கொரோனா புதிய திரிபு: கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த உத்தரவிட்ட இந்திய உள்துறை

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

பிபிசி நேயர்களுக்கு வணக்கம். உலக, இந்திய மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் புதிய திரிபு ஏற்படுத்தும் தாக்கத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் வைரஸ் பரவல் மற்றும் பாதிப்புகள் தொடர்பான தனிமைப்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக செயல்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொடர்பாக நவம்பர் 25ஆம் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்களில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் டிசம்பர் 31ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த கட்டுப்பாடுகளை அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிப்பதாக இந்திய உள்துறை கூறியிருக்கிறது.

அதே சமயம், அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள், உரிய வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உள்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து கடந்த இரு வாரங்களில் இந்தியாவுக்கு வந்த பயணிகளில் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் தமிழகம் வந்த 13 பேரும் அடங்குவர். அவர்களின் ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு புணேயில் உள்ள வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் 4 பேருக்கு பரிசோதனை முடிவில் புதிய திரிபுவின் தாக்கம் இல்லை என தெரிய வந்துள்ளதாக உள்துறைக்கு அந்த ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது.

மற்றவர்களின் மாதிரிகள் மீதான ஆய்வு நடந்து வருகிறது. இந்த புதிய திரிபு வேகமாக பரவி வருவதால், பிரிட்டனில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அந்த நாட்டில் இருந்து உலகின் மற்ற நாடுகளுக்கு வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலையொட்டி அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை ஜனவரி 31ஆம் தேதி அரசு நீட்டித்திருக்கிறது.

Banner

"பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ்"

பழனிசாமி

பட மூலாதாரம், EDAPPADY PALANISWAMY FB

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை வைத்து, முக கவசம் அணியாமல் தவிர்க்கக்கூடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது என்றும் இதுவரை 1.35 கோடி பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் திரிபுவின் தாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதன் முடிவில் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்திற்கு வந்த 13 நபர்களுக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய கொரோனா திரிபு பாதிப்பு உள்ளதா என்பதை அறிய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே அதற்கான சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக ரூ.7,544 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு அதிக கவனம் எடுத்ததால்தான் வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது என தெரிவித்தார்.

''கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்படுத்தபட்டிருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் தினமும் 70,000 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா தடுப்பு பணிகளுக்காக 15,000 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மூன்று கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். அதில் அறிகுறி தென்பட்ட சுமார் 12 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் முகாம் மூலமாக வைரஸ் பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,'' என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

"இந்தியாவிலேயே அதிக அளவிலான கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் தமிழகத்தில்தான் அமைந்துள்ளன. 235 பரிசோதனை மையங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் மக்கள் முககவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் வருவதால் தொடர் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்," என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Banner

மாஸ்டர் பட விவகாரம்: தமிழக முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

விஜய்

பட மூலாதாரம், ACTOR VIJAY FB

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென்று சந்தித்துப் பேசியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தணிக்கைப் பணிகள் முடிந்ததால், ஜனவரி 13-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு மற்றும் பொது முடக்க கட்டுப்பாடுகளால் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்த நிலையில், பொது முடக்க கட்டுப்பாடுகளை கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழக அரசு சிறிது, சிறிதாக தளர்த்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், நேற்றிரவு (டிசம்பர் 27) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது 'மாஸ்டர்' படத்துக்காக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் அதற்குப் பரிசீலித்து முடிவு செய்வதாக தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

மேலும், சிறப்புக் காட்சிக்கும் அனுமதி வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசு தரப்பிலிருந்து விஜய் சந்தித்தது ஏன் என்பதற்கான விளக்கம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் பொங்கலையொட்டி ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக எங்களிடம் கூறியுள்ளார்கள் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Banner

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்

ஏ.ஆர். ரகுமான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரிமா பேகம், சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு உலக அளவில் பிரபலமாக இருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான்.

இந்தியாவிலிருந்து இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரஹ்மான், இசைத்துறையில் தான் சாதிக்க உறுதுணையாக இருந்தது தனது தாயார் கரீமா பேகம் என்று கூறுவார்.

இந்த நிலையில் வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கரீமா பேகம் இன்று காலையில் உயிரிழந்தார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் அவர்களின் அன்பு தாயார் கரீமா பேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!" என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தமிழில் தொடங்கி பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரஹ்மான் அவர்களை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு ஆறுதல்!" என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

தனது தாயாரின் புகைப்படத்தை மட்டும் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பதை அடுத்து திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ஜி.வி. பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கரிமா பேகத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நீங்கள் எப்போதும் எங்களுக்கு ராணி என்று பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் கரிமா பேகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் 'உங்கள் வருத்தத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன். இந்த இழப்பு எவ்வளவு வேதனையானது என்பதை நான் அறிவேன். ஏனென்றால் நான் ஒரு வருடத்திற்கு இந்த வேதனையை அனுபவித்தேன்.தாயின் இடத்தை மாற்ற முடியாது! இந்த சூழ்நிலையை கையாள கடவுள் உங்களுக்கு பலம் கொடுக்கட்டும். உங்கள் குடும்பத்தில் மற்றவர்களை ஆறுதல்படுத்தவும்.' என பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

ரஹ்மானின் தாயார் மறைவிற்கு திரைத்துறையினர்,ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கல் செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Banner

"தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம்" - கமல் ஹாசன்

கமல்

பட மூலாதாரம், Getty Images

அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்புக்கு லஞ்சம் கொடுப்பது தொடங்கி தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறப்படுகிறது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். லஞ்சத்தின் 'ரேட் கார்டு' என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பட்டியலை வெளியிட்ட கமல் ஹாசன், பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்களை பெறுவதற்கு பொது மக்கள் லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது என்றார். அதோடு, ஆண்களுக்கும், பெண்களுக்கும் அந்த தொகை வேறுபடுகிறது என்றும் குறிப்பிட்டார்.

பிறப்பு சான்றிதழ் பெற, ஆண் குழந்தைக்கு ரூ.500, பெண் குழந்தைக்கு ரூ.200 தரவேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ''சாதி சான்றிதழ் பெற பெண்களுக்கு 500 ரூபாயும், ஆண்களுக்கு 3,000 ரூபாயும் லஞ்சமாக பெறப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் பெற பெண்களிடம் 1,000 ரூபாயும், ஆண்களிடம் 5,000 ரூபாயும் லஞ்சமாக பெறப்படுகிறது,''என்று தெரிவித்தார் கமல் ஹாசன்.

'ரேட் கார்டு' விலை பற்றி விளக்கமாக பேசிய கமல், ''கடவு சீட்டு பெற, காவல்துறை வீட்டுக்கு வந்து சம்மந்தப்பட்ட நபரை உறுதிப்படுத்த ரூ.500 லஞ்சமாக தரவேண்டியுள்ளது. குடும்பஅட்டை பெற ரூ.1,000,இடப்பதிவு செய்ய ரூ.1,000, பட்ட பரிவர்த்தனை செய்ய பெண்களாக இருந்தால் ரூ,5,000, ஆண்களாக இருந்தால் ரூ,30,000 வரை லஞ்சம் பெறப்படுகிறது. பாதாள சாக்கடை இணைப்பு பெற ரூ.5,000 வரை வசூல் செய்யப்படுகிறது. பரம்பரை வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு ரூ.500 லஞ்சம் பெறப்படுகிறது. ஓய்வூதியம் அல்லது விதவை பென்ஷன் பெற ரூ.500 லஞ்சம் தரவேண்டும். பிண அறைக்கு ரூ.500 கொடுக்கப்படுகிறது. இந்த பட்டியல் பற்றிய விவரம் எல்லோருக்கும் தெரியும்.''

''மக்களுக்கு தேவையான ஆவணங்களை பணம் கொடுக்காமல், பெற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். எங்கள் கட்சியின் முக்கியமான திட்டத்தின்படி, எல்லா வீடுகளிலும் கணினி இருப்பதை உறுதிப்படுத்துவோம். ஒவ்வொரு வீட்டிலும் இணைய தொடர்புடன் கணினி இருக்கும் போது, மக்களுக்கும், அரசுக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க முடியும். எங்கள் ஆட்சியில்,எல்லா வீடுகளுக்கும் கணினி இருக்கும். அதனை அரசு கொடுக்கும். அது இலவசமாக இருக்காது. மக்களின் உரிமையாக இருக்கும்,'' என்று கமல் கூறினார்.

தற்போது லஞ்ச பட்டியல் வெளியிட்டுள்ளது போல விரைவில் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரஜினி குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல் ஹாசன், ''அவர் உடல்நலம் பெறவேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன். அவர் அவருடைய பாணியில் வேலை செய்கிறார். நான் அவருடைய அரசியல் தொடர்பாக பேசமுடியாது. அவர் உடல்நலம் தேறிய பின்னர், அரசியல் பணிகளை தொடர்வார்,''என்று கமல் கூறினார்.

நாங்கள் 3வது அணியாக உருவாகிவிட்டோம். எங்கள் தலைமையில் 3வது அணி இருக்கும் என தான் கருதுகிறோம். கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும். ரஜினியின் உடல்நிலையும் ஆரோக்கியமும் தான் முக்கியம். உடல்நிலை சரியான பிறகு கட்சி துவங்கும் பணியை தொடங்குவார். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பது மக்கள் நீதி மையத்தின் தேர்தல் வாக்குறுதி. மக்கள் நீதி மையமும் திராவிட கட்சி தான். தமிழ் பேசும் அனைவரும் திராவிடர்கள் தான் என்று கமல் தெரிவித்தார்.

Banner

நேபாள விவகாரத்தில் தலையிடும் சீனா; என்ன செய்கிறது இந்தியா?

ஷி மற்றும் ஒலி

பட மூலாதாரம், Getty Images

நேபாள பாராளுமன்றத்தைக் கலைக்க, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பரிந்துரைத்த பிறகு, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மூத்த தலைவரை காத்மாண்டுவுக்கு அனுப்பி உள்ளது.

அதே நேரத்தில், கடந்த ஏழு மாதங்களில், நேபாள அரசியல் தலைவர்களின் பார்வை தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தியா தொடர்ந்து நேபாளத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது எனக் கூறிக் கொண்டிருந்த பிரதமர் சர்மா ஒலி, தற்போது இந்தியாவை விமர்சிப்பதைக் குறைத்திருக்கிறார்.

சர்மா ஒலியின் எதிரணியினர் மற்றும் ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹால், முன்பு இந்தியாவைத் தொடர்ந்து ஆதரித்து வந்தார். இப்போது நேபாளத்தின் அரசியல் விவகாரத்தில் சீனா தலையிடுவதைக் குறித்து எதையும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

மறு பக்கம், இதுநாள் வரை சர்வதேச விவகாரங்களில் பட்டும்படாமல் இருந்த சீனா, தற்போது நேபாளத்தின அரசியல் பிரச்னையில் தலையிடத் தொடங்கி இருக்கிறது. இமாலயப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக இந்தியா மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், தற்போது நேபாள நெருக்கடியை உன்னிப்பாக கவனித்து வருகிறது இந்தியா.

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் "இது நேபாளத்தின் உள்விவகாரம். இது ஜனநாயக ரீதியாக தீர்க்கப்பட வேண்டும்" எனக் கூறியிருக்கிறது.

சூழல் இப்படி இருக்கும் போது, சீனாவின் நேபாள தூதர் ஹூ யான்கி (Hou Yankee), புஷ்ப கமல் தாஹாலையும், நேபாளத்தின் குடியரசுத்தலைவர் பித்யா தேவி பண்டாரியையும் சந்தித்திருக்கிறார். அதன் பிறகு, சீனா தன் வெளிவிவகாரத் துறையின் துணை அமைச்சர் க்யூ யேசுவையும் (Guo Yezhu) நேபாளத்துக்கு அனுப்பி இருக்கிறது. நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சரி செய்ய, சீனா விரும்புவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

க்யூ கடந்த 2018-ம் ஆண்டு நேபாளத்துக்கு வந்தார். கடந்த மே மாதம், இந்தியா மற்றும் சீனாவுக்கிடையில், வரைபடப் பிரச்னை வந்த போது, சர்மா ஒலி, இந்தியாவுடனான தனது உறவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முயன்றார்.

சர்மா ஒலி கட்சியில் தன் பலத்தை இழந்துவிட்டால், அவருக்கான அதிகாரம் குறைந்துவிடும் என்பதை இந்தியா முன்பே எதிர்பார்த்தது தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :