டிஆர்பி முறைகேடு: அதிர்வலைகளை ஏற்படுத்திய வாட்சாப் உரையாடல் - பின்னணி என்ன?

அர்னாப் கோஸ்வாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அர்னாப் கோஸ்வாமி

டிஆர்பி எனப்படும் ஒரு தொலைக்காட்சி பெற்ற பார்வையாளர்களின் கணக்கீடு குறித்த பிரச்சனையின் தொடர்ச்சியாக, பார்க் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த பார்தோ தாஸ்குப்தா மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியராக இருக்கும் அர்னாப் கோஸ்வாமி ஆகிய இருவரின் வாட்சாப் உரையாடல் என்று கூறி சமூக ஊடகங்களில் வெளியான தகவல் பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

1,000 பக்கங்களுக்கு மேல் செல்லும் இந்த வாட்சாப் உரையாடலை, பார்தோ தாஸ்குப்தாவின் செல்போன் மூலம் இடைமறிக்கப்பட்டதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாட்சாப் உரையாடலில், மத்திய அரசின் எல்லா அமைச்சர்களும் தங்கள் பக்கம் இருப்பதாகவும், பிரதமர் அலுவலகம் கூட தங்களுக்கு உதவும் என அர்னாப் கோஸ்வாமி, தாஸ்குப்தாவிடம் கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"பல சதித் திட்டங்கள் மற்றும் இதுவரை இந்த அரசில் பார்க்க முடியாத அளவுக்கு அதிகார மையங்களை அர்னாப் அணுக முடிவது, தன் ஊடகத்தையும் தன் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி அதிகார தரகராக செயல்படுவது, அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்தோ தாஸ்குப்தாவுக்கு இடையிலான இந்த வாட்சாப் உரையாடலில் தெரிகிறது. சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடுகளில் அர்னாப் இருந்தால், நீண்ட நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்" என இந்தியாவின் பிரபல வழக்குரைஞர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் தன் ட்விட்டர் பக்கத்தில் சில வாட்சாப் உரையாடல்களின் திரைப்பிடிப்புகளுடன் பகிர்ந்திருக்கிறார்.

இந்த டிஆர்பி முறைகேட்டில் பாஜக அரசுக்கும் பங்கு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டி உள்ளார்.

டிஆர்பி முறைகேடு

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், டிஆர்பி முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான

பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயலதிகாரியான பார்த் தாஸ்குப்தா, உடல் நலக் குறைவால், மும்பையில் இருக்கும் ஜேஜே மருத்துவமனையில் நேற்று (ஜனவரி 16) இரவு அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

முன்னதாக, டிஆர்பி முறைகேட்டு வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வரும் ஜனவரி 29-ம் தேதி வரை தொடரும் என கடந்த வெள்ளிக்கிழமை மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. டிஆர்பி முறைகேடு குறித்த விசாரணையின் நிலை அறிக்கையை காவல் துறையினர் எஸ்.எஸ். ஷிண்டே மற்றும் மணித் பிட்லே கொண்ட அமர்விடம் சமர்பித்திருக்கிறது.

டிஆர்பி முறைகேடு என்றால் என்ன?

டிஆர்பியை மதிப்பீடு செய்ய பார்க் என்ற அமைப்பு வீடுகளில் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு வகை மீட்டர் (BAR-O-Meter) வைக்கப்படுகிறது. இது தொலைக்காட்சியில் பார்க்கப்படும் சேனலைக் கண்காணிக்கும்.

ஹன்சா ரிசர்ச் என்கிற நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், பாரோ மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளில் பணத்தைக் கொடுத்து, சில சேனல்களைப் பார்க்க கூறியதாக, மும்பை காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதான் டிஆர்பி முறைகேட்டின் தொடக்கம் எனலாம். இதுதொடர்பாக மும்பை காவல்துறை அர்னாப் கோஸ்வாமி மற்றும் முன்னாள் பார்க் அமைப்பின் தலைமை செயலதிகாரி ஆகியோர் மீது வழக்கு தொடுத்து விசாரித்து வருகிறது.

டிஆர்பி முறைகேடு

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் முன்வைக்கும் தீர்வு என்ன?

டிஆர்பி ரேட்டிங் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி சிறப்பு குழுவொன்றை அமைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த குழு தனது அறிக்கையை சமர்பித்தது.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இந்த அறிக்கையை அமைச்சகம் முழுமையாக பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். டிஆர்பியில் வெளிப்படைத்தன்மையும், அந்த தரவுகளை தவறாக கையாள்வதைத் தவிர்க்கவும் டிஆர்பி கணக்கிட பயன்படுத்தும் மாதிரிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

டிஆர்பி என்றால் என்ன?

டி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளுக்கான ஒரு சிறப்பு முறை. இந்த முறைப்படி டிவியில் எந்த நிகழ்ச்சி அல்லது சேனல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன என்பதை மதிப்பிட ஒரு மீட்டர் பொருத்தப்படும். அது மக்களின் தேர்வைக் காட்டுகிறது மற்றும் இது டிவியில் காட்டப்படும் நிகழ்ச்சிகளுடன் நேரடியாக தொடர்புடையது.

நிறுவனங்கள் மற்றும் விளம்பர ஏஜென்சி நிறுவனங்கள், இந்த மதிப்பீட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றன, ஏனெனில் அவர்களின் விளம்பரங்கள் எந்த நிகழ்ச்சியின்போது அதிகமாகக் காட்டப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க இந்த டிஆர்பி கணக்கீட்டு முறை உதவுகிறது.

இதன் பொருள், எந்த நிகழ்ச்சி அல்லது டிவி சேனல், டிஆர்பி மதிப்பீடுகளில் முன்னணியில் இருக்கிறதோ, அதற்கு அதிக விளம்பரங்கள் கிடைக்கும், அதாவது அதிக வருவாய் கிடைக்கும்.

தொலைக்காட்சி பார்வையாளர்களின் அளவீடுகள் தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அளித்த பரிந்துரைகளின்படி, விளம்பரதாரர் தனது முதலீட்டின் மீது முழு லாபத்தை பெறுவதற்காக ஒரு மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட்டது. ஆனால் இவை தொலைக்காட்சி மற்றும் சேனல் நிகழ்ச்சிகளுக்கு முதன்மை அளிக்கும் அளவுகோலாக மாறிவிட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: