இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்கினார் நரேந்திர மோதி

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நரேந்திர மோதி

உலகின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டமான இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஜனவரி 16, சனிக்கிழமை) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

"எப்போது கொரோனா தடுப்பூசி வரும் என எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது கொரோனா தடுப்பூசி வந்துவிட்டது. இந்த நேரத்தில் இந்திய மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்" என கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோதி.

"பொதுவாக தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்தியா இரு கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை மிக குறுகிய காலகட்டத்தில் தயாரித்திருக்கிறது. மேலும், சில கொரோனா தடுப்பு மருந்துகளும் பரிசோதனையில் இருக்கின்றன. இரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து அவசியம். இரு டோஸ்களுக்கிடையில் ஒரு மாத கால இடைவெளி அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்."

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"முதல் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்ட உடன், யாரும் முகக்கவசத்தை பயன்படுத்தாமல் இருக்கும் தவறையோ அல்லது சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கும் தவறையோ செய்ய வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம் இரண்டாவது டோஸ் மருந்து செலுத்திக் கொண்ட பிறகு தான் போதுமான நோய் எதிர்ப்புத் திறன் உடலில் மேம்படும்" என்றார் பிரதமர் மோதி.

இந்தியா தன் முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டத்திலேயே 3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தவிருக்கிறது. இரண்டாவது கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவின் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் சந்தித்த சவால்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோதி அப்போது உணர்ச்சிவசப்பட்டதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் தடுப்பூசி பணி தொடக்கம்

நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தவுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களும் தத்தமது பிராந்தியங்களில் தடுப்பூசி பணியை தொடக்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். நாட்டை காக்க அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். நானும் நிச்சயமாக தடுப்பூசி போட்டுக்கொள்வேன்" என்று கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை, மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்ட நிலையில், மருத்துவர் செந்தில் என்பவருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக உள்ளூர் தொலைக்காட்சிகளின் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். அங்கு முதலாவதாக மருத்துவ பணியாளர் முனுசாமி என்பவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

டெல்லியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் மனிஷ் குமார் என்பவர் முதல் நபராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியாவும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

"நான் இன்று மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன். பிரதமரின் தலைமையின் கீழ், நாம் கொரோனாவை எதிர்த்து கடந்த ஓராண்டு காலமாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த கொரோனா தடுப்பு மருந்து சஞ்ஜீவினி மூலிகை போல கொரோனாவுக்கு எதிரான போரில் செயல்படும்" என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

திட்டம் என்ன?

கொரோனாவிலிருந்து இந்தியாவின் 130 கோடிக்கும் மேற்பட்ட மக்களை காப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் என இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் லட்சக்கணக்கான டோஸ் மருந்துகள் ஏற்கனவே இந்தியாவின் பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

முதலில் இந்தியாவில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கக் கூடிய வாய்ப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு, இந்தியாவில்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த திட்டத்தின்படி, இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும். அவர்களைத் தொடர்ந்து காவல் துறையினர், ராணுவ வீரர்கள், நகராட்சிப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இவர்களுக்குப் பிறகு தான் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட நீண்ட காலமாக சிக்கலான உடல் உபாதைகளோடு இருப்பவர்களுக்கு தடுப்பூசி கொடுக்கப்படும்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியைப் பெற தகுதியானவர்களைக் கண்டுபிடிக்க, வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. அதில் சுமாராக 90 கோடி வாக்காளர்களின் விவரங்கள் இருக்கின்றன.

இந்திய அரசு, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துக்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது. கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மாநில சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள், நகராட்சி அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் நடைபெறும்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கோவிஷீல்ட் (ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனீகா கூட்டாக உருவாக்கியது) மற்றும் கோவேக்சின் (இந்தியாவின் பாரத் பயோடெக் உருவாக்கியது) என இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி இருந்தார்.

கோவேக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவடைவதற்கு முன்பே, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்களால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே அதன் செயல்திறன் குறித்து பலரும் எண்ணற்ற கேள்விகள் எழுப்பி இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசும், பாரத் பயோடெக் நிறுவனமும் கோவேக்சின் மருந்து பாதுகாப்பானது எனக் கூறுகிறார்கள். வரும் பிப்ரவரி மாதத்துக்குள் கோவேக்சின் மருந்தின் செயல்திறன் குறித்த தரவுகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு மருந்துகளுமே ஊசி மூலம் செலுத்தப்படும். இரு தடுப்பூசிகளும், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் மருந்துகள் செலுத்தப்படும். முதல் டோஸ் மருந்து செலுத்தப்பட்ட உடனேயே உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகத் தொடங்கும். ஆனால் இரண்டாவது டோஸ் மருந்து எடுத்துக் கொண்டு 14 நாட்களுக்குப் பிறகு தான் தடுப்பூசி முழு திறனை அடையும்.

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் மருந்தை பெற்றுக் கொள்பவர்கள் குறித்த விவரங்களை கணினியில் உடனடியாகக் காணலாம். கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு இதுவரை சுமார் 80 லட்சம் பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். ஆறு லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக செலுத்தப்படாது. விருப்பமுள்ளவர்கள் தாங்களாகவே முன் வந்து பெற்றுக் கொள்ளலாம். இரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும்.

"அரசு பெரிய அளவில் முதலீடு செய்து தங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பதால், இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கிறேன்" என்கிறார் இந்தியாவின் புகழ்பெற்ற தடுப்பு மருந்து நிபுணரான மருத்துவர் ககந்தீப் கங்.

டெல்லியின் மிகப் பெரிய கொரோனா மருத்துவமனையில் பணிபுரியும் அவசர சிகிச்சை நிபுணர் ஃபரா ஹுசேன், இன்று (ஜனவரி 16) தடுப்பூசி செலுத்திக் கொள்ளவிருக்கிறார்.

"இது ஒரு நீண்ட, கடினமான பயணம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்களத்தில் இருப்பதால், நான் என் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். என் பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டி எல்லோரும் என் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டார்கள். எனவே என் குடும்பத்தினருக்கு நோய் பரவாமல் இருக்க, என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிந்தது. என் பணி நிமித்தமாக, என்னிடமிருந்து என் குடும்பத்தினருக்கு கொரோனா பரவாமல் இருக்க, கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் முக்கியமான படி" எனக் கூறியுள்ளார் மருத்துவர் ஹுசேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :