தக்கருத்து," என்று அம்பேகர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாஞ்சஜன்யாவின் ஆசிரியர் ஹித்தேஷ் சங்கர், கவர் ஸ்டோரியில் தான் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
"செப்டம்பர் 5 இன் பாஞ்சஜன்யா பதிப்பு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த கவர் ஸ்டோரியை அனைவரும் படிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
"பாஞ்சஜன்ய தமது கட்டுரையில் உறுதியாக உள்ளது. இன்ஃபோசிஸுக்கு ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், நிறுவனத்தின் நலன் கருதி இந்த உண்மைகளை இன்னும் ஆழமாக ஆராய்ந்து பிரச்னையின் மறுபக்கத்தை முன்வைக்க வேண்டும்,"என்று அவர் தெரிவித்துள்ளார்.
"சிலர் தனிப்பட்ட ஆதாயம் தேடி, ஆர்எஸ்எஸ் பெயரை எடுக்கின்றனர். இந்த அறிக்கை சங்கத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது இன்ஃபோசிஸ் பற்றியது. இது உண்மைகள் மற்றும் நிறுவனத்தின் திறமையின்மை பற்றியது," என்கிறார் ஹித்தேஷ் சங்கர்.
கட்டுரையில் என்ன சர்ச்சை?
பாஞ்சஜன்யவின் நான்கு பக்க கவர் ஸ்டோரிக்கு #இன்ஃபோசிஸ் - ' நன்மதிப்பு மற்றும் சிதைவு' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸின் மனித ஆற்றல் துறை மார்க்சிஸ்ட்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக இந்தக் கட்டுரை கூறுகிறது.

பட மூலாதாரம், PANCHJANYA
இன்போசிஸ் "ஆத்மநிர்பர் பாரத் அபியான்" யை (தற்சார்பு இந்தியா இயக்கம்) பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறது . வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் இதுபோன்ற மோசமான சேவையை வழங்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸை 'உயர்ந்த உணவகம், ருசியற்ற உணவு' மற்றும் 'சந்தேகத்திற்குரிய தன்மை கொண்ட நிறுவனம்' என்றும் விவரித்தது. இன்ஃபோசிஸ் வேண்டுமென்றே அராஜக சூழ்நிலையை உருவாக்க முயன்றதா என்றும் வினவப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் தேச விரோத நிதி அளிப்பதாகவும் கட்டுரை குற்றம் சாட்டியது. மூன்று முக்கிய அரசு இணையதளங்களை கையாளும் பொறுப்பு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும், மூன்றிலும் சிக்கல்கள் உள்ளதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கலுக்கான இணையதளத்திற்கு முன்பு, ஜிஎஸ்டி மற்றும் நிறுவன விவகார வலைதளத்தை உருவாக்கும் பொறுப்பும் இன்ஃபோசிஸுக்கு வழங்கப்பட்டது.
நாராயண மூர்த்தி மீது நேரடி தாக்குதல்
தற்போதைய ஆளும் அரசின் கருத்தியலுக்கு எதிரான, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் போக்கு அனைவரும் அறிந்ததே என்று இந்தக்கட்டுரையில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
"இன்ஃபோசிஸ் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களை தனது முக்கிய பதவிகளில் அமர்த்துகிறது. அவர்களில் பெரும்பாலோர் வங்காளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்டுகள்."
"அத்தகைய நிறுவனம் இந்திய அரசின் முக்கியமான ஒப்பந்தங்களை பெற்றால், சீனா மற்றும் ஐஎஸ்ஐயின் தாக்கத்தின் ஆபத்து இருக்காதா? என்று கட்டுரையில் கேட்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Dave M. Benett/Getty Images)
இந்த முழு விஷயத்திலும் எதிர்கட்சிகளின் மெளனம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
"சில தனியார் நிறுவனங்கள் காங்கிரஸின் உத்தரவின் பேரில் ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சிக்கின்றனவா,"என்றும் கட்டுரை வினவுகிறது. இன்ஃபோஸின் தலைவர்களில் ஒருவரான நந்தன் நீலேகனி, காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்," என்று கட்டுரை குறிப்பிடுகிறது.
முழு விவகாரம் என்ன?
கடந்த மாதம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்ஃபோசிஸ் சிஐஓ சலீல் பரேக் உடனான சந்திப்பில், வருமான வரி தாக்கல் செய்யும் போர்ட்டலில் நீடிக்கும் தொழில்நுட்ப பிரச்சனை குறித்து "கடும் ஏமாற்றம்" தெரிவித்திருந்தார்.
இந்த புதிய இணையதளம் இன்ஃபோசிஸால் உருவாக்கப்பட்டது. எல்லா தொழில்நுட்ப கோளாறுகளையும் சரிசெய்ய செப்டம்பர் 15 வரையிலான கால அவகாசத்தை, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு நிதியமைச்சர் அளித்துள்ளார்.
வருமான வரி தாக்கல் செய்யும் இந்த இணையதளம் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டது. அதன் பிறகு இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி அழைக்கப்பட்டார்.
இணையதளம் ஏற்கனவே தாமதமாக உருவாகப்பட்டது. தயாரான பிறகும் கூட, அது தொடர்பான பிரச்சனைகளை அரசும் மக்களும் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் "தொடர் பிரச்சனைகளுக்கான" காரணத்தை நிதியமைச்சர், சலீல் பரேக்கிடம் கேட்டிருந்தார்.
2019 ஆம் ஆண்டில், எந்த அரசியல் கட்சியையும் பெயரிடாமல் நாராயண மூர்த்தி, 'நம்பிக்கை சுதந்திரம்' மற்றும் 'அச்சத்திலிருந்து விடுதலை' இல்லாமல் எந்த நாடும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாது என்று கூறினார்.
பலரும் இந்த அறிக்கையை, பாஜக மீதான எதிர்ப்போடு தொடர்புபடுத்திப் பார்த்தனர்.
பிற செய்திகள்:
- கினியில் ஆட்சிக் கவிழ்ப்பு: அதிகாரத்தை கைப்பற்றியதாக அறிவித்தது ராணுவம்
- நியூசிலாந்து தாக்குதல்: போலீஸ் சுட்டுக் கொன்ற இலங்கையரின் தாய் பேட்டி
- 'பிராமணர்களுக்கு தடை விதிக்கக் கூறிய சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை மீது வழக்கு
- ஆப்கன்: தாலிபன்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பஞ்ஷீர் படை
- டோக்யோ பாராலிம்பிக் முடிந்தது: 19 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 24ஆம் இடம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












