சசிகலா திமுகவின் "பி" அணியா? என்ன சொல்கிறார் கனிமொழி?

கனிமொழி

சசிகலா திமுகவின் பி அணி என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்.பி கனிமொழி எதிர்வினையாற்றியுள்ளார்.

"விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்" என்ற தலைப்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி திங்கட்கிழமை (பிப்ரவரி 8) மதுரையில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பின்னர் தனியார் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் சசிகலா திமுகவின் பி அணி போல செயல்படுகிறார் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டதற்கு, "திமுகவிற்கு எந்த பி அணியும் தேவையில்லை" என்று கனிமொழி பதிலளித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், இடைத் தேர்தலுக்கு முன்பே, ஸ்டாலினை, டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளார். எப்படியாவது அதிமுக அரசை கலைக்க திட்டம் போட்டுள்ளனர். ஸ்டாலினின் பி டீம்தான் சசிகலா. ஆனால் அதிமுக தொண்டர்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள். எத்தனை பி டீமுடன் வந்தாலும், ஸ்டாலினால் இந்த ஆட்சியை கலைக்க முடியாது," என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய கனிமொழி, "உண்மையில் அதிமுகதான், பாரதி ஜனதா கட்சியின் பி அணியாக செயல்பட்டு வருகிறது. உடல்நலம் குறைவான அம்மையாரை அதிமுகவினர் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள்," என்று தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், கூட்டுறவு வங்கி கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாகவே இருந்துள்ளன. அதேபோலவே வங்கிக் கடன் தள்ளுபடி அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும்.

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஸ்டாலின் முதல்வராவார். அதிமுகவினர், செய்யாதவற்றை செய்ததாக சொல்லி ஓட்டு கேட்கின்றனர். திமுக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறோம்.

திமுகவில் இருக்கக்கூடிய கூட்டணி தொடரும். அப்படி ஏதாவது மாற்றங்கள் இருந்தால் திமுக தலைமை முடிவு எடுக்கும். பாஜகவுடன் கூட்டணியில் தொடருவது தவறு என்று அதிமுகவினர் பலரும் எண்ணுகின்றனர். அழகிரி குறித்து தலைவர் கலைஞர் எடுத்த நிலைப்பாடுதான் தற்போதும் தொடர்கிறது. அது தொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தால் அதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் எடுப்பார் என்றார் கனிமொழி.

தமிழகத்தில் மண் குதிரை ஆட்சி: கடுமையாகச் சாடும் மு.க. ஸ்டாலின்

ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மண் குதிரை என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில் திமுக சார்பில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை பேசினார்.

"அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் போல் அமைச்சர் ஜி. பாஸ்கரன், தானும் பப்புன் பட்டியலில் வர வேண்டும் என நினைக்கிறார். அவரை பலமுறை சட்டப்பேரவையில் தேடிப்பார்த்துள்ளேன். ஆனால் பார்க்க முடியவில்லை. அவர் தனது துறைக்குதான் எதுவும் செய்யவில்லை என்று நினைத்தால் தொகுதியிலும் செய்யவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கைத்தறி துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தற்போது விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அரசிடம் கிடைக்கவில்லை," என்றார் ஸ்டாலின்.

"தற்போதைய ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. தி.மு.க ஆட்சியில் மருத்துவத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினோம். ஆனால் தற்போது அரசு கொள்ளையடிக்க அவசர, அவசரமாக மினி கிளினிக்கை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரூ. 10 கோடிக்கு விளம்பரபடுத்தியதை தவிர மருத்துவர் செவிலியர் நியமிக்கவில்லை," என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

"சிவகங்கை மாவட்டத்திற்கு முல்லை பெரியார் தண்ணீர் கொண்டு வரப்படும். கீழடி மூலம் தமிழின பெருமை உலகிற்கு தெரியக்கூடாது என அகழாய்வு அதிகாரி கூட மாற்றப்பட்டார். இதே போல வட மாநிலத்தில் நடந்திருந்தால் பாஜக விட்டிருக்குமா? தமிழன விரோத பா.ஜ.க, சுயநலத்திற்காக அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு கீழடியில் செய்த 2 கட்ட அகழாய்வின் அறிக்கையை கூட அரசு வெளியிடவில்லை."

"மத்திய தொல்லியல்துறை அகழாய்வு செய்தால் தமிழினத்திற்கு மரியாதை ஏற்படும். ஆனால் தமிழர்களின் பெருமை வெளி வரக்கூடாது என்று மத்திய அரசு அகழாய்வு செய்ய மறுக்கிறது. இத்தகைய அரசுக்கு தமிழர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா? இந்தி திணிப்பு, தடுப்பு உள்ளிட்ட தமிழக உரிமைக்காக மத்திய அரசை எதிர்க்காத முதல்வர் பழனிசாமிக்கு எதற்கு முதல்வர் பதவி? கடைசி கட்டத்தில் அவர் பல அவர் நடத்தி வருகிறார்."

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்கு அளித்து விட்டு, தான் ஒரு "விவசாயி" என கூச்சமின்றி பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மக்களவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யவில்லை என குறை சொல்கிறார். ஆனால் மத்தியில் எங்களுடைய ஆட்சியா உள்ளது. தேர்தல் நேரத்தில் மக்கள் கேட்பார்கள் என்பதற்காக பயிர்கடன் தள்ளுபடிக்கு கடைசி நேரத்தில் கையெழுத்திடுகிறார். அதை பதவி ஏற்கும் போதே செய்ய வேண்டும். சசிகலாவின் காலை பிடித்து பதவிக்கு வந்த பழனிச்சாமி மக்களை பற்றி கவலைப்படாதவர். இப்படிப்பட்ட மண் குதிரை, உதவாக்கரையை நம்பி அவர் சார்ந்த கட்சியால் இனி தமிழகத்தில் ஆட்சி நடத்த முடியாது," என்றார் மு.க. ஸ்டாலின்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: