You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவேக்சின்: இந்திய கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையில் முன்னேற்றம் - பாரத் பயோடெக்
விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ஆக்ஸ்போர்டு தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியின் மனித சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் அதன் மனித சோதனைகளின் முக்கியமான இரண்டாம் கட்டத்தில் நுழைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 23-ஆம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது.
இதற்காக தமிழகத்தில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி உள்பட இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்களை கடந்து நலமுடன் இருப்பதால், இரண்டாம் கட்ட சோதனைக்கு செல்ல தகுதி பெற்றுள்ளது கோவாக்சின் மருந்து. முதல் கட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உடலில் கோவாக்சின் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்டத்தில் வயது வரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 12 வயதுடைய இளம் பருவத்தினர் முதல் 65 வயது முதியவர்கள் வரை சோதனையில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.
இப்படியான சூழலில் தடுப்பு மருந்து தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சினை கொண்டு விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் வெற்றிகரமாக இருப்பதாக நேற்று (செப்டம்பர் 11) அறிவித்து உள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட விலங்குகளில் பாதகமான விளைவுகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த தடுப்பு மருந்து SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான, இம்யூனோகுளோபின் - ஜி எனப்படும் நோய் எதிர்ப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் கிருமிகளை செயலிழக்க வைத்துள்ளது. மூச்சுக்குழாய், தொண்டை மற்றும் நுரையீரல் திசுக்களில் வைரஸ் கிருமி பெருகுவதையும் இது தடுத்துள்ளது.
தடுப்பு மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு நிமோனியா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: