காங்கிரஸ் தலைமை: விரைவில் புதிய தலைவர் - சோனியா, ராகுல் காந்தியின் எதிர்காலம் என்னவாகும்?

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

பட மூலாதாரம், Getty Images

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சித்தலைமை மாற்றம் தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலைப்படி, சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடருவார் என்று அக்கட்சியின் காரிய கமிட்டி தீர்மானித்துள்ளது.

இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவுரையாற்றிய சோனியா காந்தி, கட்சித்தலைமை தொடர்பாக சில தலைவர்கள் அனுப்பிய கடிதம், பொதுவெளியில் கசிந்த நிகழ்வு, தம்மை காயப்படுத்தியதாக தெரிவித்தார்.

மேலும், கட்சியில் இதுவரை நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். இனி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

உள்கட்சி விவகாரங்களை ஊடகங்களில் விவாதிக்காமல் கட்சிக்குள் மட்டுமே விவாதித்து ஒழுங்கை கடைப்பிடிக்கவும் காரிய கமிட்டி வலியுறுத்தியது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்வு செய்யும் என்றும் அதுவரை கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டதாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் பி.எல். பூனியா தெரிவித்தார்.

மேலும், புதிய தலைவர் தேர்வாகும்வரை கட்சியில் தேவைப்படும் அமைப்பு ரீதியிலான மாற்றம் செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு கட்சியின் காரிய கமிட்டி வழங்கியிருப்பதாகவும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜீவாலா தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமை மாற்றம் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர்கள் மற்றும் ராகுல் தலைமையை ஆதரிப்பவர்கள் என இரு தரப்பினர் இடையே நிலவிய கருத்து மோதல்களால் அந்த முடிவு எடுக்கப்படாமல் பழையபடியே தலைமை தேர்வு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

கட்சியின் அகில இந்திய இடைக்கால தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று கூட்டத்தில் சோனியா காந்தி பேசியபோதும், மற்ற தலைவர்களின் வற்புறுத்தல் காரணமாக, அவரே இடைக்கால தலைவராக தொடர்ந்து நீடிக்க கடைசியில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எனவே, சோனியா எதிர்காலத்தில் கட்சித் தலைமை பதவியில் இருந்து விலகுவது உறுதியானாலும், ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவாரா அல்லது சோனியா, ராகுல் குடும்பத்தில் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்த நிலையில், அதில் உறுப்பினர்கள் அல்லாத கபில் சிபல் போன்ற மூத்த தலைவர்கள், டிவிட்டர் பக்கம் வாயிலாக பதிவிட்ட கருத்துகள் சர்ச்சையாயின.

சோனியா காந்தி

பட மூலாதாரம், Getty Images

மேலும், காணொளிய வாயிலாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற குலாம் நபி ஆஸாத்தும் தான் பேசாத விவரங்கள் பொது வெளியில் பகிரப்பட்டதாக கூறினார். இதனால் தலைமை மாற்றம் தொடர்பாக கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையை விரும்பிய தலைவர்கள் பரஸ்பரம் டிவிட்டர் வாயிலாக கருத்துகளை பகிர்ந்து கொண்ட விவகாரம் சர்ச்சையானது.

அதில் 10 முக்கிய நடவடிக்கைகளை பார்க்கலாம்.

1. காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர் தேவை என்பதை வலியுறுத்தி கட்சியின் குலாம் நபி ஆஸாத், சஷி தரூர், கபில் சிபல், பூபிந்தர் ஹூடா, மிலிந்த் தியோரா உள்ளிட்ட 23 முன்னணி தலைவர்கள் அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். அது தொடர்பான தகவல்கள், ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளன.

2. இந்த நிலையில், இன்று நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில், கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக அவர் விருப்பம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித்தலைமை தொடர்பான விவகாரத்தை விவாதிக்க வேண்டியது காங்கிரஸ் காரிய கமிட்டியே தவிர ஊடகங்கள் அல்ல என்று கண்டிப்புடன் பேசியதாக கூறப்படுகிறது.

3. மேலும், பாஜகவுடன் சேர்ந்து கொண்டே சிலர் கடிதம் எழுதியிருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்கள் ஊடகங்களில் ஒளிபரப்பாகின.

4. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவரும் கடிதம் எழுதியவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆஸாத், நான் பாஜகவுடன் சேர்ந்து செயல்பட்டதை நிரூபித்தால் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யத்தயார் என்று அறிவித்ததாக தகவல்கள் வெளியாயின.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2

X பதிவின் முடிவு, 2

இது குறித்து இன்று மாலை தமது டிவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்திய குலாம் நபி ஆஸாத், நேற்று காரிய கமிட்டியில் அல்லாத காங்கிரஸ் நபர், பாஜக ஆசியுடன் நாங்கள் கடிதம் எழுதியதாக கூறியிருக்கிறார். அத்தகைய நபர்கள் அந்த கருத்தை நிரூபித்தால் நான் பதவி விலக தயார் என்றுதான் கூறினேனே தவிர இன்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி அப்படி பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

5. இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், தமது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஒருமுறை கூட பாஜகவுக்கு ஆதரவாக பேசியதில்லை என்றும் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் கூட பாஜகவுக்கு எதிராக வாதிட்டு வெற்றி பெற்றோம் என்று தமது அதிருப்தியை பதிவு செய்தார்.

6. அவரது டிவிட்டர் பதிவுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான மாணிக்கம் தாகூர் அளித்த பதிலில், "காரிய கமிட்டி குழுவில் நீங்கள் இல்லாதபோது, அதில் விவாதிக்கப்பட்டதாக கசிந்த போலியான தகவல்களுக்கு நீங்கள் பதில் அளிக்கிறீர்கள். மூத்த தலைவரான உங்களுக்கு இது அழகல்ல. உங்களை காங்கிரஸ் கட்சி கேபினட் அமைச்சராக்கி முக்கியத்ததுவம் கொடுத்ததை மறக்க வேண்டாம்" என்று கூறியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

7. இந்த நிலையில், ராகுல் காந்தி தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவ்வாறு காரிய கமிட்டி கூட்டத்தில் கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாக பேசவில்லை என்று தெளிவுபடுத்தியதை அடுத்து, தமது டிவிட்டர் பதிவை நீக்கி விட்டதாக மற்றொரு பதவில் குறிப்பிட்டார் கபில் சிபல்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

8. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர உடல்நலன் அனுமதிக்காமல் போனால், அந்த பதவியை ராகுல் காந்தியே வகிக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா சோனியா காந்திக்கு கடிதம் எழுனார்.

சித்தராமையா கடிதம்

9. இதேபோல, காங்கிரஸ் பதவியில் சோனியா காந்தி தொடர வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் சோனியாவின் அரசியல் ஆலோசகருமாக இருந்த அகமது படேல் வலியுறுத்தினார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

10. இந்த விவகாரத்தில், சரிபார்க்கப்படாத ஊடக தகவல்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ரந்தீப் சிங் சூர்ஜிவாலாவும் தமது டிவிட்டர் பக்கம் மூலம் கேட்டுக் கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: