மேற்கு வங்க தேர்தல் 2021: பல இடங்களில் டிஎம்ஜி, பாஜக தொண்டர்கள் மோதல் - 4ஆம் கட்ட தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோதி

இவிஎம் இயந்திரம், சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் வீட்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

உலுபெரியா உத்தர் என்கிற ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதியில், தபன் சர்கார் என்கிற செக்டார் 17-ன் அதிகாரி, தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தும் ரிசர்வ் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், உறவினர் ஒருவரின் வீட்டில் உறங்கச் சென்றிருக்கிறார்.

அந்த அதிகாரி தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியிருக்கிறார் என பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்யும் ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மேலும், பிடிபட்ட வாக்குப் பதிவு இயந்திரம், செயல்பாட்டில் இருக்கும் இயந்திரங்கள் பழுதாகும் போது மாற்றி பயன்படுத்துவதற்காக வைத்திருந்த இயந்திரம் என்றும், அவ்வியந்திரம் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படாது எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

தேர்தல் பார்வையாளர் நீரஜ் பவன், அவ்வியந்திரங்களில் சீல் உடைக்கப்பட்டிருக்கிறதா என சரி பார்த்து, அதை தனியாக தேர்தல் பார்வையாளரின் கட்டுப்பாட்டில் ஒரு தனி அறையில் வைத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின்போரில் காவல்துறை விசாரணையும் நடந்து வருகிறது.

இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் மாலை 4 மணி நிலவரப்படி 67.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில தேர்தல் தலைமை அதிகாரி அலுவலகம் கூறியுள்ளது.

மூன்றாம் கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக ஹூக்ளி மாவட்டம், கோகாட் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரு அதாக் என்ற பாரதிய ஜனதா கட்சி தொண்டரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் தாக்க முற்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், அவரை காப்பாற்ற முற்பட்டபோது அவரது தாய் கொல்லப்பட்டதாக முன்னாள் ஆளுநர் ததகதா ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்த தகவல் பல இடங்களில் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர், திரிணாமுல் காங்கிரஸ் இடையே பல இடங்களில் மோதல் காணப்பட்டது.

அங்குள்ள அராந்தி தொகுதியில் வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் சுஜாதா மொண்டல், நிர்மல் மஜி ஆகியோரை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில தொண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பாக் தொகுதியில் போட்டியிடும் சுஜாதா மொண்டல், தனது தொகுதியின் சில வாக்குச்சாவடிகளில் பாஜக தொண்டர்கள் சிலர் வேறு எவரையும் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்று வந்த தகவலையடுத்து அங்கு சுஜாதா செல்ல முற்பட்டதாகவும் அப்போது சிலர் சுற்றி வளைத்து தன்னை தலையில் தாக்கியதாகவும் சுஜாதா கூறுகிறார். இந்த சுதாஜா மொண்டல், பாரதிய ஜனதா கட்சி எம்.பி. செளமித்ரா கானின் மனைவியாக இருந்து பிறகு அவரிடம் இருந்து சமீபத்தில் பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சுஜாதா மொண்டலின் இந்த குற்றச்சாட்டை மறுப்பதாகக் கூறுகிறார் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மதுசூதன் பக். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற அவரை உள்ளூர் மக்கள்தான் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்களை மிரட்டும் வகையில் சுஜாதா பேசியதாலும்தான் அங்கு பிரச்னை எழுந்ததாக அறிகிறேன் என்று கூறினார் மதுசூதன் பக்.

பிரதமர் மோதி பிரசாரம்

இதேவேளை, நான்காம் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையையொட்டி ஹெளராவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசினார். அப்போது அவர், "தற்போது தேர்தல் நடக்கும் பல வாக்குச்சாவடிகளில் கட்சி ஏஜென்டுகள் கூட இல்லாத நிலையில்தான் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. ஒரு சில ஏஜென்டுகளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரையே தாக்குகிறார்கள்," என்று கூறினார்.

தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சம் காரணமாக, பாரதிய ஜனதா கட்சியினரை குற்றம்சாட்டி அவதூறாக குற்றம்சாட்டும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் மமதா பானர்ஜி என்றும் பிரதமர் மோதி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் மொத்தம் 294 இடங்கள் உள்ளன. இதில் முதல் கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1ஆம் தேதியும் நடந்துள்ளன. இதைத்தொடர்ந்து இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. அடுத்ததாக ஏப்ரல் 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இவற்றின் முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: