அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: மௌனம் கலைத்து பைடனுக்கு வாழ்த்து சொல்லிய சீனா

(உலக அளவிலும் இந்தியாவிலும் நடக்கும் முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)

பைடன் மற்றும் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், REUTERS/EPA

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என்ற கணிப்புக்குப் பின் பல்வேறு நாட்டின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இத்தனை நாட்களுக்குப் பிறகு சீனா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

"அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்," எனச் சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க - சீன உறவு என்பது உலக நாடுகளுக்கு முக்கியமான ஒன்று.

சமீப நாட்களில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வர்த்தகம், கொரோனா பெருந்தொற்று, உளவு பார்த்தல் என பல்வேறு காரணங்களால் பதற்றங்கள் அதிகரித்திருந்தன.

சீனா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மெளனம் கலைத்திருந்தாலும், ரஷ்யா இதுவரை பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன் டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்னார் ரஷ்ய அதிபர் புதின்.

ஆனால் இந்த முறை, ஒரு தொலைப்பேசி அழைப்போ, ட்விட்டர் பதிவோ அல்லது டெலிகிராமோ என எதுவும் இல்லை.

"தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வந்த பிறகு வாழ்த்து தெரிவிப்பதே சரியாக இருக்கும்," என ரஷ்ய தரப்பில் கூறப்பட்டிருந்தது.

ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம், சீனாவின் தலைவர்கள், குறிப்பாக நாட்டின் அதிகாரமிக்க அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க தேர்தல் முடிவுகளையும், டிரம்பின் தேர்தல் பிரசாரக் குழு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தாலும் ஜனவரியில் பைடன் அதிபராக பதவியேற்று கொள்வதையும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.

அமித் ஷாவின் படத்தை சில நிமிடங்கள் பூட்டிய ட்விட்டர் நிறுவனம்

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தை சில நிமிடங்கள் யாரும் அணுகாத வகையில் ட்விட்டர் நிறுவனம் பூட்டியது. இதனால் அரசுத்துறை அதிகாரிகளும், அவரை அந்த ட்விட்டர் பக்கத்தில் பின்தொடருவோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பக்கத்தில் அமித் ஷாவின் படத்தை கிளிக் செய்தால், இந்த படம் காண்பிப்பதற்கு அல்ல என்றும் காப்புரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து இந்த படம் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், தவறுதலாக அமித் ஷாவின் தற்குறிப்பு படம் வியாழக்கிழமை நீக்கப்பட்டது. காப்புரிமையாளர் எனக் கூறி அமித் ஷாவின் படத்துக்கு உரிமை கொண்டாடப்பட்ட நிலையில் அந்த படம் ட்விட்டர் சர்வதேச காப்புரிமை கொள்கையின்படி நீக்கப்பட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் நிலைமை ஆராயப்பட்டு அந்த பக்கம் இயல்புநிலையில் தோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினார்.

ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷாவை 23.6 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ட்விட்டர் நிறுவனம் அதன் ஜியோ டேக்கிங் வசதியின்கீழ், லடாக் யூனியன் பிரதேசத்தின் கீழ் இருக்க வேண்டிய லே பகுதியை ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் இருப்பதாக காட்டிய விவகாரத்தில், இந்திய இறையாண்மையை பாதிக்கும் வகையில் அமைந்த செயல்பாடுக்காக ஏன் ட்விட்டர் நிறுவனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு இந்திய மின்னணு தொழில்நுட்பத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு ட்விட்டர் நிறுவனம் பதில் தெரிவிக்க அவகாசம் கோரி கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில், அமித் ஷாவின் படம், அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சில நிமிடங்கள் மறைக்கப்பட்டு பூட்டப்பட்டு திடீரென மீண்டும் வெளியிட்ட ட்விட்டர் நிறுவன செயல்பாடு சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: