விவசாயிகள் போராட்டம்: சிங்கு எல்லையில் பதற்றம் – கண்ணீர் புகைகுண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி

பட மூலாதாரம், Getty Images
டெல்லி - ஹரியானா இடையே உள்ள சிங்கு எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் , உள்ளூர்வாசிகள் என்று சொல்லக்கூடியவர்கள் சிலர் தங்களின் இடம் காலி செய்யப்பட வேண்டும் என்று கூறி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றநிலை உருவாகியது.
இதேநேரத்தில் , பாரதிய கிசான் யூனியன் வேளாண் அமைப்புக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் கூட்டப்பட்டுள்ள 'மகா பஞ்சாயத்து' கூட்டத்தில் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டனர். அது இன்று மாலை 5.45 மணியளவில் முடிவடைந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
சிங்கு எல்லையில் என்ன நடந்தது?
நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் பேர் கொண்ட கும்பல் ஒன்று, வெள்ளி மதியம் சிங்கு எல்லையில் விவசாயிகள் அமைத்துள்ள கூடாரங்கள் மீது கற்களை வீசியும், அவற்றை சேதப்படுத்தியும் தாக்குதல் நடத்துவதை சிங்கு பகுதியில் இருந்து வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.
கண்ணீர் புகைக்குண்டை வீசி மற்றும் தடியடி நடத்தி காவல்துறை இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்று வருகிறது.
இந்த சம்பவத்தில் சில காவல் துறையினரும் காயமடைந்துள்ளதாக சிங்கு எல்லையில் இருக்கும் பிபிசி செய்தியாளர் அரவிந்த் சாப்ரா தெரிவிக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ள பகுதிக்குள் இந்த கும்பல் எப்படி நுழைந்தது என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அங்கு வைத்திருக்கும் வாஷிங் மிஷின்கள் உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், ANI
டிக்ரி எல்லைப் பகுதியிலும் உள்ளூர்வாசிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் கூடி, (குடியரசு நாளன்று செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவத்தில்) மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி கோஷம் எழுப்புவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தலிப் குமார் சிங் தெரிவிக்கிறார்.
டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கிடையேயான எல்லையில் இருக்கும் சிங்கு பகுதியில் இரண்டு மாத காலத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது.
இந்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களின் போராட்டத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 28ஆம் தேதியன்று காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை கலைந்துபோக உள்ளூர் நிர்வாகம் கோரியது, இருப்பினும் பாரதிய கிசான் யூனியன் எனும் வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் போராட்டத்தை கலைக்க மறுத்துவிட்டார்.
விவசாயிகள் போராட்டத்திலிருந்து பின்வாங்க மறுத்துள்ள நிலையில், சிங்கு, காசிப்பூர், டிக்ரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
காசிப்பூர் எல்லையில் பேசிய விவசாய தலைவர், "நாங்கள் போராட்டத்தை கலைக்க மாட்டோம். எங்களது பிரச்னைகள் குறித்து அரசிடம் பேசுவோம்," என தெரிவித்தார்.
சிங்கு எல்லையிலும் போராட்ட களத்திலிருந்து செல்ல விவசாயிகள் மறுத்துவிட்டனர்.
சிங்கு எல்லையில் இருக்கும் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் சமிடி என்ற விவசாய அமைப்பின் தலைவர் சத்னம் சிங் பன்னு,"அரசு என்ன செய்தாலும் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம். மத்திய வேளாண் சட்டம் திரும்பப் பெற வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
காசிப்பூர் எல்லை
புதன்கிழமையன்று காசிப்பூர் விவசாயிகள் முகாம்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காசிப்பூர் எல்லையில் பாதுகாப்பு படைகள் அதிகரிக்கப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி - உத்திரப் பிரதேச எல்லையான காசிப்பூர் எல்லையில் நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் பாரதிய கிசான் யூனியன் (பாரதிய விவசாயிகள் சங்கம்), அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் இந்த சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
காசியாபாத் மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர், வியாழனன்று நள்ளிரவு காசீப்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தை பார்வையிட்டனர் என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மேலும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதிகளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஊடகங்களிடம் பேசிய அவர், போராட்டக்களத்திலிருந்து தான் வெளியேறப் போவதில்லை என்று தெரிவித்தார். அழுதுகொண்டே, வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார். மேலும் திரும்பி சென்ற விவசாயிகள் தங்களின் டிராக்டர்களில் வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
"குடியரசு தினத்தன்று நடந்தது துரதிர்ஷ்டவசமானது" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கான முதல் நாளில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார். அதில் குடியரசு தினத்தன்று நடந்த சம்பவங்கள் மற்றும் அரசின் சாதனைகள் குறித்துப் பேசினார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறது. அதை மத்திய அரசு மதித்துப் பின்பற்றும். அரசு அமைதியான வழியில் நடக்கும் போராட்டத்தை ஆதரிக்கிறது, ஆனால் ஜனவரி 26 அன்று நடந்தது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது என்றார் ராம் நாத் கோவிந்த்.
சமீபத்தில் தேசியக் கொடியையும், குடியரசு தினம் போன்ற நல்ல நாளையும் அவமானப்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது. நம் எண்ணங்களை வெளிப்படுத்த உரிமை கொடுக்கும் அரசியலமைப்புச் சட்டம் தான், நம் சட்டம் மற்றும் விதிகளை சரியாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்த மூன்று விவசாயச் சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு முன், விவசாயிகளுக்கு முந்தைய கால கட்டத்தில் இருந்த உரிமைகள் மற்றும் வசதிகள் எதுவும் குறையாது என்பதை என் அரசு தெளிவுபடுத்த விரும்புகிறது. ஆனால் இந்த புதிய விவசாயச் சட்டங்கள் மூலம், விவசாயிகளுக்கு புதிய வசதிகளும், புதிய உரிமைகளும் வழங்கப்படுகின்றன என்றார் குடியரசுத் தலைவர்.
பல்வேறு கட்ட ஆழ்ந்த விவாதத்துக்குப் பிறகுதான், நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டங்கள் ஏழு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களின் பலனை 10 கோடி சிறு விவசாயிகள் உடனடியாகப் பெறத் தொடங்கினர். சிறு விவசாயிகள் பலனடைவார்கள் என்பதை அறிந்தே, பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் ஆதரவைக் கொடுத்தன என்றார் ராம் நாத் கோவிந்த்.
கொரோனா வைரஸ் தடுப்பூசித் திட்டத்தைப் பொறுத்த வரை "உலகிலேயே இந்தியா தான் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமிதமான விஷயம். இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா மனிதாபிமான அடிபடையில் பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கியிருக்கிறது" என்றார்.
இந்திய - சீன எல்லைப் பிரச்சனையைக் குறித்துப் பேசிய அவர், கடந்த ஜூன் 2020-ல், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததைக் குறிப்பிட்டார்.
"என் அரசு இந்தியாவை முழுமையாகப் பாதுகாப்பதில் உறுதி ஏற்றிருக்கிறது. எனவே இந்திய சீன எல்லைப் பகுதியில் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன" எனவும் கூறினார் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 35 சதவீதம் குறைந்தது – காரணம் என்ன?
- கொரோனா வைரஸின் புதிய திரிபை 89% எதிர்கொள்ளும் புதிய தடுப்பூசி நோவாவேக்ஸ்
- இந்திய பட்ஜெட் 2021: உங்களது நிதி நெருக்கடிக்கு தீர்வு கிடைக்குமா?
- வளர்ப்பு தந்தையால் வல்லுறவு: கருவுற்ற சிறுமிக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு
- அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி: ’ரஜினியின் அறிவிப்பின் அடிப்படையில் அமையவில்லை’
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












