ரெம்டெசிவீர் இலவச மருந்து திட்டம்: பாஜகவின் அறிவிப்பால் குஜராத்தில் புதிய சர்ச்சை

பாட்டீல்

பட மூலாதாரம், C.R. PATIL FB

    • எழுதியவர், ஜிகர் பட்
    • பதவி, பிபிசி குஜராத்திக்காக

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள சூரத் நகரில் 5,000 பேருக்கு ரெம்டெசிவீர் வைரஸ் எதிர்ப்பு மருந்தை இலவசமாக வழங்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சி.ஆர். பாட்டீல் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையாகியிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி மருந்துக்கு குஜராத்தில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், தனது சொந்த ஊரான சூரத் நகரில் 5,000 பேருக்கு ரெம்டெசிவீர் என்ற நோய் எதிர்ப்பு மருந்தை இலவசமாக வழங்குவேன் என்று சி.ஆர். பாட்டீல் சமீபத்தில் அறிவித்து அதை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், அவரது பேச்சு மாநிலத்தில் சர்ச்சையானது. அங்குள்ள மாநில காங்கிரஸ் தலைவர்கள், குஜராத்தில் சட்டவிரோதமாக நோய் எதிர்ப்பு மருந்தை பாரதிய ஜனதா கட்சியினர் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்கள்.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டை மறுத்த சி.ஆர். பாட்டீல், முறைப்படி சட்டபூர்வ அனுமதியுடனேயே பாரதிய ஜனதா கட்சியினர் ரெம்டெசிவீர் மருந்தை கொள்முதல் செய்திருப்பதாக கூறினார்.

"மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே வைரஸ் எதிர்ப்பு மருந்தை நாங்கள் வாங்கியிருக்கிறோம். எங்களுடைய முயற்சியை பாராட்ட முடியாவிட்டாலும், இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தி காங்கிரஸார் மிரட்ட முயலக்கூடாது. காங்கிரஸின் அச்சுறுத்தலால் நாங்கள் பயப்படவில்லை," என்று பாட்டீல் தெரிவித்தார்.

பாஜக

பட மூலாதாரம், TWITTER @ BJP4SURATCITY

1992ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது பிளேக் நோய் பரவியபோது கூட, பாரதிய ஜனதா கட்சியினர், ரூ. 10 லட்சம் மதிப்பிலான டெட்ராசைக்ளின் என்ற நோய் எதிர்ப்பு மருந்தை கொள்முதல் செய்து சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்கள் என்றும் சி.ஆர். பாட்டீல் கூறினார்.

முன்னதாக, குஜராத்தின் சூரத் நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் ரெம்டெசிவீர் மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3,000 டோஸ் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் அதிக அளவில் மருந்துகள் உள்ளனவோ, அங்கிருந்துதான் இந்த மருந்துகள் வரவழைக்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏ ஹர்ஷ் சாங்கவி தெரிவித்தார்.

ஆனால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற மருந்தை வேறு இடங்களில் இருந்து இறக்குமதி செய்து விநியோகம் செய்ய அரசிடம் இருந்து முறைப்படி அனுமதி பெற்றிருப்பது அவசியம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

பாஜகவினரின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெயராஜ் சிங் பர்மர், பாஜக தலைமை அலுவலகம் என்ன மருந்தக விற்பனை நிறுவனமா? என்று கேள்வி எழுப்பினார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

மருந்தகம் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் 18ஆவது பிரிவின்படி ரெம்டெசிவீர் வைரஸ் எதிர்ப்பு மருந்தை பாஜகவினர் பெருமளவில் வைத்திருப்பது சட்டப்படி விதிமீறலாகும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

"இந்த விவகாரம் தொடர்பாக இந்திய உணவு மற்றும் மருந்தக அமைப்பின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதன் அதிகாரிகள் பாஜகவினர் எங்கு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நோய் எதிர்ப்பு மருந்துகளை வைத்திருக்கிறார்களோ, அங்கு சோதனை நடத்தி மருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அவற்றை தேவைப்படுவோருக்கு அரசு விநியோகம் செய்ய வேண்டும்," என்று அமித் சாவ்தா வலியுறுத்தினார்.

