குஷ்புவின் பாஜக வருகை - முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார், மதன் ரவிச்சந்திரன் இணைந்த பின்னணி என்ன?

பட மூலாதாரம், BJP
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு அக்டோபர் 12 (திங்கட்கிழமை) டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் உடன் இருந்தார்.
இதையொட்டி பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் நடந்த நிகழ்வில் குஷ்பு மட்டுமின்றி முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோரும் கட்சியில் இணைந்தனர்.
மாற்றம் என்பது நிலையானது, இப்போது எனது புரிதல் மாறியுள்ளது என்று காங்கிரஸில் இருந்து பாஜகவில் சேர்ந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியில் தமக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்றவேன் என்று உறுதி அளிப்பதாகவும் அக்கட்சியில் சேர்ந்த பின்னர் குஷ்பு கூறினார்.
பிரதமர் நரேந்திர மோதி போன்ற ஒரு தலைவர் தேவை எனும் புரிதலுக்கு நான் வந்துள்ளேன், இந்தியாவில் பல கோடி பேர், பிரதமர் நரேந்திர மோதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜகவில் உள்ள தொண்டர்களை போலவே நானும் கட்சிக்காக பாடுபடுவேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சி தமக்கான தலைமையையே கண்டுபிடிக்க முடியாத சூழலில் எப்படி நாட்டைக் காக்க முடியும் என்று காங்கிரஸை விமர்சித்தார் குஷ்பு.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பாஜகவை கடுமையாக விமர்சித்தது குறித்து பேசிய அவர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அவ்வாறு விமர்சிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்று குறிப்பிட்டார்.
ஒரு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தபோது கட்சியின் நிலைப்பாடு குறித்து, தனது தனிப்பட்ட நிலைப்பாட்டை மீறி பேச வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்காக அக்கட்சித் தலைமை அலுவலகத்துக்கு தனது கணவர் சுந்தர். சியுடன் குஷ்பு வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்த குஷ்பு, அதற்கு முன்னர், நான்கு ஆண்டுகள் திமுகவில் இருந்தார். அந்த வகையில் குஷ்பு சேரும் மூன்றாவது அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி.
கடந்த ஆறு மாத காலத்தில் பெண்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். நரேந்திர மோதி ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று இந்த நிகழ்வின் போது தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன் தெரிவித்தார்.
குஷ்பு, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி இணைப்பு: பின்னணி என்ன?
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு முன்பாக, கடந்த 7ஆம் தேதிவரை, தான் வேறு கட்சியில் இணைவது குறித்து வெளிவரும் செய்திகள் வெறும் வதந்தியே என்று தொடர்ந்து கூறி வந்தார்.
கடந்த 6-ஆம் தேதி டிவிட்டரில் இது தொடர்பாக பரவிய தகவலை மறுத்த குஷ்பு, ஒரு ட்வீட்டுக்கு ரூ. 2 வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2
அதற்கு முன்தினம், ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவில் இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நடத்திய நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை பெரம்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆளில்லா டீ கடையில் டீ ஆற்றுபவர் மோதி. தைரியம் இருந்தால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போல மக்களை தெருவில் இறங்கி காப்பாற்றச் சொல்லுங்கள் என்று பேசினார். மயிலுக்கு உணவளிக்கும் பிரதமரால் நாட்டு மக்களுக்கு உணவளிக்கச் சொல்லுங்கள் என்றும் குஷ்பு பேசினார். அங்கு தடையை மீறி பேசியதாக குஷ்பு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
அன்றைய தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு, காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரது டிவிட்டர் பதிவுகளையும் குஷ்பு ரீ-ட்வீட் செய்து தான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பதாக காட்டிக்கொண்டார்.
முன்னதாக, டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்து சென்ற குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் மேலிட தலைவர் கே.சி. வேணுகோபால் மற்றும் சிலரை சந்திக்க வந்ததாக தெரிவித்தார். 9 மாதங்களுக்கு பிறகு டெல்லிக்கு வந்து போகும் தமது பயண அனுபவத்தை அவர் தமது டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
பிறகு அக்டோபர் 8ஆம் தேதி சென்னை திரும்பும்போது தமது படத்தை குஷ்பு டிவிட்டரில் பகிரந்து கொண்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
அன்றைய தினம் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவுச் செய்தி தொடர்பான அரசியல் ரீதியிலான டிவிட்டர் பதிவை மட்டுமே குஷ்பு பகிர்ந்தார்.
இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி என்னுள் பலரும் மாற்றத்தை காண்கிறார்கள். வயது ஏற, ஏற நீங்களும் வளருவீர்கள், படிப்பீர்கள். தெரியாததை அறிவீர்கள். பார்வைகள் மாறும். விருப்பமும் விருப்பமற்றதும் மாறும். சிந்தனைகளும், யோசனைகளும் புதிய வடிவம் பெறும், கனவுகள் புதியனவாகவும், விருப்பத்துக்கும் நேசத்துக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்வீர்கள், சரி எது, தவறு எது என்பதை புரிந்து கொள்வீர்கள். மாற்றம் என்பது மாற்றமில்லாதது என்று குஷ்பு டிவீட் செய்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
இந்த பதிவுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் திருப்பதி நாராயணன், "புரிந்தது" என்று டீவிட் செய்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
இருவரும் பூடகமாக பகிர்ந்து கொண்ட இந்த ட்வீட்களுக்கான விடை, அக்டோபர் 11ஆம் தேதி மாலையில் குஷ்பு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்ல விமான நிலையம் வந்தபோது ஓரளவுக்கு அனைவருக்கும் புரிந்தது.
அது குஷ்புவின் புதிய அரசியல் பிரவேசம் ஆகத்தான் இருக்கும் என பலரும் ஊகித்தார்கள்.
இந்த நிலையில், அக்டோபர் 12ஆம் தேதி காலையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் இருந்து செய்தியாளர்களுக்கு வந்த அழைப்பில், தமிழகத்தைச் சேர்ந்த மூக்கிய பிரமுகர்கள் மூன்று பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவிருக்கின்றனர் என்ற செய்தி வந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவின் பெயர் நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டது. அது வெளியான அடுத்த சில நிமிடங்களில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தை குஷ்பு வெளியிட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் அதன் தலைவர் ஜே.பி. நட்டாவை மாநில தலைவர் எல். முருகனுடன் சந்தித்த குஷ்பு, முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்.
இந்தப் பின்னணியில், நடிகை குஷ்புவின் பாஜக இணைப்புக்கு அவரை விட அவரது கணவர் சுந்தர். சி. மிகுந்த அக்கறை கொண்டவராகவே காணப்பட்டார். குஷ்பு எங்கு யாரை சந்திக்க வேண்டும், யாருடன் பேச வேண்டும், அடுத்து எங்கு செல்ல வேண்டும் என அவருக்கு தொடர்ந்து சிக்னல் கொடுத்தவாறே சுந்தர். சி காணப்பட்டார்.

பட மூலாதாரம், BJP
பாஜக மாநில தலைவர் எல். முருகன், குஷ்புவுடன் பேசியதை விட, சுந்தர். சி மூலமாகவே அவரிடம் அதிகம் பேசியதும் இன்றைய சந்திப்புகளின்போது பார்க்க முடிந்தது. சுந்தர். சியுடன் சில திரைப்பிரபலங்கள், தயாரிப்புக்குழு நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
சுந்தர். சியின் புதிய நட்பு
இது குறித்து விசாரித்தபோது, சமீப காலமாக திரைத்துறையில் சுந்திர் .சி எதிர்கொண்டு வரும் அதிக கடன் சுமைக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியில் குஷ்புவுக்கு போதிய அங்கீகாரம் கொடுக்கப்படாத நிலையில், தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் மாநில தலைவர் முருகனுடன் ஏற்பட்ட புதிய நட்பின் விளைவாக, தற்போது தனது மனைவி குஷ்புவை பாஜகவில் இணைய சுந்தர். சி அதிக முயற்சி எடுத்தததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இது குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய குஷ்புவிடம் கேட்டபோது, தனது கணவருக்கும் தமது பாஜக இணைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தார்.
மொத்தத்தில் குஷ்புவின் பாஜக வருகை, அக்கட்சிக்கு பிரசார முழக்கமாக அவர் இனி செயல்படுவார் என்பதை உணர்த்தும் விதமாக, அவருக்கு கட்சியில் விரைவில் பொறுப்பு வழங்கப்படும் என்று டெல்லியில் உள்ள பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் யார்?
பாரதிய ஜனதா கட்சியில் அக்டோபர் 12ஆம் தேதி இணைந்த குஷ்புவுடன் இணைந்த மேலும் இருவரில் ஒருவர் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி சரவணகுமார். இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர். இந்திய வருவாய் பணி அதிகாரியாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், 2017இல் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து மத்திய அரசு பணியில் இருந்து விலகினார்.

பட மூலாதாரம், BJP
வழக்கறிஞரான இவர் வருமான வரித்துறை, நிதி விவகாரங்கள் தொடர்புடைய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். பிரபல கார்பரேட் நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் இருக்கிறார். இவரது அத்தை தென் சென்னை தொகுதி திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன். இருப்பினும், திமுக அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் தொடர்புகளை வைத்திருக்கும் சரவணகுமார், டி.டி.வி. தினகரன் கட்சியில் செய்தித்தொடர்பாளராக சுமார் ஓராண்டு வரை இருந்தார். பிறகு அவரது கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறார். தனியாக ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். நிதி, சட்டம், வருமான வரித்துறை, பொருளாதாரம் போன்ற விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சியின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூற இவரது சேவையை அக்கட்சி பெறும் என்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல, பாஜகவில் இன்று சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் சமூக ஊடகங்களில் பிரபலமானவராக கருதப்படுகிறார். ஆரம்பத்தில் இரு தனியார் தொலைக்காட்சிகளில் நேர்காணல் நிகழ்ச்சிகளை வழங்கி வந்த அவர், சர்ச்சைக்குரிய வகையில் கேட்கும் கேள்விகள் விருந்தினர்களை அசெளகர்யத்தில் ஆழ்த்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. பிறகு, இவரே தனியாக ஒரு யூட்யூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் பல கருத்துகளையும் விவாத தலைப்புகளையும் விவரித்து சமூக ஊடக பயனர்களை ஈர்த்து வருவதை வழக்கமாகக் கொண்டவர். பாஜகவுக்கு ஆதரவானதாக பார்க்கப்பட்ட இவரது செயல்பாடும் கருத்துகளும் தற்போது இவரை அக்கட்சியிலேயே இணைத்துக் கொள்ள தூண்டியிருக்கிறது.
குஷ்பு, சரவணகுமார், மதன் ரவிச்சந்திரன் போலவே அடுத்து வரும் வாரங்களிலும் மேலும் சில மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஊடக பிரபலங்கள் பாஜகவில் இணைய வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: