ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்: இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் செயல்பட்டு வரும் முக்கிய வலதுசாரி இயக்கங்களில் ஒன்றான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் என ஒரு கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
இந்தியாவில் இந்துவோ இஸ்லாமோ எந்த மதமும் ஒன்றன் மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்தாது என கூறியுள்ளார்.
மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது, இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காசியாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டத்தில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது அவருக்கு ஆலோசகராக இருந்த முனைவர் க்வாஜா இஃப்திகார் அஹ்மத் எழுதிய 'தி மீட்டிங்ஸ் ஆஃப் மைண்ட்ஸ்: எ பிரிட்ஜிங் இனிசியேட்டிவ்' என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது.
அக்கூட்டத்தில், கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இரு வேறு குழுவல்ல. அவர்கள் ஏற்கனவே இணைந்து இருக்கிறார்கள், எனவே அவர்களை இணைப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.
அரசியலால் சில பணிகளைச் செய்ய முடியாது. அரசியலால் மக்களை இணைக்க முடியாது. அரசியல் எப்போதும் மக்களை இணைக்கும் கருவியாக முடியாது. அது மக்கள் மத்தியிலான ஒற்றுமையை சிதைக்கும் ஆயுதமாக மாறலாம் என கூறியுள்ளார் மோகன் பாகவத்.
இங்கு இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்து அல்ல. பசு ஒரு புனித விலங்குதான், ஆனால் மற்றவர்களை கொலை செய்பவர்கள் கூட இந்துத்வா தத்துவத்துக்கு எதிரானவர்களே. சட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியுள்ளார் மோகன் பாகவத்.
இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இஸ்லாமியர்கள் எந்த விதமான ஆபத்திலும் இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் பேசுவது அவசியம் என கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் இந்துத்வா கொள்கை தொடர்பாக, அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் இப்படி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிற செய்திகள்:
- ஒவ்வொரு 10 ஆண்டும் ஆர்க்டிக் பனி அடுக்கு 13 சதவீதம் கரைகிறது - நெருங்கும் ஆபத்து
- ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: இவ்வளவு அதிகாரம் கொண்டதா? திரையுலகினர் கூறுவதென்ன?
- உக்ரைனில் பெண் ராணுவ வீரர்கள் ஹீல்ஸ் ஷூ அணிந்து அணிவகுப்பு நடத்த யோசனை
- பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் நொறுங்கி 17 பேர் பலி - பலர் தப்பினர்
- இளம் வயதினர் தலைமுடியை பிடுங்குவது, நகம் கடிப்பது மனநல பிரச்னையா? தீர்வு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













