இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி 'எப்போது கிடைக்கும் எனக் கூறுவது கடினம்'

பட மூலாதாரம், SOPA Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் இரண்டு தடுப்பூசிகள் சிறந்த பாதுகாப்புத்தன்மையை கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது என்கிறது தினத்தந்தி செய்தி.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி சவுபே நேற்று அளித்த பதிலை அந்நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரித்தெடுத்த வைரசை பயன்படுத்தி, பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை (கோவேக்சின்) உருவாக்கி உள்ளது.
இந்த தடுப்பூசியை சுண்டெலிகள், எலிகள், முயல்கள், கினி பன்றிகள் ஆகிய சிறிய விலங்குகளுக்கு செலுத்தி அதன் பாதுகாப்பு மற்றும் சகித்துக்கொள்ளும் தன்மை ஆராயப்பட்டன. மேலும், முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் (மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்தல்) மற்றும் பெரிய விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த சோதனைகளில் அந்த தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை வெளிப்படுத்தி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
இது தவிர, கேடிலா ஹெல்த்கேர் நிறுவனம் ஒரு டி.என்.ஏ. தடுப்பூசியை (ஜைகோவ்-டி) உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியையும் சுண்டெலிகள், எலிகள், முயல்கள், கினி பன்றிகளுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறனைக் கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. பெரிய விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்க கேடிலா நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு சிக்கலான பாதைகளை கருத்தில் கொண்டு, சரியான காலக்கெடுவை நிர்ணயித்து கூறுவது கடினம்.
பிரேமாஸ் பயோடெக், ஜென்னோவா, மைன்வேக்ஸ், எபிஜென் பயோடெக், லக்ஸ்மேத்ரா இன்னோவேஷன்ஸ், பயோலஜிக்கல் ஈவன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றின் தடுப்பூசிகள் யாவும் ஆய்வுக்கூட பரிசோதனை வளர்ச்சிக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன.


உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை தகவல்கள்படி 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முயற்சிகள் ஆதரிக்கப்பட்டு வருகின்றன. மூன்று தடுப்பூசிகள் முதல், இரண்டாவது, மூன்றாவது கட்டங்களின் மேம்பட்ட நிலையில் உள்ளன. நான்கு தடுப்பூசிகள், ஆய்வுக்கூட பரிசோதனை வளர்ச்சிக்கு முந்தைய மேம்பட்ட நிலையில் இருக்கின்றன.
தினமணி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு - மத்திய அரசிடம் நிதியில்லை
மாநிலங்களுக்கு சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் இழப்பீடு வழங்குவதற்கு மத்திய அரசிடம் போதிய நிதியில்லை என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்கூர் கூறினாா் என்கிறது தினமணி செய்தி.
மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு அனுராக் சிங் தாக்கூர் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதில்:
நிகழ் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ரூ.97,000 கோடி இழப்பும், பொதுமுடக்கம் காரணமாக ரூ.1.38 லட்சம் கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதில், ரூ.97,000 கோடியை ரிசா்வ் வங்கியிடம் இருந்து மாநிலங்கள் கடனாகப் பெறலாம் அல்லது ரூ.2.35 லட்சம் கோடியை வெளிச்சந்தையில் இருந்து கடனாகப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடன் பெறுவது குறித்து மாநிலங்கள் விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், மத்திய அரசின் யோசனைக்கு சில மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக மொத்தம் ரூ.1,51,365 கோடி வழங்க வேண்டியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரை வசூலான ஜிஎஸ்டி வருவாய், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை; அதுமட்டுமன்றி, வசூலான தொகையில் ஒரு பகுதி, மாா்ச் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்று அனுராக் சிங் தாக்கூர் கூறினாா்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - காஷ்மீர் வரைபடத்தால் வெளிநடப்பு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில், காஷ்மீரை தங்கள் நாட்டின் பிராந்தியமாக காட்டும் வரைபடத்தை பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காட்டியதால், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட முதலாம் ஆண்டு தினமான சென்ற ஆகஸ்டு 5ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீரை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இணைத்து பாகிஸ்தான் புதிய வரைபடத்தை வெளியிட்டிருந்தது. அதில் அப்பிராந்தியம் 'சர்ச்சைக்குரிய பகுதி' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
- ரஷ்யாவுக்கு விரைவில் திரும்புகிறார் நவால்னி - அதிபர் புதினை சந்திக்க திட்டமா?
- "கிழக்கு லடாக் எல்ஏசி மோதலில் சீன ராணுவத்துக்கு பலத்த சேதம்" - ராஜ்நாத் சிங்
- இலங்கை: திலீபனுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட சிவாஜிலிங்கம் கைது
- சசிகலா எப்போது விடுதலையாவார்? சிறை தண்டனை நாட்கள் எவ்வாறு கணக்கிடப்படும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