பாஜக விளக்கம் என்ன?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஆனால், மாநில அரசாங்கம் பெற்ற ஆர்டர்கள் மூலம் வரவழைக்கப்பட்ட ரெம்டெசிவீர் மருந்துகளை தாங்கள் வழங்கவில்லை என்றும் வேறு மாநிலங்களில் அதிக கையிருப்பில் உள்ள மருந்துகளைத்தான் தாங்கள் வரவழைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருவதாகவும் பாஜக செய்தித்தொடர்பாளர் யாமல் வியாஸ் தெரிவித்தார்.

கொரோனா பாதித்தவர்களின் உடல்நிலையை விவரிக்கும் மருத்துவ ஆவணங்கள், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவுகள் மற்றும் பிற சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே மருந்துகளை வழங்குகிறோம் என்றும் அவர் கூறினார். கொரோனா பாதிப்பை எதிர்கொள்பவர்களுக்கு உதவவே இந்த முயற்சியை மேற்கொண்டோம் என்றும், அது மருந்தை பதுக்கி வைக்க அல்ல என்றும் யாமல் வியாஸ் குறிப்பிட்டார்.

சட்டம் என்ன சொல்கிறது?

குஜராத்தில் மருந்தக நிறுவனத்துக்கான உரிமத்தை மாநில அரசின் உணவு மற்றும் மருந்தகத்துறை வழங்குகிறது. இந்தத் துறை, மாநில சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இந்த துறை, மருந்துகளை விற்கும் உரிமத்தை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்கும்போது அதற்கு பல்வேறு விதிகளை அந்த நிறுவனம் பூர்த்தி செய்கிறதா என்பது கவனிக்கப்படும்.

அதன்படி மருந்துகளை விற்பனை செய்பவர் ஒரு மருந்தாளுநராக தன்னை பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும். அவர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மருந்தாளுகை பிரிவில் பட்டம் படித்தவராக இருக்க வேண்டும். மருந்தக கடை உரிமத்தை பெற விரும்புவோர் குறைந்தபட்சம் மெட்ரிக்குலேஷன் படிப்பை முடித்தவராகவும் அவரிடம் ஒரு பதிவு பெற்ற மருந்தாளுநர் பணியில் இருக்க வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது. மேலும், மருந்து விற்பனை துறையில் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு அந்த கடை உரிமையாளருக்கு அனுபவம் இருக்க வேண்டும் அல்லது மருந்தக விற்பனை பணியில் ஆண்டுக்கணக்கில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இது மட்டுமின்றி, மருந்துகளை விற்பனை செய்யும் கடை குறைந்தபட்சம் 10 சதுர மீட்டர் கொண்ட இடத்தில் இருக்க வேண்டும். மொத்த விற்பனை அல்லது சில்லறை விற்பனை என்றால் 15 சதுர மீட்டர் இடத்தில் அந்த கடை இருக்க வேண்டும்.

நிபுணர்கள் கருத்து என்ன?

குஜராத்தில் பாஜகவினர் இலவசமாக வைரஸ் எதிர்ப்பு மருந்தை வழங்குவது குறித்து குஜராத் மாநில உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த் யக்னிக் கூறுகையில், "பாஜகவினரின் செயல்பாடு நேரடி விதி மீறலாகும். பெருந்தொற்று சட்டத்தின் கீழ் ஏற்கெனவே தன்னிச்சையாக மருந்துகளை விற்பனை செய்வோர் மீது அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. தற்போதைய நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகள் கையிருப்பில் இருந்தால் கூட அதை சம்பந்தப்பட்ட தனியார் மருந்தக தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றை அரசிடம ஒப்படைத்து விட வேண்டும்," என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் சி.ஆர். பாட்டீல் தன்னையே ஒரு அரசாங்கமாக நினைத்துக் கொண்டு செயல்படுவதாக கருதுகிறேன். ஒரு மாநில கட்சித் தலைவர் இப்படி செயல்படுகிறார் என்றால் பிறகு அவருக்கும் மாநில முதல்வருக்கும் என்ன வேறுபாடு என்றும் வழக்கறிஞர் ஆனந்த் யக்னிக் கேள்வி எழுப்பினார்.

குஜராத் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை சட்டத்தின்படி, ஒருவர் முறையான உரிமமின்றி மருந்துகளை விற்பனை செய்தால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என்று வழக்கறிஞர் ஷம்ஷத் கான் பதான் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: