உத்தராகண்ட் வெள்ளம்: 35 பேர் சிக்கியிருக்கலாம் - முதல்வர் டி.எஸ். ராவத்

பட மூலாதாரம், T.S. Rawat Twitter
உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மேலும் 35 பேர் சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது. அவர்களை மீட்க, மீட்புப் படையினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் மிகப் பெரிய வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளத்தால் பெரிய சுரங்கப் பாதையின் வழிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதில் 28 பேர் இறந்துவிட்டார்கள். 150 பேரின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இமய மலையில் இருக்கும் பனிப்பாறைகளில் ஒரு பெரிய பகுதி, உத்தராகண்டில் ஓடும் ஒரு நதியில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இதனால் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
8.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட பெரிய சுரங்கப் பாதையில் தான் முக்கியமாக மீட்புப் பணிகளை முடக்கிவிட்டுள்ளனர்.
தபோவன் விஷ்ணுகட் நீர் மின் திட்டத்தோடு இணைந்திருக்கும் இரு சுரங்கங்களில் இதுவும் ஒன்று. இந்தச் சுரங்கப் பாதை நீரைக் கொண்டு செல்லக் கட்டப்பட்டது.
மற்றொரு 3.8 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதை, நீர் மின் திட்டம் மூலம் தேங்கும் சேற்று மண் மற்றும் களி மண் போன்றவற்றை தெளலிகங்கா நதியில் வெளியேற்றும் நோக்குடன் கட்டப்பட்டது.
வெள்ளம் பெரிய பாறைகள் மற்றும் குப்பைகள் போன்றவைகளோடு பெருக்கெடுத்து வந்ததால் மக்கள் மற்றும் பணியாளர்கள் இரண்டு சுரங்கப் பாதையிலும் சிக்கிக் கொண்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அச்சுரங்கப் பாதையின் வழிகள் இந்த இயற்கைப் பேரிடரால் மூடப்பட்டுள்ளன.
சிறிய சுரங்கப் பாதையிலிருந்து 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சுமாராக 35 பேர் முக்கிய சுரங்கப் பாதையில் சிக்கியுள்ளதாக, உத்தராகண்ட் மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
இந்த நீர் மின் திட்டம் 2023-ம் ஆண்டுக்குள் கட்டி முடிப்பதாக இருந்தது.
சுரங்கப் பாதைக்குள் சென்ற மீட்புக் குழுவினர், அங்கு அதிக அளவில் தண்ணீர் மற்றும் சகதி இருப்பதால் திரும்பிவிட்டனர் என, இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர். இவர்களும் இந்த மீட்புப் பணியில் உதவிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், மின்சார திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த, சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் பணியாளர்களோடு எந்த ஒரு தகவல் தொடர்பும் இல்லை. பணியாளர்கள் சுரங்கப் பாதையில் எங்கு இருக்கிறார்கள், ஒன்றாக இருக்கிறார்களா என்பதை எல்லாம் கூற முடியாது என்கிறார்கள் மீட்புப் பணியில் இருக்கும் அதிகாரிகள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
நூற்றுக்கணக்கான துருப்புகள், துணை ராணுவப் படையினர், பல்வேறு ராணுவ ஹெலிகாப்டர்கள், உத்தராகண்ட் மாநிலத்தில் மீட்புப் பணிக்காக இறக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மண் வெட்டி, இயந்திர டிக்கர் போன்றவைகளைப் பயன்படுத்தி சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலைத் சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பனி வெடிப்பு (Glacial Burst) நடக்க என்ன காரணம் என்பதையும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"வெளியே செல்லுங்கள், வெளியேறுங்கள் என அலறும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என எங்களுக்குத் தெரியவில்லை. சுரங்கப் பாதையில் அதிவேகமாக நீர் புகுந்த உடன் நாங்கள் தப்பிக்க முயற்சித்தோம். சுரங்கப் பாதையில் நீர் வந்துவிட்டதால் எங்களால் தப்பிக்க முடியவில்லை" என அவ்விபத்தில் இருந்து மீண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"நாங்கள் சுரங்கப் பாதையின் கூரைப் பகுதியைப் பிடித்துக் கொண்டோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு அதையே பிடித்துக் கொண்டிருந்தோம். சுரங்கப் பாதையில் நீரின் அளவு குறைந்த பின், வெள்ள நீர் மூலம் அடித்து வரப்பட்ட பெரிய பாறைகளில் ஏறிக் கொண்டோம். நாங்கள் பிழைப்போம் என எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என மற்றொருவர் கூறினார்.

பட மூலாதாரம், T.S. RAWAT TWITTER
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) ஒரு பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், அதனால் ரிஷிகங்கா நீர் மின் திட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது எனவும் உத்தராகண்ட் காவல் துறை கூறியுள்ளது.
தபோவன் பகுதியில் 13 கிராமங்களை இணைக்கும் ஒரு பாலம் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என உத்தராகண்ட் மாநிலத்தின் மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அப்படி போக்குவரத்துக்கான தொடர்பு துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு இருப்பதாகவும் காவல் துறை கூறியுள்ளது.
இமய மலையின் மேற்கத்திய பகுதியில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தில், இப்படி திடீரென வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படு இயல்பு.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்குப் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், சுமாராக 6,000 பேர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பிற செய்திகள்:
- சசிகலா வருகை, மெளனம் காக்கும் எடப்பாடி பழனிசாமி - அடுத்த அதிரடியை விளக்கும் ஜெய்ஆனந்த்
- சிறைக்குள் முடங்கிய `சின்ன எம்.ஜி.ஆர்' - வி.என்.சுதாகரனை புறக்கணிக்கும் வி.கே.சசிகலா
- செவ்வாய் அதிகாலையில் சென்னை வந்தடைந்த சசிகலா
- செங்கோட்டை வன்முறை: தேடப்பட்டு வந்த பஞ்சாபி நடிகர் கைது
- அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34,000 மோசடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:














