கர்நாடகத்தில் கல் குவாரி வெடிச் சம்பவத்தில் குறைந்தது 8 பேர் பலி

கவிழ்ந்து கிடக்கும் வாகனம்

பட மூலாதாரம், ANI

கர்நாடக மாநிலம் சிவமோகா (ஷிமோகா) மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரி அருகே ஏற்பட்ட வெடிச் சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹுனாசோடி என்ற ஊரில் உள்ள ரயில்வே கல் உடைப்புத் தளத்தில் ஏற்பட்ட இந்த டைனமைட் வெடிச் சம்பவத்தில் குறைந்தது 8 பேர் இறந்ததாக சிவமோகா மாவட்ட ஆட்சியர் கே.பி. சிவக்குமாரை மேற்கோள் காட்டிச் சொல்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கல்குவாரிக்கு ஜெலட்டின் குச்சிகள் ஏற்றிச் சென்ற லாரியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாகவும் அந்த லாரியில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள் இருந்ததாகவும் ஒரு போலீஸ்காரர் பிபிசிக்காக பணியாற்றும் செய்தியாளர் இம்ரான் குரேஷியிடம் கூறியுள்ளார்.

இன்னும் அந்த இடத்தில் வெடிக்காத வெடிபொருள்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், அந்த குவாரியை சுற்றிலும் உள்ள பகுதிகள் சீலிடப்பட்டுள்ளன. மக்கள் அங்கே செல்ல அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் கே.பி. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இரவு 10.20 மணிக்கு நடந்த இந்த வெடிப்பு மிக வலுவாக இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட அதிர்வும், சத்தமும் பக்கத்து மாவட்டமான சிக்மங்களூரு மாவட்டத்திலும்கூட உணரப்பட்டது.

தொடக்கத்தில் பலரும் இது நிலநடுக்கம் என்றே நினைத்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

சிவமோகா, கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் சொந்த மாவட்டமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :