'செல்ஃபோன் பயன்படுத்த கட்டுப்பாடு': 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டியில் செல்ஃபோன் பயன்படுத்த பெற்றோர் கட்டுப்பாடுகள் விதித்ததால் 13 வயதாகும் மாணவி இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் கட்டட தொழிலாளி வேலுமணி என்பவரின் மகள் ஹேமாமாலினி. இவர் பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாத நிலையில் படிப்பதற்காக பெற்றோர்கள் இவருக்கு செல்ஃபோன் கொடுத்துள்ளனர். செல்ஃபோனில் சினிமா பாடல்களை கேட்பதற்கும், வீடியோக்கள் பார்ப்பதற்கும் அதிக நேரம் செலவிட்டதால் பெற்றோர்கள் ஹேமாமாலினியை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் ஹேமாமாலினி வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

அருகில் வசிப்பவர்கள் ஹேமாமாலினியின் தந்தைக்கு தகவல் கொடுக்க, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்கையில் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆன்லைன் வகுப்புக்காக புதிய செல்ஃபோன் வாங்கித்தருமாறு ஹேமாமாலினி தொடர்ந்து கேட்டுவந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது," என்று தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: