கொரோனா தடுப்பு நடவடிக்கை: "பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்க, ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை"

பட மூலாதாரம், Getty Images
கொரோனா பரவலின் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலையை நிறுவுவதோ, சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலையில் கரைப்பதோ கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலையை நிறுவுவதையோ, சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதையோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதையோ, அச்சிலைகளை நீர்நிலையில் கரைப்பதையோ ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
அதன்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பண்டிகையைக் கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமென்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்றும் மாநில அரசு கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








